#turkey – tamilnaadi.com

துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம் : யன்னல் வழியாக கீழே குதித்த மக்களால் பரபரப்பு
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில் உயிரை காப்பாற்ற பொதுமக்கள் ஜன்னல், பால்கனி வழியாக கீழே குதித்த சம்பவம் நடந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துருக்கியின் மத்திய தரைக்கடல் கடலோர நகரமான மர்மாரிஸ் இன்று (03) அதிகாலையில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் கட்டிங்கள் குலுங்கிய நிலையில் பயந்துபோன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதுடன் மேலும் சிலர் உயிருக்கு பயந்து ஜன்னல் மற்றும் பால்கனி வழியாக வெளியே குதித்துள்ளனர்.

இதில் குறைந்தது ஏழு பேர் காயமடைந்துள்ளதுடன் மேலும் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக துருக்கி பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மைத் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக 2023 ஆம் ஆண்டில், துருக்கியில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 53,000இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், தெற்கு மற்றும் தென்கிழக்கு மாகாணங்களில் இலட்சக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் நாடு : கடுப்பில் இந்தியா
துருக்கி (turkey), வெளிப்படையாக தனது பாகிஸ்தான் (pakistan) ஆதரவை தெரிவித்துள்ளது இந்தியாவிற்கு (india) சினத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூண்ட நிலையில், ஒபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாத பகுதிகளை இந்தியா தாக்கியது.

அதற்கு பதில் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகளையும் தடுத்தது.

இந்நிலையில் இந்த போரில் பாகிஸ்தானுக்கு துருக்கி ட்ரோன் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கி உதவி செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வியாபாரிகள், துருக்கியுடனான பல வியாபாரங்களை நிறுத்தியுள்ளனர்.

ஆனால் அதை பற்றி கவலைப்படதாக துருக்கி தனது பாகிஸ்தான் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

இதுபற்றி அறிக்கை வெளியிட்ட துருக்கி ஜனாதிபதி எர்டோகன்,-“துருக்கி – பாகிஸ்தான் இடையேயான சகோதரத்துவம் உண்மையான நட்புக்கு சான்று.

உலகில் ஒரு சில நாடுகள் மட்டுமே இப்படி ஒரு நட்புறவைக் கொண்டிருக்கின்றன. துருக்கியை போலவே பாகிஸ்தானிலும் அமைதி, ஸ்திரத்தன்மை உருவாக விரும்புகிறோம். கடந்த காலங்களை போலவே எதிர்காலத்திலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்போம்” எனக் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்
பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர்.

துருக்கியின் சுற்றுலாத் துறை இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பொது வேண்டுகோளை விடுத்துள்ளது, அவர்கள் தொடர்ந்து நாட்டிற்கு வருகை தருமாறும், அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அன்பான விருந்தோம்பலை உறுதி செய்வதாகவும் வலியுறுத்துகிறது.

துருக்கியின் சுற்றுலா ஆணையத்தால் கூறப்படும் ஒரு சமூக ஊடகப் பதிவு இப்போது பரவலாகப் பரவி வருகிறது, இது இந்திய பயணிகள் “துருக்கி முழுவதும் – ஹோட்டல்கள், உணவகங்கள், கடைகள் மற்றும் அனைத்து சுற்றுலா தலங்களிலும் அவர்கள் எப்போதும் போலவே வரவேற்கப்படுகிறார்கள் மற்றும் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள்” என்பதை வலியுறுத்துகிறது.

புவிசார் அரசியல் பதட்டங்களிலிருந்து விலகி, “உள்ளூர் மக்களில் பெரும்பாலோர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடக்கும் மோதல் பற்றி அறிந்திருக்கவில்லை, மேலும் இது இங்குள்ள அன்றாட வாழ்க்கையிலோ அல்லது சுற்றுலா சூழலிலோ எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்று அந்தப் பதிவு கூறுகிறது.

துருக்கியில் நீங்கள் தங்கியிருக்கும் காலம் முழுவதும் உங்கள் ஆறுதல், பாதுகாப்பு மற்றும் திருப்தியை உறுதி செய்வதற்கு நாங்கள் முழுமையாக உறுதிபூண்டுள்ளோம் என்று அது கூறுகிறது.

சிவசேனா (UBT) நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, X இல் “இல்லை துருக்கியே, பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்க அதே நாட்டைப் பயன்படுத்தும் ஒரு நாட்டில் சுற்றுலாவிற்கு இந்தியர்கள் பணத்தை செலவிட மாட்டார்கள். உங்கள் சுற்றுலாப் பயணிகளை வேறு எங்கும் தேடுங்கள், எங்கள் பணம் இரத்தப் பணம் அல்ல.” என்று கூறினார்.

