ஏனையவை
எம்.பிகளுக்கு சலுகை விலையில் எரிபொருள்?


நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகை விலையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்று வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு, நாரஹேன்பிட்டியிலுள்ள பொலிஸ் போக்குவரத்து பிரிவிலுள்ள எரிபொருள் நிலையம் ஊடாக, எரிபொருளை வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு, சபாநாயகர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்நிலையில் அங்கு சலுகை விலையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக தகவல் வெளியானது.
இந்நிலையிலேயே அமைச்சர் இந்த தகவலை நிராகரித்தார். சந்தை விலையிலேயே எரிபொருள் விநியோகிக்கப்படும். இதில் எவ்வித சலுகையும் வழங்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.