ஏனையவை
பொன்னியின் செல்வன் நட்சத்திரங்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?


பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நட்சத்திரங்களுக்கு சம்பளம் எவ்வளவு என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.
விக்ரமுக்கு என்றும் அவருக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் மீண்டும் ரீ எண்ட்ரி ஆகியுள்ள நந்தினி கேரக்டரில் நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு ரூ.10 கோடி சம்பளம் என தெரிகிறது.
த்ரிஷாவுக்கு ரூ.2 கோடி சம்பளம் என்றும் ராஜராஜசோழன் கேரக்டரில் நடித்த ஜெயம் ரவிக்கு ரூ.8 கோடி சம்பளம் என்றும் கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன் கதையின் உண்மையான நாயகனான வந்தியத்தேவன் கேரக்டரில் நடித்த நடிகர் கார்த்தி 5 கோடி சம்பளம் பெற்றாதாக கூறப்படுகிறது.
பிரகாஷ்ராஜுக்கு ஒரு கோடி என்றும் பூங்குழலி கேரக்டரில் நடித்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு ரூ.1.5 கோடிஎன்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்த சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம் ஆகியோர்களுக்கும் மிகப்பெரிய சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.