terrorist – tamilnaadi.com

பயங்கரவாத தாக்குதல்! – அச்சமடைய வேண்டாம் என்கிறது பாதுகாப்பு அமைச்சு!
” பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள புலனாய்வு தகவல் தொடர்பில் விசாரணை இடம்பெறுகின்றது. பொதுப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி உச்சக்கட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.” – என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், பொதுமக்கள் வீணாக குழப்பமடைய வேண்டியதில்லை என்றும், தமது அன்றாட நடவடிக்கைகளை அச்சமின்றி முன்னெடுத்துச் செல்லுமாறும் பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் ஊடக பிரிவால் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற புலனாய்வுத் தகவல் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருக்கு, பொலிஸ்மா அதிபர் அனுப்பிய கடிதமொன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

‘கறுப்பு ஜூலையை’ நினைவு கூரும் வகையில், இம்மாதம் 05 மற்றும் 06ஆம் திகதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று குறிப்பிட்டு புலனாய்வு வட்டாரங்கள் மூலம் கிடைக்கப் பெற்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது உறுதிப்படுத்தப்படாத புலனாய்வுத் தகவல் ஆகும்.

மேலும் ‘கறுப்பு ஜூலை’யைத் தொடர்புபடுத்தி இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல் தொடர்புடைய அடிப்படை தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கபெற்றில்லை .

இந்த தாக்குதல் பயங்கரவாதக் குழுக்களால் நடத்தப்படலாம் என்றும், அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்த அல்லது நிலைகுலையச் செய்ய அரச எதிர்ப்பு குழுக்களால் நாட்டில் வன்செயல்களை உருவாக்கக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற மேற்படி புலனாய்வு தகவல்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் அதேசமயம் பொதுப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி உச்சக்கட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பொதுமக்கள் வீணாக குழப்பமடைய வேண்டாம் என்றும், தமது அன்றாட நடவடிக்கைகளை அச்சமின்றி முன்னெடுத்துச் செல்லுமாறும் பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொள்கிறது.” – என்றுள்ளது.

#SriLankaNews

5 தீவிரவாதிகள் காஷ்மீரில் சுட்டுக்கொலை!!
ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடந்த 12 மணித்தியாலங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய இருவேறு என்கவுண்டர் சம்பவங்களில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா , ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனை ஜம்மு காஷ்மீர் காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

குட்கா மற்றும் புல்வாமா மாவட்டங்களில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் அங்கு தங்கியிருந்த பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றதாக காஷ்மீர் ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்டவர்களில் ஜெய்ஷ்-இ-முகமது கமாண்டர் பயங்கரவாதி அத்வானி முக்கியமானவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாதத்தில் மட்டும் இதுவரை நடைபெற்ற 11 என்கவுண்டரில் பாகிஸ்தானைச் சேர்ந்த 8 பேர் உட்பட மொத்தம் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

#WorldNews

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு பேஸ்புக் நிறுவனம் தடை விதிப்பு!
விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பேஸ்புக் நிறுவனம் தமது வகைப்படுத்தலின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் பதிவிடும் பொதுபல சேனா அமைப்பும் தடை செய்யப்பட்டுள்ளதோடு, ‘சிங்ஹலே’ என்ற அமைப்புக்கும் தடை விதித்துள்ளது. .

வருடா வருடம் பேஸ்புக் நிறுவனம் இற்றைப்படுத்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல்களுக்கு விளம்பரங்களை மேற்கொள்வதற்கு உலகில் உள்ள பல்வேறு அமைப்புகளுக்கு தடை விதிக்கும்.

அவ்வாறே இம்முறை இலங்கையில் குறித்த மூன்று அமைப்புகளும் தடை விதித்துள்ளது.

#SriLankaNews

பயங்கரவாதிகளின் தாக்குதலால் பறிபோன இரு உயிர்கள்!
இந்தியா ஜம்மு-காஷ்மீர் ஜேவன் பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அத்தோடு 14 பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

பயங்கரவாதிகளால் பொலிஸாரின் வாகனம் மீதே இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் தொடர்பான தகவல்களை காஷ்மீர் மண்டல பொலிஸார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

#IndiaNews

இந்தியாவின் அதிரடி தாக்குதல் – தீவிரவாதி சுட்டுக்கொலை
இந்திய இராணுவம் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் சாவடைந்துள்ளார்.

இந்தியா ஜம்மு- காஷ்மீரில் இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டாா்.

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் அஷ்முஜி பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு இந்திய இராணுவத்தினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது இந்திய இராணுவத்தினர் அதிரடி தாக்குதல் மேற்ற்கொண்டனர்.

அதில் தீவிரவாதிஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டாா்.

இதனால் அங்கு பதற்றநிலை உருவாகியுள்ளது.