RPG எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவரான தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, இந்திய சுற்றுலாவின் பொருளாதார பங்களிப்பை இந்தப் பிராந்தியத்திற்கு எடுத்துரைத்தார்.

அவர் “கடந்த ஆண்டு இந்தியர்கள் சுற்றுலா மூலம் துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு ரூ.4,000 கோடிக்கு மேல் வழங்கினர். வேலைவாய்ப்புகளை உருவாக்கினர். அவர்களின் பொருளாதாரம், ஹோட்டல்கள், திருமணங்கள் மற்றும் விமானங்களை உயர்த்தினர்” என்றார்.

40 ஆண்டு ஆயுதப்போராட்டதை கைவிடும் குர்திஸ் கிளர்ச்சியாளர்கள்
துருக்கியின் அரசாங்கங்களுக்கு எதிராக, 40 ஆண்டு காலமாக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குர்தீஸ் கிளர்ச்சியாளர்கள், தமது ஆயுத போராட்டத்தை கைவிட்டு, அமைதி வழியில் திரும்ப உள்ளதாக அறிவித்துள்ளனர்.

குர்தீஸ் தொழிலாளர் கட்சி அல்லது பி.கே.கே., என கூறிக் கொள்ளும் குர்தீஸ் கிளர்ச்சியாளர்கள், 1984ல் இருந்து ஆயுதப்போராங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், குர்திஸ் குழுவை பயங்கரவாத அமைப்பாக கருதி துருக்கி மற்றும் மேற்கத்திய நாடுகள் தடை செய்துள்ளன.

அந்தக்குழுவின் தலைவர் அப்துல்லா ஒக்லான், 1999ல் இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.எனினும் குர்தீஸ் கிளர்ச்சியாளர்கள் குழு தமது போராட்டத்தை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது.

சிறையில் இருக்கும் அப்துல்லாவை, அண்மையில் துருக்கி அரசியல் தலைவர்கள் சந்தித்து, வன்முறையை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதை தொடர்ந்து கடந்த மார்ச்சில் போர் நிறுத்தத்தை குர்தீஸ் கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர். இந்தநிலையிலேயே ஈராக்கில் நடந்த நிகழ்வு ஒன்றில், குர்தீஸ் தொழிலாளர் கட்சி, தமது ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அரசியலை முன்னெடுத்து, துருக்கியுடன் அமைதி வழியில் குர்தீஸ் இன மக்களின் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று குர்திஸ் கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

தரையிறங்கிய துருக்கிய போர் விமானங்கள்! இராணுவ தளவாடங்களை சேகரிக்கும் பாகிஸ்தான்
இந்தியாவுடன் போர் மூளும் அபாயம் நிலவும் சூழலில், பாகிஸ்தானுக்கு இராணுவ தளவாடங்களை போர் விமானங்கள் வாயிலாக துருக்கி அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கு இடையே விதிக்கப்பட்டுள்ள தடைகளை தொடர்ந்து போர் பதற்றம் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டது.

பாகிஸ்தானியர்களின் விசாக்கள் இரத்து என ஏராளமான தடைகளை இந்திய மத்திய அரசு விதித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், எல்லையை ஒட்டிய பகுதிகளில் படைகளை பாகிஸ்தான், குவிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், இந்தியாவின் லடாக்கை ஒட்டியுள்ள பென்சி,காஷ்மீரின் ஸ்கார்டு, கைபர் பக்துங்வாவின் ஸ்வாட் என எல்லையில் உள்ள விமானப்படை தளங்களில், எப் -16, ஜே -10, ஜேஎப் – 17 ஆகிய யுத்த விமானங்களை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது.

இந்தியாவின் இராணுவ ஊடுருவல்! தயார் நிலையில் பாகிஸ்தான்…
இந்தியாவின் இராணுவ ஊடுருவல் விரைவில் நிகழும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுடன் வழங்கிய நேர்காணலில் இதனை கூறியுள்ளார்.

இந்தியாவின் இராணுவ ஊடுருவல் “உடனடியான ஒன்று” என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்த தாக்குதல் உடனடியான ஒன்று என்பதால் நாங்கள் எங்கள் படைகளை பலப்படுத்தியுள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

எனவே அந்த சூழ்நிலையில் சில மூலோபாய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும், கவாஜா விளக்கியுள்ளார்.

