Thaiyitty Tissa Vihara Protest – tamilnaadi.com

தையிட்டியில் பதற்றம்: விகாரைக்கு முன்னால் காணி உரிமையாளர்கள் போராட்டம் – பொலிஸார் குவிப்பு!
சட்டவிரோதமாகத் தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக, இன்று (சனிக்கிழமை) காலை முதல் காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாரிய எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

தமது பாரம்பரியத் தனியார் காணிகளை விடுவிக்கக் கோரியும், அங்கு சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ளதை எதிர்த்தும் உரிமையாளர்கள் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர்.

இன்றைய பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு, சிகிரியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட புதிய புத்தர் சிலை ஒன்றினை விகாரையில் நிறுவுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இன்றைய போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

போராட்டம் காரணமாக அப்பகுதியில் அசாதாரண சூழல் நிலவுவதைத் தொடர்ந்து, பொலிஸார் பெருமளவில் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டுக் குவிக்கப்பட்டுள்ளனர். விகாரைக்கான நுழைவுப் பாதைகள் மற்றும் போராட்டப் பகுதிகளைச் சூழப் பொலிஸார் பாதுகாப்பு அரண்களை அமைத்துள்ளனர்.

தையிட்டி பகுதியில் வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்த மக்களின் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில், அங்கு திஸ்ஸ விகாரை நிர்மாணிக்கப்பட்டமைக்குத் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் தரப்பிலிருந்து தொடர்ச்சியான எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தையிட்டியில் நாளை பாரிய போராட்டம்: சட்டவிரோத விகாரை என அறிவிப்புப் பலகை நடவும் தீர்மானம்!
யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை அடாத்தாகக் கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராகவும், அதன் விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவப் பதவிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நாளை (21) ஞாயிற்றுக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் இணைந்து இந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். நாளை காலை 09:00 மணியளவில் விகாரைக்கு முன்பாக இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

விகாரைக்காக அடாத்தாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

விகாரையின் விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரருக்கு, ‘வட இலங்கை துணை தலைமைச் சங்கநாயக’ பதவி வழங்கும் விழா நாளை நடைபெறவுள்ளது. புத்தசாசன மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தலைமையில் நடைபெறவுள்ள இந்த கௌரவிப்பு நிகழ்வுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (18) நடைபெற்ற வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) முழுமையான ஆதரவுடன் ஒரு முக்கிய பிரேரணை நிறைவேற்றப்பட்டது. தையிட்டி விகாரைக்கு முன்பாக “இது ஒரு சட்டவிரோதமான விகாரை” எனத் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அறிவித்தல் பலகை நாட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விகாரை விவகாரம் தொடர்பாகத் தையிட்டி பகுதியில் நீண்டகாலமாகப் பதற்றம் நிலவி வரும் சூழலில், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் காணி உரிமையாளர்கள் இணைந்து முன்னெடுக்கும் இந்தப் போராட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.