ஏனையவை
லோகேஷ் கனகராஜிற்கு தன்னுடைய ஸ்டைலில் வாழ்த்துக்களை அள்ளித் தெளித்த சூப்பர் ஸ்டார்!!
தமிழ் சினிமாவில் தற்போது பல வெற்றி படங்களை கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் மூலம் உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
மாநகரம் முதல் கைதி, மாஸ்டர் என தொடர்ந்தும் பல வெற்றி படங்களை கொடுத்து கொண்டே வருகிறார்.
இவரது வளரச்சியை பார்த்து பல சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படத்தை பார்த்துவிட்டு உடனே ஃபோன் செய்து வாழ்த்து கூறியுள்ளார் என தெரிவித்துள்ளார்.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அனைத்து படங்களை பார்த்த உடனே தனது கருத்துக்களை கூறி சூப்பர் கண்ணா, லவ் யூ கண்ணா என ரஜினிக்கு உண்டான ஸ்டைலில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் சூப்பர் ஸ்டாருக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்..
You must be logged in to post a comment Login