tamilnaadi – tamilnaadi.com

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ கஞ்சா மீட்பு
சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுகம் அருகே உள்ள கடற்கரையில் நேற்று(7) காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த .10 லட்சம் இந்திய மதிப்பிலான 50 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லை ஊடாக படகுகளில் இலங்கைக்கு கஞ்சா, ஐஸ் போதைப்பொருள், பீடி இலை பண்டல்கள், கடல் அட்டை, சமையல் மஞ்சள், திமிங்கலம் துடுப்பு, சுக்கு உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுக கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தி செல்ல இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குழுவாக ராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து சேராங்கோட்டை வரை கடற்கரை பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கஞ்சா மூட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் காரில் இருந்த மூவரை பிடித்து விசாரணைக்காக ராமேஸ்வரம் துறைமுகம் பொலிஸ் நிலையத்திற்கு தனிப்பிரிவு பொலிஸார் அழைத்து சென்றனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் கஞ்சா மூட்டைகள் படகில் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக கொண்டுவரப்பட்டதாக தெரிவித்ததுடன் அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் தங்கச்சிமடம் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளை சேர்ந்த ஆறு நபர்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 50 கிலோ கஞ்சாவின் இந்திய மதிப்பு ரூ.10 லட்சம் என்றும், பிடிபட்ட கார் ரூ.5 லட்சம் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கடற்கரை பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கை ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தீஷ் எச்சரித்துள்ளார்.

ராமேஸ்வரம் துறைமுகத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது கடற்றொழில் கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு வெள்ளவத்தையில் சந்தேகத்துக்குரிய மரணம்
கொழும்பு- வெள்ளவத்தையைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர், சந்தேகத்துக்குரிய நிலையில் மரணமானமை குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வேலவனாராம வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்குள் மயக்க நிலையில் அவர் மீட்கப்பட்டு பின்னர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அங்கு அவர் இறந்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று ஜூன் 7 ஆம் திகதி நிகழ்ந்துள்ளது.

உள்ளூர்வாசிகளிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டின் பேரில் வெள்ளவத்தை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் இறந்தவர் வெள்ளவத்தையில் உள்ள வேலவனாராம வீதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், இன்று பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பை வைத்து அரசியல் செய்யும் இனவாதிகள்! சமூக ஆர்வலர் ஆதங்கம்
இந்த நாட்டில் உள்ள இனவாதிகள், மற்றும் மதவாதிகள் தங்கள் அதிகாரத்தை இழக்கும் ஒவ்வொரு முறையும், விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் எழுச்சி பெறுவதாக பொய்களைப் பரப்பி வருகின்றனர் என சமூக ஆர்வலர் சிரிந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒற்றுமையை அழிக்க பொய்யான அறிக்கைகளை வெளியிடுபவர்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி இன்று பொலிஸ் முறையாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

ஊடகங்களுக்கு இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இந்த நாட்டில் உள்ள இனவாதிகள், மற்றும் மத வெறியர்கள் வெள்ளவத்தை கடற்கரையில் உறவினர்களுக்காக நடத்திய நினைவு நிகழ்வை சீர்குலைக்க முயன்றனர்.

அங்கு சென்றவர்களின் குடும்பத்தின் ஒரு உறவினர் போரின் போது இறந்திருக்கலாம். அவர்களை நினைவு கூறுவது தவறல்ல, ஒரு உறவினரை இழந்ததன் வலி குடும்பத்தினருக்கு மட்டுமே தெரியும்.

எனவே, சமீபத்தில் வெள்ளவத்தை கடற்கரையில் தமது உறவுகளை போரில் இழந்தவர்களால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இது விடுதலைப் புலிகளை வளப்படுத்தவோ அல்லது மீண்டும் எழுச்சி பெறவோ அனுமதிக்காது.

இவ்வாறான செயற்பாடுகளினால் பாதிப்புறும் இந்த நாட்டில் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்” என்றார்.

மஹிந்தானந்தவிற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்தவிற்கு எதிராக மேலும் ஒரு வழக்குத் தொடரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கரம் போர்ட் சம்பவம் தொடர்பிலேயே இந்த வழக்கும் தொடரப்பட உள்ளதாக சட்டத்துறைசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரம் போர்ட் சம்பவம் தொடர்பில், ஊழல் மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னதாக வழக்குத் தொடரப்பட்டு அதற்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த கரம் போர்ட் விநியோகம் குறித்த கொடுக்கல் வாங்கல்களில் சூழ்ச்சி செய்ததாக மஹிந்தானந்த மீது குற்றவியல் வழக்குத் தொடரப்பட உள்ளது.

குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் இந்த வழக்கு தொடரப்பட உள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அப்போதைய செயலாளர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட உள்ளனர்.

கரம் போர்ட் விவகாரத்தில், மஹிந்தனாந்த அலுத்கமகேவிற்கு ஏற்கனவே 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை ஆட்டிப்படைக்கும் கொலைக்கலாசாரமும் குற்றச்செயல்களும்.. நாமல் வெளியிட்டுள்ள தகவல்
ஜனவரி முதல் பகல் நேர துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகளில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் சர்ச்சைக்குரிய பொருட்களைக் கொண்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் ஜனவரி மாதம் எந்த ஆய்வும் இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதவில் குறிப்பிட்டுள்ளார்.

“அரசாங்கம் பொறுப்பேற்க மறுக்கிறது. நிதி மோசடியில் ஈடுபட்ட ஒரு கைதி வெசாக் பண்டிகையின் போது ஜனாதிபதியின் பொது மன்னிப்புடன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும், ஜனாதிபதி ஊடகம் இப்போது அதை மறுக்கிறது. கைதி எவ்வாறு விடுவிக்கப்பட்டார் என்பது குறித்து சிஐடி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.

சிறை அதிகாரிகள் தாங்களாகவே செயல்பட்டார்கள் என்று இது அர்த்தப்படுத்துகிறதா? இன்றைய சட்டம் ஒழுங்கு நிலை இதுதான்.

நல்லாட்சி மற்றும் வலுவான தலைமையைக் கேட்டு ஒவ்வொரு தருணத்திலும் எதிர்ப்புத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தி இன்று, வெறும் ஆறு மாதங்களுக்குப் பிறகு, நாட்டின் மீதான தனது பிடியை இழந்துவிட்டது” என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்களை கேவலப்படுத்தும் தென்னிந்திய ஊடகங்கள் : பின்னணியில் அரங்கேற்றப்படும் சதி
அண்மைக்காலமாக சர்வதேச ஊடகங்களில் இலங்கைத் தமிழர்கள் வறுமையில் வாடுவதாகவும், போரினால் நலிந்து போயுள்ளதாகவும் என்ற விம்பத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன.

சர்வதேச மேடைகளில், குறிப்பாக தென்னிந்திய தொலைக்காட்சிகளில் இலங்கையின் வறுமை என்பது ஒரு நுட்பமாக, அனுதாபம் என்ற பெயரில் விற்கப்படும் செயல்முறையாக பரவலாக காணப்படுகின்றது.

தென்னிந்திய தொலைக்காட்சிகளில் அண்மைக்காலமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பலராலும் மிகவும் இரசிக்கப்பட்டு வரும் நிகழ்ச்சியாக பாடல் போட்டி நிகழ்ச்சிகள் முதன்மை பெற்று வருகின்றன.

இந்த நிகழ்ச்சிகள் காலகாலமாக மக்களால் விரும்பப்பட்டு பார்க்கப்படும் நிகழ்ச்சிகளாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சிகளில் இலங்கை போட்டியாளர்களை காட்டும் விதம் விமர்சனங்களையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இது போன்ற செயற்பாடுகள் மக்களிடத்தில் தமது தொலைக்காட்சியை நிலை நிறுத்தும் என்ற பாரிய நம்பிக்கையை உந்துகோளாக கொண்டு, மிக மோசமான ஒரு சமூகத்தை, அவர்களது வறுமையை விற்பனை செய்யும் மோசடி வேலைகளைத் தான் இந்த ஊடகங்கள் கையாண்டு வருகின்றன.

இலங்கையில் வாழ்ந்து வரும் ஒவ்வொரு சமூகத்தினரும், தங்களது வாழிடம், தொழில் உள்ளிட்டவற்றால் வேறுபடுகின்றனர். குறிப்பாக தமிழர்களைப் பொறுத்தமட்டில், வடக்கு – கிழக்கு அதிகமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, பாதிப்புக்களைக் கொண்ட பகுதியாக காணப்படும்.

மலையகத்தைப் பொறுத்தமட்டில் தேயிலைத் தோட்ட தொழில்துறையை நம்பி வாழ்வாதாரத்தைக் கொண்ட பகுதியாக காணப்படும்.

