Vietnam – tamilnaadi.com

வியட்நாம் சென்றுள்ள ஜனாதிபதி : நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake), வியட்நாமுக்கு (Vietnam) விஜயம் மேற்கொண்டுள்ள காரணத்தால், 04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (04) வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கும், அமைச்சர் விஜித ஹேரத்தின் (Vijitha Herath) கீழ் உள்ள வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சிற்கும் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோ (Anil Jayantha Fernando), நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன (Eranga Weeraratne), டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர (Aruna Jayasekera) பாதுகாப்பு பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர (Arun Hemachandra), வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகை பல நாடுகளுக்கான வரிவிதிப்பை இடைநிறுத்தியதால் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
பெரும்பாலான நாடுகளின் பொருட்களுக்கு அதிக வரிகளை நிறுத்தி வைப்பதாகவும், அதற்கு பதிலாக 10வீத இறக்குமதி வரி விகிதத்தை விதிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து அமெரிக்க பங்குகள் உயர்ந்துள்ளன.

பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட வர்த்தக கூட்டாளிகளுக்கு அதிக வரிகளை விதிப்பதைத் திரும்பப் பெறுவதாக வெள்ளை மாளிகை கூறியது.

இருப்பினும், சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கான வரிகளை மேலும் உயர்த்துவதாகவும், குறைந்தபட்சம் 125 வீத வரி “உடனடியாக நடைமுறைக்கு வரும்” என்றும் ட்ரம்ப் கூறினார்.

வர்த்தகப் போரினால் தூண்டப்பட்ட பொருளாதார மந்தநிலை குறித்த கடுமையான எச்சரிக்கைகளுக்கு மத்தியில், சந்தை கொந்தளிப்பின் பல நாட்களுக்குப் பிறகு, பிற்பகல் வர்த்தகத்தில் S&P 500 7வீதமாக உயர்ந்துள்ளதுடன் பல ஆண்டுகளில் அதன் சிறந்த நாட்களில் ஒன்றாக இருந்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் அவர் அறிவித்த வரிகள் நடைமுறைக்கு வந்து 24 மணி நேரத்திற்குள் ட்ரம்பின் முடிவு வந்துள்ளது.

இது வியட்நாம் போன்ற முக்கிய வர்த்தக கூட்டாளிகளின் பொருட்களைப் பாதித்தது. வியட்நாம் அதன் இறக்குமதிகள் 46வீத எல்லையில் புதிய வரியை எதிர்கொண்டன.

இந்நிலையில், பங்குச் சந்தை சரிவை டொனால்ட் ட்ரம்ப் எதிர்க்க முடிந்தாலும், பத்திரச் சந்தையும் பலவீனமடையத் தொடங்கியதும், அவர் தனது கண்ணைக் கவரும் அளவுக்கு உயர்ந்த கட்டணங்களை கைவிட்டுவிடுவது காலத்தின் ஒரு விஷயம் மட்டுமே” என்று மூலதன பொருளாதாரத்தின் தலைமை வட அமெரிக்க பொருளாதார நிபுணர் பால் ஆஷ்வொர்த் கூறினார்.

ட்ரம்ப், தனது பிரசாரத்தில் கோரிய 10வீத உலகளாவிய வரித் திட்டத்திற்குத் திரும்புவார் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார், இருப்பினும் அமெரிக்காவும் சீனாவும் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க அதிக நேரம் எடுக்கும் என்று எச்சரித்தார்.

அத்துடன், அடுத்த சில நாட்களில் இரு தரப்பினரும் பின்வாங்குவதைப் பார்ப்பது கடினம் என்று அவர் கூறினார். ஆனால் பதவியேற்பு நாளிலிருந்து பயன்படுத்தப்பட்ட அனைத்து கூடுதல் கட்டணங்களையும் முழுமையாக திரும்பப் பெறுவது சாத்தியமில்லை என்றாலும், பேச்சுவார்த்தைகள் இறுதியில் நடக்கும் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம் என பால் ஆஷ்வொர்த் தெரிவித்தார்.

சாலை விதி மீறுபவர்களை காட்டி கொடுத்தால் ரூ.17000 பரிசு! சாலைகளில் கேமராவுடன் உட்கார தயாராகும் மக்கள்
சாலை விதி மீறுபவர்களை காட்டி கொடுத்தால் ரூ.17000 பரிசு! சாலைகளில் கேமராவுடன் உட்கார தயாராகும் மக்கள்

வியட்நாம் அரசு, சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் வித்தியாசமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் மூலம், சாலை விதி மீறல்களை புகார் அளிக்கும் பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1ம் திகதி முதல், சாலை விதி மீறலை ஆதாரத்துடன் புகார் அளிக்கும் நபர்களுக்கு, 200 அமெரிக்க டொலர்கள் வரை பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.17,144.15 ஆகும். அதாவது, அபராதத் தொகையில் 10% வரை பொதுமக்களுக்கு பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து காவலர்கள் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் சாலை போக்குவரத்தை கண்காணிக்க முடியாது என்பதால், இந்த புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் மற்றொரு முயற்சியாக, கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், சாலை விதி மீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையும் 30% அதிகரிக்கப்பட்டுள்ளது.

