மருத்துவம்
கிரீன் டீயை தொடர்ந்து குடிப்பது நன்மையை தருமா?
பொதுவாக இன்றைய காலத்தில் எடையை குறைப்பதற்காக அதிகமாக மக்கள் கிரீன் டீயை பயன்படுத்துகிறார்கள்.
இந்த கிரீன் டீயில் வைட்டமின் பி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தவும், நமது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.
இதனை தினமும் தொடர்ந்து குடிப்பது உடலுக்கு நன்மையை தருகின்றது. அந்தவகையில் தற்போது அவை என்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.
- கிரீன் டீயானது உடல் எடையை குறைக்கவும், சரியான அளவிலான உடல் எடையை பராமரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது.
- மூச்சு சம்மந்தமான பிரச்சனைகளும் கிரீன் டீயால் சரியாகின்றன.
- நரம்பு சம்பந்தமான நோய்களை தடுப்பதுடன், இதயம் சம்மந்தமான் நோய்கள் வராமலும் பாதுக்காக்கிறது.
- கிரீன் டீயைத் தினமும் இரு வேளைகள் பருகிவருவதால் பல் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பலம் கிடைக்கும்.
- உடல் எடையைக் குறைப்பதில் கிரீன் டீ முக்கியப் பங்காற்றுகிறது. கிரீன் டீ பருகுவதால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்புகள் கரையும்.
- கிரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். பெருங்குடல் பகுதியில் வரும் புற்றுநோயைத் தடுக்கும்.
- கிரீன் டீ, சருமப் பராமரிப்புக்குக் காரணமான மெலனின் உற்பத்தியைத் தூண்டி சருமத்தை பாதுகாக்கிறது.
- கிரீன் டீ ரத்தத்தில் குளுக்கோஸ் கலக்கும் வேகத்தை கட்டுப்படுத்தும்.
#greentea #cancer #weightloss
You must be logged in to post a comment Login