மருத்துவம்
ஒரு கப் பீட்ரூட் சாறு – அளவற்ற அற்புதங்கள்
ஒரு கப் பீட்ரூட் சாறு – அளவற்ற அற்புதங்கள்
மூளையின் செயற்பாட்டை மேம்படுத்த தினமும் ஒரு கப் பீற்றூட் சாறு அருந்தி வாருங்கள். அளவற்ற அற்புதங்கள் உண்டாவதை நீங்களே உணர்வீர்கள்.
பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து எம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக்கி ஆற்றல் சக்தியை அதிகரிக்கிறது.
பீட்ரூட் சாறு இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதுடன் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு குறைக்கின்றது.
மலச்சிக்கலால் துன்பப்படுவோர் மற்றும் மூலக் கோளாறுகளால் அவதிப்படுவோர் பீட்ரூட் சாறை இரவு படுக்கைக்கு முன் அருந்தி வந்தால் நீங்கும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதையும் தடுக்கலாம்.
தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றுக்கு பீட்ரூட் சாறு சிறந்த நிவாரணி.
பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோயைத் தடுக்கும். இதற்கு பீட்ருட்டில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு பொருள் புற்றுநோய் செல்லை அழிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டள்ளது.
உடலில் இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் இரத்தச்சோகை நோய் பீட்ரூட்டில் உள்ள குணநலன்கள் தடுக்கிறது. உடல் சோர்வு, கவனமின்மை, எதிலும் ஆர்வமின்மை போன்றவற்றையும் பீற்றூட்சாறு தடுக்கின்றது. பீட்ரூட் சாற்றை அன்றாடம் எடுத்துக்கொள்ளும்போது இரத்தசோகையிலிருந்து மிக விரைவாக குணமடையலாம்.
செரிமானப் பிரச்சினைகளுக்கு பீட்ரூட் சாறு சிறந்த நிவாரணி. உணவு உண்ணும்போது அரை டம்ளர் பீட்ரூட் ஜூஸ் சேர்த்து பருகுங்கள்.
பீட்ரூட் சாறில் கால்சியம் நிறைந்து காணப்படுவதால் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்துகின்றது.
கெட்ட கொழும்புக்களை கரைக்கவும் நல்ல கொழுப்புக்களை அதிகரிக்கவும் பீட்றூட் சாறு உதவி புரிகின்றது. பீட்றூட்டில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் கொழுப்புக்களை கரைப்பதற்கான மூலப்பொருள்களை கொண்டுள்ளது.
வயதாகும்போது கண்களில் ஏற்படும் கண்புரை , கண் பிரச்சினைகளுக்கும் மறதி, தோல் சுருக்கள் போன்றவற்றுக்கும் சிறந்த தீர்வாக பீட்ரூட் சாறு காணப்படுகிறது.
You must be logged in to post a comment Login