tamilnaadiews – tamilnaadi.com

29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி
29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் நாளை (27) ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி, விவசாயிகளிடம் இருந்து வாங்கும் நெல்லை அரிசியாக மாற்றி, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசு வழங்க உள்ளது.

ஒரு குடும்பத்திற்கு மாதாந்தம் 10 கிலோ அரிசி வீதம் இரண்டு மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரிசியை கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, காலி, மாத்தறை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

மீண்டும் ரஷ்ய விமான சேவை இன்று முதல்!
ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிப்பதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்தார். வாராந்தம் இரண்டு விமான சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விமான சேவைகள் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, ஏரோஃப்ளோட் விமான சேவைக்கு மேலதிகமாக ரஷ்யாவின் அசூர் எயார் விமான சேவைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விமானம் வாராந்தம் நான்கு தடவைகள் இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து இந்த விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

#SriLankaNews

வெள்ளவத்தை கடற்பகுதியில் 40 முதலைகள்!!
வெள்ளவத்தை கடற்பகுதியில் 40 முதலைகள் சுற்றி திரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கின்ரோஸ் உயிர்காக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் திவங்க பெர்னாண்டோ என்பவர் வெள்ளவத்தை கடலில் நீராடும் போது முதலை குட்டியொன்றை பிடித்துள்ளார். குறித்த முதலைக் குட்டியை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, சவோய் சினிமாவிற்கு அருகில் உள்ள கால்வாயில் நான்கு பெரிய முதலைகளை அவதானிக்கப்பட்ட நிலையில், வெள்ளவத்தை கடற்பகுதியில் 40 முதலைகளை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த முதலை அச்சுறுத்தல் குறித்து கின்ரோஸ் உயிர்காப்பு நிறுவனம் வனவிலங்கு அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கடலில் குளிப்பதும் ஆபத்தாக மாறியுள்ளது.

கடந்த வருடம் தெஹிவளையில் மீனவர் ஒருவர் முதலையால் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடலில் குளிக்க செல்லும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வீட்டில் பிரச்சனையா? – கற்பூரம் ஏற்றும் போது இதை செய்யுங்க
வீட்டில் வரக்கூடிய பெரிய பெரிய பிரச்சனைகளை கூட சுலபமாக தீர்க்கக் கூடிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். நம்பிக்கை இல்லாமல் செய்யக்கூடிய பரிகாரங்கள் பலனும் கொடுக்காது.

ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேலே ஒரு மண் அகல் விளக்கை வைத்து, அதில் ஒரு கட்டி கற்பூரத்தை ஏற்றிக்கொள்ள வேண்டும். மெழுகு கற்பூரம் பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டாம். சூடம் என்று சொல்லப்படும் கற்பூரத்தை இந்த பரிகாரத்துக்கு பயன்படுத்துங்கள்.

ஒரு கட்டி கற்பூரத்தை வைத்து ஏற்றி அதில் இரண்டு கிராம்பு போட வேண்டும். அதிலிருந்து நமக்கு ஒரு வாசம் வெளியேறும். கற்பூரத்தோடு கிராம்பு சேர்ந்து எரியும்போது இந்த புகையை உங்கள் வீடு முழுவதும் காண்பிக்கலாம்.

உதாரணத்திற்கு கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு இருக்கிறது என்றால் படுக்கை அறையில் இந்த கிராம்பு புகையை காண்பியுங்கள். வீட்டில் சொந்த பந்தங்களுக்கிடையே அதிக சண்டை சச்சரவு வருகிறது என்றால் வரவேற்பு அறையில் இந்த கிராம்பு புகையை காண்பியுங்கள். இது மட்டுமல்லாமல் உங்கள் வீட்டில் இருக்கும் மற்ற அறைகளிலும் இந்த சூடத்தை காண்பிக்கலாம்.

இந்தப் புகை உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை அழித்து நல்லதை செய்யும். தேவையற்ற கண் திருஷ்டி இருந்தாலும் அதை பொசுக்கக் கூடிய தன்மை இந்த வாசத்திற்கு உண்டு. சுவாமி அறையில் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் கற்பூர ஆரத்தியை சுவாமிக்கு காண்பிப்போம் அல்லவா. அப்படி கற்பூர ஆரத்தி காண்பிக்கும் போது அந்த கற்பூர தீபத்தில் கொஞ்சமாக வெல்லம் சேர்க்கலாம். அப்படி இல்லை என்றால் டைமன் கற்கண்டுகளை சேர்க்கலாம்.

