மருத்துவம்
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு பயனா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு பயனா?
நாம் உணவு சமைக்கும் போது பலசுவைக்காக உணவுப் பொருட்களை சேர்க்கின்றோம். அவை ஒவ்வொன்றும் நமக்கு பல நன்மைகளை அள்ளி தருகின்றது.
அந்த வகையில் நாளும் தவறாமல் உணவில் பூண்டு சேர்ப்பதை எல்லோரும் வழக்கமாக வைத்துள்ளோம். இந்த பூண்டு சேர்ப்பதால் பல ஆரோக்கிய நன்மைகளை தருகின்றது.
அது என்னென்ன நன்மைகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1. பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் அதிலுள்ள அல்லிசின் என்ற பதார்த்தம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக வைத்திருக்கும்.
சளி காய்ச்சல் இருமல் போன்ற நோய் தொற்றுக்கள் அருகில் நெருங்காமல் இந்த பூண்டு பார்த்து கொள்கிறது. பூண்டில் இயற்கையாகவே ‘HDL’ கொழுப்பின் அளவு அதிகரிக்கும் பண்பு உள்ளது.
இதனால் ‘LDL’ எனும் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க இது உதவும். இதனால் இதய நோய் ஏற்படாமல் பாதுகாத்து கொள்ளலாம்.
சக்கரை அளவை குறைவாக வைத்திருக்க இந்த பூண்டு ஒரு சிறந்த பொருளாகும். நமது உடலில் தேவையில்லாத செல்கள் வளர்ச்சியடைவதை இந்த பூண்டு தடுக்கும்.
வயிற்றில் ஏற்படும் உப்புசம் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் வருவதை தவிர்க்கும். பூண்டு தோல் நமது முடியின் ஆரோக்கியத்தை பேண மிகவும் சிறந்தது.
ஆனால் இந்த பூண்டை அதிகமாக சாப்பிட கூடாது இதற்கான காரணம் வயிற்று எரிச்சல், வாய்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே பூண்டை அளவாக எடுத்து கொள்வதால் அது மிகவும் பலன் தரும்.