Women Rights Iran. – tamilnaadi.com

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கீஸ் முகமதிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை: ஈரான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஈரானில் மனித உரிமைகளுக்காகவும், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கீஸ் முகமதிக்கு (Narges Mohammadi), அந்நாட்டு நீதிமன்றம் மேலும் ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஈரானின் மஷாத் (Mashhad) நகரில் உள்ள நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதாக நர்கீஸின் சட்டத்தரணி முஸ்தபா நீலியை மேற்கோள் காட்டி சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் இந்தக் குற்றத்திற்காக அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன், சிறைக்காலத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் பயணத் தடையும், தலைநகர் தெஹ்ரானில் இருந்து சுமார் 740 கி.மீ தொலைவில் உள்ள கோஸ்ஃப் நகருக்கு இரண்டு ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டு வசிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடல்நலக் குறைவும் போராட்டமும்: 53 வயதான நர்கீஸ் முகமதி, சிறையில் நிலவும் ஒடுக்குமுறையைக் கண்டித்து கடந்த பிப்ரவரி 2-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே 13 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இவர், சிறைவாசத்தின் போது பலமுறை மாரடைப்புக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் கைது செய்யப்பட்டது ஏன்? கடந்த 2024 டிசம்பரில் மருத்துவ காரணங்களுக்காக தற்காலிக விடுப்பில் வெளிவந்திருந்த நர்கீஸ், சக மனித உரிமை சட்டத்தரணி ஒருவரின் நினைவுச் சடங்கில் பங்கேற்று நீதிக்காகக் குரல் எழுப்பினார். இதன் காரணமாக டிசம்பர் மாத இறுதியில் அவர் மீண்டும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

நர்கீஸ் முகமதியின் மோசமான உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவருக்குப் பிணை வழங்க வேண்டும் என அவரது தரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், ஈரான் அரசு அவருக்குத் தண்டனையை அதிகரித்துள்ளது சர்வதேச அளவில் மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.