இங்கு வறுமை என்பது பொதுவானதே. இருப்பினும், இதே வறுமையை ஆதாரமாகக் கொண்டு பட்டம் பெற்று, பல்வேறு துறைகளில் சாதித்த, சாதித்துக் கொண்டிருக்கும், சாதிக்க காத்திருக்கும் பல தலைமுறைகள் இங்கு உண்டு.

ஆனால், இதேபோன்று தனது திறமைக்கு அங்கீகாரம் தேடி தென்னிந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெறும் இலங்கையர்கள் விற்பனைப் பொருட்களாக நோக்கப்படுவது என்பது நிச்சயமாக பணத்திற்காக ஒரு சமூகத்தையே இழிவுபடுத்தும் மோசடியாகவே பார்க்கப்பட வேண்டும்.

அங்கு திறமையைவிட, வறுமைக்கும், அனுதாப அலைக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. திறமையாளர்களின், சமூகம், வறுமை, கண்ணீர், ஏன் திறமையும் கூட ஒரு தொலைக்காட்சியின் வருமானத்திற்காக விற்பனை செய்யப்படுகின்றது.

இலங்கையில் இருந்து வந்த போட்டியாளர்கள் என்றால், ஒன்று தேயிலைத் தோட்டத்தில் நொந்து மடிந்து சாப்பாட்டிற்கும் வழியில்லாமல், உண்டியலை உடைத்து விமானம் ஏறிச் சென்றிருக்க வேண்டும்.

இல்லையேல், யுத்தத்தில் செல்லடிப்பட்டு, உறவினரை தொலைத்து யுத்த வடுக்களை சுமந்து சென்றிருக்க வேண்டும். இவற்றையெல்லாம் தவிர்த்து ஒரு சாதாரண திறமையாளனாக அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தொலைக்காட்சி நிறுவனத்தார் விரும்புவதில்லை.

போட்டியாளர்களின் திறமைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றதோ இல்லையோ அங்கு அனுதாபத்திற்கு குறைவே இல்லை என்றே கூறலாம்.

ஒரு சோகக் கதைக்கு திரைக்கதை வசனம் எழுதி மிகச் சிறப்பாக இலங்யைர்களின் வறுமையையும், திறமையையும் சேர்த்து விற்பனை செய்கிறது இந்த ஊடகங்கள்.

மேற்கூறிய அனைத்து இக்கட்டான சூழல்களும், வறுமையும் இன்னும் மாறிவிடவில்லை. இருப்பினும் கால மாற்றத்தால் இலங்கையிலுள்ள மக்கள் அவ்வாறான சூழ்நிலைகளில் இருந்து படிப்படியாக வெளிவந்தாலும் சர்வதேச அளவில் இலங்கையை இன்னமும் பரிதாபமான சூழலிலேயே இந்த நிகழ்ச்சிகள் சித்தரித்து காட்டுகின்றன.

இவ்வாறாக நிகழ்ச்சிகள் ஒருபுறம் இருக்க சில தமிழ் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் அதிலே இன்னமும் இலங்கை யுத்தம், அகதிகள், வறுமை இவை அடிக்கடி அங்கு கையாளப்படும் உத்திகளாக பார்க்கப்படுகிறது.

அதாவது இவற்றை வைத்தே திரைப்படத்திற்கான வசூலை ஈடு செய்யலாம் என்ற ஒரு கண்ணோட்டத்தில் இன்றைய சினிமாத்துறை இயக்குநர்கள் பலர் உள்ளனர்.

இலங்கையில் தமிழ் மக்களிடையே எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. அதை முறையாக ஆராய்ந்து அதற்கான கால மாற்றத்தை ஏற்படுத்துவதே ஊடகங்களின் செயற்பாடாகும்.

ஆனால் இங்கு அதன் உண்மை நிலையை ஆழமாக பேசாமல், “emotional selling” ஆக வடிவத்தில் பயன்படுத்தப்படுவது வேதனைக்கு உரியதாகும்.

கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர்கள் “யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்” என்று இஙகு அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.

உண்மையிலேயே இலங்கையின் வறுமை, அதன் வரலாற்றுப் பின்னணி, யுத்த விளைவுகள் மற்றும் பொருளாதார வீழ்ச்சி ஆகியவை மனித துயரங்களாகும்.

