மருத்துவம்
தினமும் ஒரு வேகவைத்த முட்டை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை. நிறையப் பேருக்குப் பிடித்த உணவும்கூட. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன.
அதிலும் வேகவைத்த முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் பல்வேறு மாற்றங்கள் நடக்கும்.
அந்தவகையில் தினமும் ஒரு வேக வைத்த முட்டை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
- நமது உடலில் மிகப்பெரிய பகுதியானது கல்லீரல். கல்லீரலில் அதிகமாக நச்சுத்தன்மை சேர்ந்துவிடும். இந்த நச்சுத்தன்மை சேருவதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட கூடும். இதை தவிர்க்க காலையில் வெறும் வயிற்றில் இருக்கும்போது வேக வைத்த முட்டையை 1 வாரத்திற்கு சாப்பிடுங்க.
- தம்பதியினர்கள் காலையில் வெறும் வயிற்றில் வேகவைத்த முட்டையை சாப்பிட்டு வந்தால் ஹார்மோன்கள் பி9 அதிகரித்துவிடும். இதனால் குழந்தையின்மை விரைவில் நீங்கிவிடும்.
- வேகவைத்த முட்டையை தினமும் நாம் எடுத்துக்கொண்டால் புற்றுநோயை தடுக்கக்கூடிய செல்கள் நமது உடலில் அதிகமாக உருவாகிறது. பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை தடுக்கும்.
- படிக்கும் மாணவர்களுக்கு வேகவைத்த முட்டை கொடுப்பதால் ஞாபக சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- நம் உடல் இரத்தத்தில் அதிகமாக சேர்ந்து இருக்கும் தேவையில்லாத கொலெஸ்ட்ரால்களை குறைக்க வேண்டுமென்றால் வேகவைத்த முட்டையை தினமும் எடுத்து வந்தால் நமது உடல் நல்ல மாற்றம் கிடைக்கும்.
#LifeStyle
You must be logged in to post a comment Login