வியட்நாமில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், பிற பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உதாரணமாக, சிவப்பு சிக்னலை மீறி செல்லும் குற்றத்திற்கு விதிக்கப்படும் அபராதத் தொகை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற பிற சிறிய குற்றங்களுக்கும், முன்பு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை விட 30 மடங்கு அதிகமாக அபராதம் விதிக்கப்படுகிறது.

உலகையே உலுக்கிய கோடீஸ்வர பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை
உலகையே உலுக்கிய கோடீஸ்வர பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை

வங்கியில் பணத்தை மோசடி செய்த சம்பவத்தில் குற்றவாளியாக காணப்பட்ட ட்ரூங் மை லானுக்கு (Truong My Lan) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வியட்நாமின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாக கருதப்படும் சைகோன் கொமர்ஷல் வங்கியில் இவர் பல பில்லியன் டொலர்களை மோசடி செய்தமை உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

67 வயதான ட்ரூங் மை லான், ஒரு பணக்கார பெண் எனவும் சொத்து மேம்பாட்டு வணிகங்களை வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் 11 ஆண்டுகளில் 44 பில்லியன் டொலர்களை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. வியட்நாமில் மிக உயர்ந்த வழக்குகளில் ஒன்றாக இது கருதப்பட்டது.

உலகில் இதுவரை நடந்த மிகப்பெரிய வங்கி மோசடி தொடர்பான விசாரணை இதுவாகும்.

வியட்நாமில் நிலநடுக்கம்
வியட்நாமில் நிலநடுக்கம்

வியட்நாமின் மத்திய ஹைலேண்ட் மாகாணமான கோன் தும் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கங்கள் முறையே 4.0, 3.3, 2.8, 2.5, மற்றும் 3.7 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளன.

வியட்நாமின் மத்திய ஹைலேண்ட் மாகாணமான கோன் தும் பகுதியில் ஒரு மணிநேரத்திற்குள் தொடர்ந்து 5 முறை பதிவாகிய அதிர்வினால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்துள்ளதுடன், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

60 ஆண்டுகளாக ஒருமுறை கூட கண்ணுறங்காத விசித்திர நபர்
கண்ணுறங்காத விசித்திர நபர்!

வியட்நாம் நாட்டவரான 80 வயது நபர் ஒருவர் கடந்த 60 ஆண்டுகளாக ஒருமுறை கூட கண்ணுறங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சிறு வயதில் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக இந்த நிலை ஏற்பட்டது என அவர் நம்பினாலும், இந்த சிக்கலுக்கு பின்னால் வியட்நாம் போரும் ஒரு காரணம் என கூறுகின்றனர்.

தற்போது 80 வயதாகும் Thai Ngoc என்ற முதியவர், கடந்த 1962ல் இருந்தே நிரந்தரமாக தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருகிறார். Thai Ngoc என்பவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எவரும், இவர் ஒருமுறை கூட தூங்கியதாக பார்த்ததில்லை என கூறுகின்றனர்.

பல தரப்பு மருத்துவ நிபுணர்கள் Thai Ngoc அனுபவிக்கும் இந்த நிலையை ஆய்வு செய்தும், இதுவரை அவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை என்றே கூறப்படுகிறது.

மட்டுமின்றி தூக்கம் இல்லாமல் அவர் இருந்தாலும் உடல் நிலையில் நன்றாக இருக்கிறார் எனவும், ஓய்வு இல்லாததால் இருந்தால் கூட அவருக்கு எந்த மருத்துவ பாதிப்பும் இல்லை எனவும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த 60 ஆண்டுகளில் ஒரு நொடி தூக்கத்தில் ஆழ்ந்ததாக கூட தமக்கு நினைவில் இல்லை என்கிறார் அவர். மேலும், கிரீன் டீ மற்றும் அரிசி உணவில் இருந்து தயாரிக்கப்படும் மது ஆகியவற்றில் இருந்து தான் தமக்கு தேவையான ஆற்றலை பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் வியட்நாம் போரில் தமது கை சேதமடைந்த பின்னர், அவர் தூங்குவதை பார்த்ததில்லை என்கிறார் உறவினர் ஒருவர். போர் சூழல் காரணமாக ஏற்படும் உளவியல் பாதிப்பும் ஒரு காரணம் என நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டுகின்றனர்.

வியட்நாமில் 1955 முதல் 1975 வரையான காலகட்டத்தில் கடுமையான போர் நடந்துள்ளது. அதில் ஒரு கை பாதிக்கப்பட்டவர் Thai Ngoc. தற்போது பகல் முழுவதும் விவசாயத்தில் ஈடுபடும் Thai Ngoc, இரவானால் மது தயாரிக்கும் பணியில் ஈடுபடுவாராம்.

தூக்கமின்மை இருந்தாலும், விடிகாலை 4 மணியளவில் கொஞ்ச நேரம் படுத்துக்கொள்வாராம். ஆனால் தூங்குவதில்லை என்கிறார்கள் உறவினர்கள்.