ஆனால், இந்த வறுமை நிலைமை, குறிப்பாக தென்னிந்திய ஊடகங்கள், கலை மேடைகள் மற்றும் சமூக தளங்களில் ஒரு “உணர்ச்சி பொருளாக” மாற்றப்பட்டுள்ளமை கவலைக்குரியது.

இவை உண்மையை மறைக்கும் விடயங்களாகவும் நிதி சுரண்டுவதற்குரிய இடமாகவும் மக்கள் துயரங்களை பிரதிபலிக்கின்ற பெயரில், அரசியல் சுயநலம் மட்டும் சாதிக்கப்படும் நிலையிலும் காணப்படுகின்றன.

இந்த செயற்பாடுகள், மக்கள் துயரங்களை தமது நிகழ்ச்சிகளின் கருவிகளாக மாற்றும் “மௌன வன்முறையாக” உள்ளது.

இது எதிரொலிக்க வேண்டிய விவாதமாக இருக்க வேண்டும். வறுமையைப் பேசும் ஒவ்வொரு வாய்ப்பும், மாற்றத்தை நோக்கிய அழைப்பாக மாறவேண்டும்

பார்ப்பவர் கண்களுக்கான கண்ணீராக அல்ல, செயலுக்கான சிந்தனையாக இது காணப்பட வேண்டும்.

ஒருவேளை சர்வதேச அளவில் இலங்கையின் துயரம் காட்டப்பட வேண்டிய சூழல் அவசியமாக இருந்தால், இலங்கைத் தமிழ் மக்களின் துயரத்தை மட்டும் அல்ல, நாட்டின் பொருளாதார மற்றும் சமூக நிலையையும் தென்னிந்திய ஊடகங்கள், சமூக அமைப்புகள், திரைப்படங்கள், வணிகத் தொடர்புகள் மற்றும் அரசியல் தளங்களில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதே காலத்தின் தேவையாகும்.

உடல் எடை குறைக்க இதுதான் முக்கியம்.. விஜய் சேதுபதி கொடுத்த ட்விஸ்ட்
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி ஹீரோவாக இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் விடுதலை 2.

அடுத்ததாக இவரது நடிப்பில் வரும் 23ம் தேதி அதாவது நாளை வெளிவர உள்ள திரைப்படம் Ace. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருகின்றனர்.

இந்நிலையில், விஜய் சேதுபதி அவர் உடல் எடை குறைத்தது எப்படி என்பது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அதில், எனக்கு எவ்வளவு எடை இருக்கிறது என்பதைவிட நான் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறேன் என்பதே முக்கியம். நான் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால் அதுவே என் உடல் எடை குறைப்பதற்கு போதுமான ஒன்று.

நான் எடை பார்க்கும் மெஷனை பயன்படுத்துவதே இல்லை. அதில் காட்டும் எண்கள் என்னை சோர்வடைய செய்யும், உடல் எடையை விட மனம் மற்றும் உடல் ஆரோக்கியமே முக்கியம்” என தெரிவித்துள்ளார். தற்போது இவரின் இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினி நடித்ததில் கமலுக்கு பிடித்த படம்.. எந்த படம் தெரியுமா?
தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு கமல் ஹாசனின் தக் லைஃப். நயனகன் படத்திற்கு பின் மணி ரத்னம் – கமல் கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளது.

மேலும் சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகிற ஜூன் 5ம் தேதி இப்படம் திரையரங்கில் வெளிவருகிறது.

இப்படத்திற்கான ப்ரோமோஷனில் படக்குழு இறங்கியுள்ளனர். சென்னை, கொச்சி, மும்பை என தொடர்ந்து வெவ்வேறு இடங்களில் ப்ரோமோஷன் நடைபெற்று வருகிறது. இதில் பல சுவாரஸ்யமான விஷயங்களையும் படக்குழுவினர் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்ததில் கமல் ஹாசனுக்கு பிடித்த படம் எது என கேட்டு ஆப்ஷன் கொடுத்துள்ளனர்.

தளபதி, பாட்ஷா அல்லது முள்ளும் மலரும் என மூன்று படங்களில் எது பிடிக்கும் என தொகுப்பாளர் கேட்க, ‘எனக்கு முள்ளும் மலரும் படம் தான் பிடிக்கும்’ என கமல் கூறியுள்ளார்.

