TN Assembly Election 2026. – tamilnaadi.com

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது
தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது.

எனவே, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகள் உள்பட 5 மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 824 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல் திகதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று (15) டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

அதன்படி, 234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 23- ந் திகதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ஆம் திகதி தொடங்குகிறது.

வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 6-ஆம் திகதி முடிகிறது. வேட்பு மனு பரிசீலனை ஏப்ரல்7 ஆம் திகதி இடம்பெறுகிறது.

வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாள் ஏப்ரல் 9 ஆம் திகதி ஆகும். ஏப்ரல் 23 ஆம் திகதி வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் திகதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

அன்று காலை 10 மணி முதல் முன்னணி நிலவரமும், மாலை முதல் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரமும் தெரியவரும். அன்று இரவே தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்து விடும்.

தமிழக சட்டசபை தேர்தல் – ஏப்ரல் 23-ம் திகதி

வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம் – மார்ச் 30-ம் திகதி

மனுத்தாக்கலுக்கு கடைசி நாள் – ஏப்ரல் 6-ம் திகதி

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை – ஏப்ரல் 7-ம் திகதி

மனுக்கள் திரும்ப பெற கடைசி நாள் – ஏப்ரல் -9-ம் திகதி

வாக்குப்பதிவு – ஏப்ரல் 23-ம் திகதி

வாக்கு எண்ணிக்கை – மே 4-ம் திகதி

இதேவேளை கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களின் தேர்தல் ஏப்ரல் 9 ஆம் திகதியும், மேற்கு வங்காளத்தின் தேர்தல் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோட்டைக்குச் செல்லும் பாதை எது? வேளச்சேரியில் களம் இறங்குகிறாரா விஜய்?
தமிழக அரசியலுக்கும் திரைத்துறைக்கும் இடையிலான பிணைப்பு அரை நூற்றாண்டைக் கடந்து தொடர்ந்து வருகிறது. எம்.ஜி.ஆர் முதல் கமல்ஹாசன் வரை பல நட்சத்திரங்கள் தேர்தல் களம் கண்டுள்ள நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல் முறையாக சட்டசபை தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறார்.

தமிழக அரசியலில் முத்திரை பதித்த நடிகர்கள் தங்கள் முதல் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள்:

எம்.ஜி.ஆர் – 1967- பரங்கிமலை – வெற்றி

சிவாஜி கணேசன் -1989 – திருவையாறு – தோல்வி

ஜெயலலிதா – 1989 – போடிநாயக்கனூர் – வெற்றி

விஜயகாந்த் – 2006 – விருத்தாசலம் – வெற்றி

கமல்ஹாசன் – 2021 – கோவை தெற்கு – தோல்வி

விஜய் போட்டியிடப்போகும் தொகுதி குறித்துப் பல்வேறு யூகங்கள் (மதுரை, விக்கிரவாண்டி, விருகம்பாக்கம்) நிலவி வந்த நிலையில், தற்போது வேளச்சேரி தொகுதி முன்னிலையில் உள்ளது.

இதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுபவை:

ஜோதிட ரீதியாக ‘வி’ எழுத்தில் தொடங்கும் தொகுதிகள் விஜய்க்கு ராசியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

இங்கு ஐ.டி (IT) துறையில் பணிபுரியும் இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். இது விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்குச் சாதகமாக அமையும் எனக் கணிக்கப்படுகிறது.

விஜய்யின் இல்லம் அமைந்துள்ள பனையூருக்கு மிக அருகில் இருப்பதால், பிரசாரப் பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும்.

2011-இல் உருவான இத்தொகுதியில் தி.மு.க அல்லது அ.தி.மு.க இன்னும் வலுவாகக் கால் ஊன்றவில்லை. தற்போது காங்கிரஸ் வசம் உள்ள இத்தொகுதி, வரும் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் வரிசையில் முதல் தேர்தலிலேயே விஜய் வெற்றி பெற்று முத்திரை பதிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தேர்தல் திகதி அறிவிக்கப்படும் வரை இந்த ‘சஸ்பென்ஸ்’ நீடிக்கும் என்பதில் சந்தேகமில்லை

யாருடைய அழுத்தத்திற்கும் பணியமாட்டேன்: மாமல்லபுரத்தில் தவெக தலைவர் விஜய் ஆவேச உரை!
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று (25) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் விஜய், தனது அரசியல் நிலைப்பாடு மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் இலக்கு குறித்து அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

நான் யாருடைய அழுத்தத்திற்கும் அடங்குபவன் அல்ல. எனக்கு இருக்கும் ஒரே அழுத்தம் மக்கள் படும் துயரத்தைப் பற்றியதுதான். யாரிடமும் அண்டிப் பிழைப்பதற்காகவோ அல்லது அடிமையாக இருப்பதற்கோ நான் அரசியலுக்கு வரவில்லை என அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

அரசியலில் ஒரு ரூபாய் கூட ஊழல் செய்ய மாட்டேன் என உறுதிபூண்ட அவர், எதற்கும் ஆசைப்படாத ஒருவனால் மட்டுமே தவறுகளைத் தைரியமாகத் தட்டிக் கேட்க முடியும் எனச் சுட்டிக்காட்டினார்.

தனது மண்ணுக்கும் மக்களுக்கும் ஒரு பிரச்சினை வரும்போது அதைத் தடுக்க வேண்டிய கடமை தனக்கு இருப்பதாகவும், அதற்காகவே அரசியலில் களமிறங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட ‘விசில்’ சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது வெறும் தேர்தல் மட்டுமல்ல, அது ஒரு ‘ஜனநாயகப் போர்’ என்றும், இதில் வெற்றியைத் தீர்மானிக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், தமிழ்நாட்டை ஆள்பவர்கள் மற்றும் ஆள நினைப்பவர்கள் குறித்துத் தனது விமர்சனங்களை முன்வைத்ததுடன், மாற்றத்திற்கான சக்தியாகத் தமிழக வெற்றிக் கழகம் திகழும் எனத் தெரிவித்தார்.