#india

காஸ்மீரில் தொடரும் பயங்கரவாத வேட்டை-நேற்றும் தாக்குதல்!
இந்தியா காஸ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவி வருவதால் அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை இந்திய இராணுவம் முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் நேற்று அங்கு இடம்பெற்ற பயங்கரவாதிகளுக்கும், இராணுவத்தினருக்குமான மோதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதுடன், சம்பவத்தில் பாதுகாப்பு படையினர் மூவர் காயமடைந்துள்ளனர்.

காஸ்மீரின் பூஞ்ச் ரஜவுரிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியில் கடந்த 14 நாட்களாக பயங்கரவாதிகளைத் தேடும் பணிகளை இராணுவத்தினர் முடுக்கி விட்டுள்ள நிலையில், நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#india

பயங்கரவாதிகளின் தாக்குதலில் 5 இராணுவ வீரர்கள் பலி!
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடாத்திய தாக்குதலில் சிக்கி 5 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

இராணுவ உயர் அதிகாரி உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளார்.

மேலும் மூன்று பேர் அந்தப் பகுதியில் தப்பித்துச் சென்றுள்ளனர்.

தீவிரவாதிகளை கைது செய்ய என்கவுன்ட்டர் தளத்தில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தலிபான்கள் ஆட்சியின் புதிய தலைவர் நியமனம்!
ஆப்கானிஸ்தானின் புதிய இடைக்கால அரசில் அங்கம் வகிப்பவர்களின் விவரத்தை தலிபான்கள் தலைமை தற்போது அறிவித்துள்ளது.

அதன்படி புதிய தலைவராக முல்லா முகமது ஹசன் அகுந்த் என்பவரை தலிபான் தலைமை முன்மொழிந்துள்ளது.

இவர் ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றவராவர். தற்போது தலிபான் அமைப்பின் சக்திவாய்ந்த ரெஹ்பாரி ஷூரா குழுவின் தலைவராக இருக்கிறார். இந்த குழுதான் மிக முக்கியமான விவகாரங்களில் முடிவை எடுக்கும் அதிகாரம் கொண்டதாகக் காணப்படுகிறது.

முல்லா முகமது ஹசன் ஆப்கானிஸ்தானில் 1996 முதல் 2001 வரை நடந்த தலிபான்கள் அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் துணை பிரதமராகவும் இருந்தவர் .

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் தற்போது புதிய அரசை தலிபான்கள் நிறுவியுள்ளனர்.

இந்த நிலையில் தலைநகர் காபூலில் புதிய தற்காலிக அரசில் அங்கம் வகிப்போரின் விவரங்கள் வெளியாகியுள்ளன. முறைப்படி புதிய அரசு அமையும்வரை இவர்கள் அரசில் அங்கம் வகிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இடைக்கால பிரதமராக மெளலவி ஹெபடூலா அகூந்த்ஸாதா, துணைப் பிரதமராக மெளலவி கனீ பரதா், உள்துறை அமைச்சராக சிராஜூதீன் ஹக்கானி, பாதுகாப்பு அமைச்சராக மெளலவி யாகூப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நியூயோர்க் தாக்குதல் – ஆவணங்களை வெளியிட பைடன் உத்தரவு!
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற இரட்டைக் கோபுரத் தாக்குதல் தொடர்பில் புலனாய்வுத் துறையினரால் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடா்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு அதிபா் ஜோ பைடன் நீதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவத்தின் 20 ஆவது ஆண்டு நினைவுதினம் சில நாள்களில் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இந் நினைவு தினத்தை முன்னிட்டு அமெரிக்க அதிபா் பைடன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.

நியூயோர்க் நகரில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்ரெம்பா் மாதம் 11 ஆம் திகதி இரு கோபுரங்களைக் கொண்ட வா்த்தக மையத்தில் அல்-கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா்.

பயணிகள் விமானங்களைக் கடத்தி இரட்டைக் கோபுர கட்டடத்தின் மீது மோதச்செய்து நடத்தப்பட்ட கோரத் தாக்குதலில் 2 ஆயிரத்து 977 போ் உயிரிழந்தனா்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரின் விருப்பத்தின்படி. தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்கள் இன்னும் ஆறு மாதங்களில் கட்டங்கட்டமாக வெளியிடப்படவுள்ளன,

குறித்த பயங்கரவாதத் தாக்குதலில் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான சவூதி அரேபிய அரசின் கீழ்நிலை அதிகாரிகள் இரட்டைக் கோபுரத் தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று நாடாளுமன்றக் குழு மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளது என சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தன.

எனவே இந்த தாக்குதல் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை அடங்கிய இரகசிய ஆவணங்கள் கட்டங்கட்டமாக வெளியிடப்படவுள்ளன – எனத் தெரிவித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்.