எரிந்து கொண்டிருக்கும் அக்கினி பகவானை சாந்தியடைய செய்வதற்காக இந்த ஒரு பரிகாரம். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நமக்கு என்ன நன்மை கிடைக்கும். வீட்டில் தீயாய் இருக்கும் பிரச்சனைகள் சுமூகமாக ஒரு முடிவுக்கு வரும். அக்னி பகவானிடம் இனிப்பை பிரசாதமாக கொடுத்து, வீட்டு பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இந்த சின்ன பரிகாரத்தை செய்து பாருங்கள். நீங்களே நம்ப முடியாத அதிசயம் நிச்சயம் வீட்டில் நடக்கும்.

#astrology

கோதுமை மாவின் விலை 350!!
கோதுமை மாவின் விலை 350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை நேற்று முதல் 350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக இந்த வாரம் முதல் பாண் ஒன்றின் விலை 250 ரூபாவாக அதிகரிக்கவேண்டிவரும் என அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு எரிபொருள்
இலங்கையின் கடற்படை மற்றும் விமானப்படைக்கு எரிபொருள் வழங்க இந்தியாவுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது.

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம், இன்று (22) வெளியிட்ட டுவிட்டர் பதிவிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கடற்படை மற்றும் விமானப்படைக்கு எரிபொருள் வழங்க இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதில் அவுஸ்திரேலியா மகிழ்ச்சியடைகிறது என்றும் இது நாடு கடந்த குற்றங்களுக்கு எதிரான நமது நீண்டகால ஒத்துழைப்பு தொடர உதவும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் அண்டை நாடுகளான, மூன்று நாடுகளும் பிராந்திய பாதுகாப்பைப் பாதுகாப்பதில் உறுதிப்பாட்டை பகிர்ந்து கொள்கின்றன என்று அந்தப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவை அடைய விரும்பும் பல இலங்கையர்களுடன் மனித கடத்தலை எதிர்த்து இலங்கையும் அவுஸ்திரேலியாவும் நெருக்கமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

ஆங்கிலத்தில் பேச மறுத்த பஸில்!!
காகத்தை ஆங்கிலத்தில் ‘கப்புடா’ என விளித்து, சர்வதேச அளவில் ஹிட்டான பஸில் ராஜபக்ச, கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஆங்கில மொழியில் கருத்து வெளியிட மறுத்தார்.

தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில், விளக்கமளிப்பதற்காக பஸில் ராஜபக்ச ஊடக சந்திப்பொன்றை மொட்டு கட்சி தலைமையகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் பங்கேற்ற ஊடகர் ஒருவர், பஸில் ராஜபக்சவிடம் ஆங்கில மொழியில் கேள்வி கேட்பார்.

இதற்கு சிறிது நேரம் ஆங்கிலத்தில் பதிலளித்த பஸில், ஒரு கட்டத்தில் தடுமாறினார்.

சுதாகரித்துக்கொண்ட அவர் , ஏற்கனவே, ‘கப்புடா’ சர்ச்சையில் சிக்கியுள்ளேன். தெரிந்த மொழியிலேயே கதைக்கின்றேன் எனக் புன்னகையுடன் குறிப்பிட்டு ,உரையை தொடர்ந்தார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் காகத்துக்கு ‘கிரவ்’ என கூறாமல், சிங்கள மொழியில்போன்று ‘கப்புடா’ என பஸில் குறிப்பிடுவார்.

அந்த விடயம் சமூகவலைத்தளங்களில் ஹிட்டானது. ‘கப்புட்டு கா…கா…. பஸில், பஸில்’ என பாடல்கூட இயற்றப்பட்டது. பலரின் தொலைபேசிகளில் ரிங் டோனாகவும் மாறியது.

தனது தொலைபேசி ரிங்டோன்கூட அதுதான் என பஸில் இன்று குறிப்பிட்டார்.

#SriLankaNews

ஜெயம் ரவியுடன் அடுத்தடுத்து படங்கள்! – லேட் ஆனாலும் லேட்டஸ்ட் தான் போங்க
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி.

த்ரிஷா, நயன்தாரா, ஹன்சிகா, காஜல் அகர்வால், ராசி கண்ணா, தமன்னா உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகள் உட்பட பலருடன் இணைந்து வெற்றிப் படங்களை கொடுத்தவர்.

ஜெயம் ரவி நடிப்பில் இறுதியாக பூமி திரைப்படம் வெளிவந்தது. முன்னணி இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாரத்தில் நடித்துள்ளார். படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில், ஜெயம் ரவி அகிலன், ஜன கண மண உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரின் அடுத்த படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் ஆண்டனி இயக்கத்தில், சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் இணையவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே இயக்குனர் ராஜேஷ் – ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம் ஒன்றிழும் கீர்த்தி சுரேஸ் நாயகியாக நடிக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அறிமுக இயக்குனர் ஆண்டனி படத்திலும் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Cinema