word – tamilnaadi.com

போர் வெடிக்கும் – சீனாவுக்கு எச்சரிக்கை
தங்கள் நாட்டின் சர்வதேச எல்லை பிராந்தியத்திற்குள் வரும் சீன விமானங்கள் மற்றும் கப்பல்கள் அழிக்கப்படும் என தாய்வான் சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒருபக்கம் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் மற்றொரு பக்கம் தாய்வான் – சீனா இடையிலான பதற்றமான நிலை நிலவி வருகிறது.

தற்போது, தீவு நாடான தாய்வானை சீனா தங்கள் நாட்டின் ஒற்றை அங்கமாக அறிவித்து வருகின்ற நிலையில், தாய்வான் குடியரசு முழு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, தங்களை சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தி வருகிறது.

ஆனால், தாய்வானின் இந்நிலைப்பாட்டை எதிர்த்து சர்வதேச தாய்வான் கடல் எல்லையில் சீனா தங்களது போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அத்துமீறி நுழைய செய்வதோடு, பிரமாண்ட போர் ஒத்திகை பயிற்சியையும் அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதனால், இவ்விரு நாடுகளுக்குமிடையே எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் எனும் பதற்றமான சூழ்நிலை உலக நாடுகள் மத்தியில் நிலவி வருகின்றது.

இந்நிலையில், தாய்வானுக்கு அருகிலுள்ள 12 மைல் மண்டலம் என்று அழைக்கப்படும் பகுதிக்குள் நுழையும் சீனாவின் போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை தாய்வான் ஆயுத படை அழித்து ஒழிக்குமென தாய்வான் பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது.

இந்த 12 மைல் மண்டலம் என்பது தாய்வானுக்கு சொந்தமான நீர் மற்றும் வான்பரப்பை உள்ளடக்கிய பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயால் குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்!
நாயால் குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்!

நாய் தாக்கியதில் ஐந்து மாத குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை காலை கெர்ஃபில்லி கவுண்டியின் பென்னிரியோலுக்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டதாக க்வென்ட் பொலிசார் தெரிவித்தனர்.

குழந்தை வேல்ஸ் கார்டிஃப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தையின் காயங்கள் தெரியவில்லை, ஆனால் உயிருக்கு ஆபத்தானது என்று நம்பப்படவில்லை.

கேர்ஃபில்லி பாராளுமன்ற உறுப்பினர் வெய்ன் டேவிட், அப்பகுதியில் சமீபத்தில் இரண்டு நாய் தாக்குதல்களுக்குப் பிறகு, இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்ததாகக் கூறினார்.

மூன்று சம்பவங்களும் ஒன்றுக்கொன்று அரை மைல் (சுமார் 0.8 கிமீ) சுற்றளவில் நடந்துள்ளன. வெல்ஷ் ஆம்புலன்ஸ் சேவை 09:00 BST மணிக்கு நாய் தாக்குதலுக்கு அழைக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது.

கேர்ஃபில்லி கவுன்சிலர், கிரெக் ஈட், தாக்குதலின் போது சாட்சிகள் வீட்டில் இருந்து அலறல்களை கேட்டதாக கூறினார்.

வியாழன் அன்று உள்ளூர் குழுக்கள் கூடி, அதிகரித்து வரும் தாக்குதல்களை எப்படி நிறுத்துவது என்று விவாதித்தனர், பிரசாரங்கள்  மேலும் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

#world

ஈரானில், வெளிநாடுகளுக்குத் தகவல் அனுப்பிய உளவாளிகள் கைது
ஈரானில், வெளிநாடுகளுக்குத் தகவல் அனுப்பிய உளவாளிகள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2019-ம் ஆண்டில் ஈரானின் அணு மற்றும் இராணுவத் தளங்களை உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் 17 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ஈரானின் புஷெர் மாகாணத்தில் மட்டும் அந்நாட்டு உளவுத்துறையினர் 10 பேரை கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவர்கள் எந்தெந்த நாடுகளுக்குத் தகவல்களை அனுப்பினார்கள் என்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

கைதான 10 பேரும் ஈரானின் விரோத நாடுகளின் உளவு அமைப்புகளுடன் கூட்டாளிகளாகவும், பினாமிகளாகவும் செயல்பட்டு வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019ஆம் ஆண்டில் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலிபன்கள் கையில் அமெரிக்க ஹெலிகொப்டர் – சடலத்துடன் பறந்து அதகளம்!!
தலிபன்கள் கையில் அமெரிக்க ஹெலிகொப்டர் – சடலத்துடன் பறந்து அதகளம்!!

ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் அமெரிக்க பிளாக் ஹொக் ஹெலிகொப்டரில் சடலத்தைத் தொங்கவிட்டபடி தலிபன்கள் பறந்த காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் உலாவி வருகிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கர்கள் முழுமையாக வெளியேறிவிட்ட நிலையில் அந்நாடு முழுமையாக தலிபன்கள் கட்டுக்குள் வந்துவிட்டது.

இது குறித்து தலிபன் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகீத், இஸ்லாமிய ஆப்கான் அமீரகம் இனி சுதந்திரமான நாடு. இதில் நாம் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம். அமெரிக்கா தோற்றுவிட்டது. இந்நிலையில், எங்கள் நாட்டின் சார்பாக நாங்கள் உலகின் பிற நாடுகளுடன் நல்லுறவை பேண விரும்புகிறோம். ஆப்கான் மக்களின் சுதந்திரம் போற்றப்படும். இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்டு ஆட்சி நடைபெறும். நமது வெற்றி அந்நியப் படைகளுக்கு ஒரு பாடம். தலிபன் படைகள் கண்ணியமாக நடந்துகொள்ளும் என்று தெரிவித்தார்.

விமான நிலையத்தில் தலிபன்கள் தமது வெற்றியை துப்பாக்கி குண்டுகளை முழங்கி ஆரவாரத்துடன் கொண்டாடினர்.

இந்நிலையில், ஆப்கானின் கந்தஹார் நகரில் அமெரிக்க பிளாக் ஹொக் ஹெலிகொப்டரில் சடலத்தைத் தொங்கவிட்டபடி தலிபன்கள் பறந்த காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ தலிபன்களின் அதிகாரபூர்வ ஆங்கில டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஹெலிகொப்டரில் ஒரு சடலம் தொங்குவது தெளிவாகத் தெரியும் நிலையில் அதுகுறித்து ஒரு சிறிய வார்த்தை கூட தலிபன்கள் கூறவில்லை. அந்த சடலம் அமெரிக்க வீரருடையதா இல்லை பொதுமக்களுடையதா என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.

இருப்பினும் அதனைப் பகிர்ந்துவரும் பலரும், இந்த வீடியோவில் இருப்பது உண்மையிலேயே ஒரு மனிதர் தானா இல்லை ஏதும் பொம்மையா என்று பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.