UNDP Report – tamilnaadi.com

ஆப்கானிஸ்தானில் 10இல் 9 குடும்பங்கள் பசியாலும் கடனாலும் தவிப்பு: 23 லட்சம் பேர் நாடு திரும்பியதால் நெருக்கடி அதிகரிப்பு – ஐ.நா. அறிக்கை!
ஆப்கானிஸ்தானில் உள்ள ஒவ்வொரு 10 குடும்பங்களில் 9 குடும்பங்கள் பசியால் வாடுவதாகவும் கடனில் சிக்கித் தவிப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட (UNDP) அறிக்கை ஒன்று திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து வசித்து வரும் குடும்பங்களில் 81 சதவீத குடும்பங்களும், வெளிநாடுகளில் இருந்து திரும்பிய குடும்பங்களில் 88 சதவீத குடும்பங்களும் கடனால் தவித்து வருகின்றன.

10இல் 9 குடும்பங்கள் உண்ணும் உணவின் அளவைக் குறைப்பது, சொத்துகளை விற்பது, கடன் வாங்குவது போன்ற எதிர்மறை நடவடிக்கைகளின் மூலம் சமாளிப்பதாக அறிக்கை கூறுகிறது.

வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி ஆப்கானிஸ்தான் மக்கள் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சுகாதாரம், சுத்தமான குடிநீர், கல்வி ஆகியவை வெகுவாகச் சரிந்துள்ளன. குறிப்பாக, கிராமப்புற பெண்கள் மத்தியில் இவற்றுக்கான அணுகல் சாத்தியமற்றதாக உள்ளது.

சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து, சுமார் 23 லட்சம் ஆப்கானியர்கள் நாடு திரும்பும் கட்டாயத்துக்கு ஆட்பட்டுள்ளனர். இவ்வாறு நாடு திரும்பியவர்களின் வருகையால், நாட்டின் பற்றாக்குறை இன்னும் அதிகரித்துள்ளது.

நாடு திரும்பிய 1,500 குடும்பங்கள் உட்பட 49,000 குடும்பங்களில் ஐ.நா. மேம்பாட்டுத் திட்டத்தின் சார்பில் நாடு தழுவிய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

குடும்பத் தலைவர் இல்லாததால் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் இன்னும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. வருமானம் ஈட்டும் ஆண்கள் இல்லாத நிலையில், பெண்கள் வேலைக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அத்தகைய குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. உயர் அதிகாரி கன்னி வக்னராஜா தெரிவித்துள்ளார்.

நங்கர்ஹார், குனார், சமங்கன் மாகாணங்களில் சமீபத்தில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கங்கள், திடீர் வெள்ளம், வறட்சி ஆகியவை இம்மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் கடுமையாகப் பாதித்துள்ளது.

குறிப்பிட்ட முதலீடுகள் காரணமாக சில பகுதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஐ.நா. மேம்பாட்டுத் திட்டம், தனது கூட்டாளிகளுடன் இணைந்து கிழக்கு, வடக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இதன்மூலம் இப்பகுதிகளில் மின்சாரம், சுகாதாரம், குடிநீர், வேலைவாய்ப்பு ஆகியவை மேம்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.