மருத்துவம்
கர்ப்பிணிகள் வெண்டைக்காய் சாப்பிடலாமா ?


கர்ப்ப காலத்தில் உணவு விஷயத்தில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம்.
காரணம், தாய் மற்றும் கருவில் வளரும் குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்க ஆரோக்கியமான உணவை உண்பது மிகவும் அவசியம்.
அதிலும் சில கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பக்காலத்தில் வெண்டைக்காய் எடுத்து கொள்ளலாமா என்ற சந்தேகம் காணப்படும்.
உண்மையில் வெண்டைக்காயில் பல ஊட்டச்சத்துகள் இருப்பதால் தயக்கமின்றி சாப்பிடலாம். தற்போது அதனை எடுத்து கொள்வதன் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
எப்படி உதவுகின்றது?
வெண்டைக்காயில் நிறைவான நார்ச்சத்து காரணமாக இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. இதனால் கர்ப்பகாலத்தில் வரக்கூடிய நீரிழிவு நோய் அபாயத்தையும் தவிர்க்க முடியும்.
வெண்டைக்காயில் உள்ல ஃபோலேட்டின் நல்ல மூலமாகும். இந்த ஃபோலேட் டிஎன்ஏ மற்றும் இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. எனவே வெண்டைக்காய் உட்கொள்வதால் குறைபாடுகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கிறது.
வெண்டைக்காய் வைட்டமின்களின் சுரங்கம். இதில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ உள்ளது. இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. வைட்டமின் சி இரும்பை உறிஞ்சி குழந்தை வளர உதவுகிறது.