எனவே பல இராஜதந்திர முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன, என்று கவாஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பிணைப்பு உடைக்க முடியாதது என்றும், அது மக்கள், அரசாங்கங்கள், தலைவர்களுக்கு இடையிலான பிணைப்பு எனவும் அந்நாட்டு தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் நாம் கண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதுவர் கூறியுள்ளார்.

நான் பார்த்த புகைப்படங்கள் மனதை உடைப்பதாக இருந்தன என்றும் கூறியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் மிகவும் உறுதியுடன் போராட வேண்டும் என்றும், பயங்கரவாதிகள் ஏதாவது செய்தால், அவர்கள் அதற்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உணவின்றி சிக்கித் தவிக்கும் 400 இண்டிகோ பயணிகள்
உணவின்றி சிக்கித் தவிக்கும் 400 இண்டிகோ பயணிகள்

துருக்கியில் இருந்து டெல்லி (Delhi) மற்றும் மும்பை (Mumbai) செல்லவிருந்த சுமார் 400 இண்டிகோ பயணிகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முதலில் விமானம் தாமதமாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டது என பயணிகள் தங்களின் எக்ஸ் மற்றும் லின்க்டின் தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

விமான பயணிகளில் ஒருவர் தனது பதிவில், “முதலில் விமானம் இரண்டு முறை தாமதமானது பிறகு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது எனினும், 12 மணி நேரம் கழித்து விமானம் புறப்பட தயாராகும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் விமான நிலையத்தில் சிக்கித்தவிக்கும் விமான பயணிகளில் சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது மேலும் பயணிகளுக்கு தங்கும் வசதி, உணவு எதுவும் வழங்கப்படவில்லை.

இண்டிகோ நிறுவனம் சார்பில் யாரும் விமான நிலையம் வரவும் இல்லை மற்றும் பயணிகளை அனுகவும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னதாக ஏர்ஹெல்ப் ஸ்கோர் வெளியிட்ட அறிக்கையின் படி உலகின் மோசமான விமான நிறுவனங்கள் பட்டியலில் இண்டிகோ இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவிற்கு எப்படி தப்பினார் சிரிய ஜனாதிபதி : வெளிவந்தன தகவல்
ரஷ்யாவிற்கு எப்படி தப்பினார் சிரிய ஜனாதிபதி : வெளிவந்தன தகவல்

சிரியாவில்(syria) கிளர்ச்சி படைகள் தலைநகரை கைப்பற்றும் முன்பே அந்நாட்டின் ஜனாதிபதி பசார் அல் ஆசாத்(bashar al assad) அங்கிருந்து தப்பி ரஷ்யா சென்றடைந்தார்.

எனினும் அவர் சென்ற விமானத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் அவரது விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி அவர் பத்திரமாக ரஷ்யாவில்(russia) தரையிறங்கியுள்ளார்.இந்த நெருக்கடியான சூழலில் அவர் எவ்வாறு ரஷ்யா சென்றடைந்தார் என்ற தகவலை ரஷ்ய உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த நவம்பர் இறுதியில் ஜனாதிபதி ஆசாத்துக்கு எதிராக மிகப் பெரிய போரை எச்டிஎஸ் கிளர்ச்சிக் குழு தொடங்கியது. ஆசாத் படையில் இருந்த பல்வேறு ராணுவ தளபதிகள் கிளர்ச்சிக் குழுவுடன் ரகசியமாக கைகோர்த்தனர். இதன் காரணமாக அலெப்போ உள்ளிட்ட நகரங்களில் கிளர்ச்சிக் குழு வீரர்களுடன் ராணுவ வீரர்கள் போரில் ஈடுபடவில்லை.

தீவிர போரை தொடங்கிய 13 நாட்களில் தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சிக் குழுக்கள் சுற்றிவளைத்தன. அங்கும் ஜனாதிபதி ஆசாத் படை வீரர்கள் போரில் ஈடுபடவில்லை.

இதனிடையே துருக்கி(turkey), ரஷ்யா(russia), ஈரான் (iran)நாடுகளின் மூத்த அதிகாரிகள், கத்தார் (qatar)தலைநகர் தோஹாவில் கடந்த 7-ம் திகதி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். கிளர்ச்சிக் குழுக்கள் சார்பில் துருக்கி அதிகாரிகளும் ஜனாதிபதி ஆசாத் சார்பில் ரஷ்யா, ஈரான் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது.

ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி ஆசாத் பத்திரமாக வெளியேற கிளர்ச்சிக் குழுக்கள் ஒப்புக் கொண்டன. இதேபோல சிரியாவின் லடாகியாவில் உள்ள ரஷ்ய கடற்படைத் தளம், சிரியாவின் கிமெய்மிம் பகுதியில் உள்ள ரஷ்ய விமானப் படைத் தளம் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று கிளர்ச்சிக் குழுக்கள் உறுதி அளித்தன.

இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் திகதி நள்ளிரவில் சிரிய ஜனாதிபதி ஆசாத் டமாஸ்கஸில் உள்ள தனது மாளிகையில் இருந்து லடாகியாவில் உள்ள ரஷ்ய கடற்படைத் தளத்துக்கு ரகசியமாக சென்றார். அங்கிருந்து கடந்த 8-ம் திகதி சிறப்பு விமானம் மூலம் அவர் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவை சென்றடைந்தார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாகவே ஜனாதிபதி ஆசாத்தின் மனைவி அஸ்மா மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் ஆகியோர் ரஷ்யாவில் தஞ்சமடைந்து விட்டனர். தற்போது ஜனாதிபதி ஆசாத்தும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என்று ரஷ்ய உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆஸ்திரியாவில் உள்ள ரஷ்ய தூதர் உலினோவ் கூறும்போது, “சிரிய ஜனாதிபதி ஆசாத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா அடைக்கலம் அளித்துள்ளது. எங்களது நண்பர்களை நாங்கள் ஒருபோதும் கைவிட மாட்டோம்” என்று தெரிவித்தார்.

ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மரியா கூறும்போது, “விமான விபத்தில் ஜனாதிபதி ஆசாத் உயிரிழந்துவிட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் பொய்களை பரப்பின. இதற்காக மேற்கத்திய ஊடகங்கள் வெட்கி தலைகுனிய வேண்டும்” என்று தெரிவித்தார்.

துருக்கியே இஸ்ரேலின் அடுத்த இலக்கு: எர்டோகன் எச்சரிக்கை
துருக்கியே இஸ்ரேலின் அடுத்த இலக்கு: எர்டோகன் எச்சரிக்கை

இஸ்ரேலிய படைகள் லெபனானுக்கு பிறகு துருக்கி மீது தாக்குதல் நடத்தலாம் என்று அந்நாட்டின் ஜனாதிபதி எர்டோகன் விடுத்துள்ள எச்சரிக்கை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

காசாவில் இராணுவ நடவடிக்கையை நடத்திய பிறகு, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேலிய படைகள் லெபனானுக்கு பிறகு துருக்கி மீது தான் தாக்குதல் நடத்தலாம் என்று எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

“இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தற்போது இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையிலான சண்டையாக கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது.

அப்போது ஹிஸ்புல்லா தலைவர் மற்றும் பல தளபதிகள் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இஸ்ரேலின் இந்த தீவிர போக்குக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று இரவு ஈரான் இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் ஈரானின் சில ஏவுகணைகளை தடுத்து இருந்தாலும், பல ஏவுகணைகள் இஸ்ரேலின் கடற்கரை நகரங்கள் மற்றும் மத்திய இஸ்ரேலை நோக்கி தொடர்ந்து சென்றது என்றே தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானின் தாக்குதலுக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஈரான் தவறிழைத்து விட்டதாகவும், இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

ஆக்கிரமிப்பு மற்றும் பயங்கரவாதம் ஏற்கனவே நமது வாசலில் உள்ளது, தற்போது நாம் எதிர்கொள்வது சட்டத்திற்கு கட்டுப்பட்ட நாட்டை அல்ல, இரத்தத்தை உண்ணும் கொலையாளி குழுவுக்கே” என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற குடும்பம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற குடும்பம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு குடும்பம் இரண்டு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போலியான ஆவணங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டினை பயன்படுத்தி இத்தாலி செல்ல முற்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிரியாவை சேர்ந்த 7 பேர் கொண்ட இரண்டு குடும்ப உறுப்பினர்களே குடிவரவு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை நோக்கி செல்லவிருந்த AI -282 விமானத்தில் பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது அவர்களின் கடவுச்சீட்டுகளில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து அதிகாரிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தினர். அவை போலியான முறையில் தயாரிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களின் கடவுச்சீட்டுக்கள் துருக்கியிலுள்ள நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு தலா 2000 அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளது.

ஸ்கேனர் டெஸ்ட், எலெக்ட்ரானிக் கேட்ஸ் போன்ற அதி நவீன சோதனைகளில் சிக்க முடியாத வகையில் உயர் தொழில்நுட்ப சிப்களை பயன்படுத்தி இந்த கடவுச்சீட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.