இது விமர்சனத்துக்குள்ளாகும் என எனக்குத் தெரியும்.. தக் லைஃப் படம் குறித்து மனம் திறந்த த்ரிஷா
தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. 42 வயதை எட்டிய த்ரிஷா, இன்றும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

த்ரிஷா நடிப்பில் தற்போது திரைக்கு வர உள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’. மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்த இந்தப் படம் வரும் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று திரிஷா நடனத்தில் ‘சுகர் பேபி’ என்ற 2-வது பாடல் வெளியானது.

இந்நிலையில், இப்படம் குறித்து சில சுவாரசியமான விஷயங்களை த்ரிஷா பகிர்ந்துள்ளார். அதில், ” இந்தப் படத்தில் நானும் இருக்கிறேன் என கூறும்போது நான் இந்த படத்தில் ஒப்பந்தமாகவில்லை.

ஆனால் அப்போதே எங்களின் ஜோடி திரையில் மாயாஜாலமாக இருக்கும் என்றும், அதே நேரம் இதை விமர்சிப்பவர்களும் இருப்பார்கள் என்றும் எனக்குத் தெரியும். இவை அனைத்தும் அறிந்த பின்தான் நான் இந்தப் படத்தில் கையெழுத்திட்டேன்.

கமல்ஹாசன், மணிரத்னம் இருவரும் எவ்வளவு புரிதலுடன் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்பட்டனர் என்பதை கண்டிப்பாக அனைத்து நடிகர்களும் பார்க்க வேண்டும். அது ஒரு மாயாஜாலம் போல இருந்தது.” என்று தெரிவித்துள்ளார்.

டப்பா ரோல் என ஜோதிகாவை தான் சொன்னேனா.. சிம்ரன் தற்போது கொடுத்த விளக்கம்
நடிகை சிம்ரன் ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு விருது விழாவில் பேசும்போது, ‘நான் என் சக நடிகை ஒருவருக்கு மெசேஜ் அனுப்பினேன். உங்களை அந்த கேரக்டரில் பார்த்தது சர்ப்ரைஸாக இருந்தது என கூறினேன்.’

‘அதற்கு பதில் அனுப்பிய அவர் ஆன்டி ரோலில் நடிப்பதை விட இது சிறந்தது என பதில் அனுப்பினார். என்னை பொறுத்த வரை டப்பா ரோல்களில் நடிப்பதை விட ஆன்டி ரோலில் நடிக்கலாம்’ என சிம்ரன் பேசி இருந்தார்.

சிம்ரன் நடிகை ஜோதிகாவை தான் தாக்கி பேசி இருக்கிறார் என அப்போது செய்தி பரவியது. காரணம் அந்த நேரத்தில் ஜோதிகா நடித்து இருந்த டப்பா கார்டெல் என்ற வெப் சீரிஸ் ரிலீஸ் ஆகி இருந்தது.

இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி சமீபத்திய பேட்டியில் சிம்ரன் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

“நான் சொன்னதை மக்கள் break down செய்து பார்கிறார்கள். அது வெறும் ஊகத்தின் அடிப்படையான செய்தி தான். டப்பா கார்டெல் ஒரு நல்ல வெப் சீரிஸ். பல வெப் சீரிஸ்கள் வருகிறது, இதையும் பார்த்தேன்’ என சிம்ரன் கூறி இருக்கிறார்.

“நான் சொல்ல வந்தது அந்த நபருக்கு சென்று சேர்ந்துவிட்டது. நான் வேண்டுமென்றே அதை சொல்லவில்லை. அது நிஜமாகவே எனக்கு நடந்தது.

ஒரு முறை நட்பு கெட்டுவிட்டால் அதை மீண்டும் சரி செய்ய முடியாது. அதனால் அதற்கு எதற்கு நான் விளக்கம் கொடுக்க வேண்டும்.

தேவை என்பதால் தான் நான் அதை பற்றி பேசினேன். எனக்கு friends கிடையாது, யாரை பற்றியும் gossip நான் பேசுவது இல்லை.

எனக்கு ரொம்ப hurt ஆனது, அதனால் தான் அதை பற்றி மனதில் இருந்ததை பேசினேன். நான் அப்படி பேசியபிறகு அந்த நபர் என்னிடம் மன்னிப்பு கேட்டு மெசேஜ் அனுப்பி இருந்தார் எனவும் சிம்ரன் கூறி இருக்கிறார்.