வியட்நாமிலிருந்து நாடு திரும்பினார் இலங்கையர்கள்!!
வியட்நாம் கடல் எல்லையில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 152 பேர் நேற்றிரவு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.

இவர்கள் இன்றைய தினம் தத்தமது வீடுகளுக்கு அனுப்பப்படவுள்ளதாக குடிப்பெயர்வாளர்களுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த இலங்கையர்கள், சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கனடாவுக்கு செல்ல முயற்சித்தபோது, கடந்த நவம்பர் 8ஆம் திகதி அவர்கள் பயணித்த கப்பல் பழுதடைந்தது.

இதனையடுத்து ஜப்பானிய கப்பல் ஒன்றினால் அவர்கள் மீட்கப்பட்டு வியட்நாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். மீட்கப்பட்ட 303 இலங்கையர்களையும் மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை வியட்நாம் அதிகாரிகள் மேற்கொண்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு இலங்கையர்கள் தமது உயிரை மாய்க்க முயற்சித்தனர்.

அவர்களில் யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரன் என்பவர் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, அவரது சடலம் நீண்ட நாட்களின் பின்னர் கடந்த 17ஆம் திகதி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கு மீதமிருந்த 302 பேரில் 152 பேர் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கு இணக்கம் வெளியிட்டனர்.

இந்தநிலையில் குறித்த 152 பேரும் விசேட விமானம் ஒன்றின் ஊடாக நேற்றிரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

வியட்நாம் நேரப்படி மாலை 5 மணியளவில் இலங்கை நோக்கி புறப்பட்ட அவர்கள் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

#SriLankaNews

வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு!!
கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்தபோது, படகு பழுதடைந்த நிலையில் வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 302 இலங்கையர்களில் 152 பேர் மீண்டும் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் குறித்த 152 பேரும் நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கோரிக்கைக்கு இணங்க 302 இலங்கையர்களுக்கு உதவியதற்காக ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்புக்கு அமைச்சர் இதன்போது நன்றி தெரிவித்தார்.

#SriLankaNews

கனடா செல்ல முற்பட்டு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாவகச்சேரி நபர் மரணம்
அண்மையில் கப்பல் மூலம் கனடா செல்ல முற்பட்டு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்திருப்பதாக வியட்நாம் தூதுவராலயம் சார்பாக குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது,

சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரன் என்ற 32 வயதான குடும்பஸ்தரே மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் பொருளாதார சூழல் காரணமாக புலம் பெயர முயற்சித்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இவருக்கு பிறந்து ஆறு மாதங்களேயான பெண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர வழியறியாது குடும்பத்தினர் தவித்து வருவதோடு, சம்பந்தப்பட்ட தரப்புக்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கின்றனர்.

#SriLankaNews

இலங்கை செல்லமாட்டோம்! – முரண்டுபிடிக்கும் அகதிகள்
வியட்நாம் மற்றும் சிங்கப்பூருக்கு அருகில் உள்ள கடலில் விபத்தில் சிக்கி தற்போது வியட்நாமில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு வர விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளனர்.

தங்கள் பிரச்சினையை தீர்க்க ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் என அவர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற மியன்மார் கொடியுடனான LADY R3 என்ற மீன்பிடிக் கப்பல் கடந்த திங்கட்கிழமை வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் கடற்பரப்பில் விபத்துக்குள்ளானது

வியட்நாமில் இருந்து 258 கடல் மைல் தொலைவில் கப்பல் சென்று கொண்டிருந்த போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக வியட்நாமிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பின்னர் விபத்துக்குள்ளான கப்பலுக்கு அண்மையில் பயணித்த ஜப்பானிய சரக்குக் கப்பலான ஹீலியோஸ் லீடரால் அக்கப்பலில் பயணித்தவர்கள் மீட்கப்பட்டனர்.

பின்னர், வியட்நாமில் உள்ள வங் டாவு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு, வியட்நாம் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது வியட்நாமில் உள்ள அகதிகள் முகாமில் உள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் உள்ளனதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நாங்கள் வியட்நாம் அகதி முகாமில் இருக்கின்றோம். இலங்கையில் இருந்து வந்து நடுக்கடலில் தத்தளித்து கொண்டு இருந்தோம். எங்களை அழைத்து வந்தவன் எம்மை விட்டு விட்டு தப்பிச் சென்று விட்டான். நாங்கள் சர்வதேச கடலில் தத்தளித்த போது ஜப்பான் நாட்டு கப்பல் வந்து எங்களை காப்பாற்றியது. அவர்கள் எம்மை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைக்க இருந்த போது, வியட்நாம் கடற்படை எம்மை அழைத்து வந்துள்ளது. எங்களை எப்படியாவது காப்பாற்றவும். எமக்கு இலங்கை வேண்டாம். இலங்கையில் இருக்க முடியாது என்று காரணத்தால்தான் நாங்கள் வந்தோம். இலங்கைக்கு எமது ஆண் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு போகவே முடியாது. ஆகவே, அரசாங்கம் மற்றைய அனைத்து நாடுகளும் இணைந்து எம்மை காப்பாற்றவும் – என கப்பலில் பயணித்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews