tamilan – tamilnaadi.com

என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியோரில் விஜய்யும் ஒருவர்! – பிரியங்கா சோப்ரா புகழாரம்
பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர் உலக அழகி பிரியங்கா சோப்ரா.

இவர் நடிகர் விஜய் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் வைரலாக்கப்பட்டு வருகின்றன.

உலக அழகி பட்டத்தை வென்ற நடிகை பிரியங்கா சோப்ரா தமிழன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 2002 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் ஒரு பாடலையும் பாடியிருந்தார்.

தற்போது தனது பழைய நினைவுகளை மீட்டுப் பார்த்துள்ள பிரியங்கா சோப்ரா, தனது வாழ்வில் மிகப்பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியோரில் நடிகர் விஜய்யும் ஒருவர் என தெரிவித்துள்ளார்.

“நான் ஆரம்பத்தில் நடித்த படங்களில் தமிழ் படமான தமிழன் மற்றும், ஹிந்தி படங்களான அண்டாஸ், தி ஹீரோ ஆகிய படங்கள் அன்றைய காலகட்டத்தில் பெரிய படங்கள்.

‘தமிழன்‘ திரைப்படத்தில் நடித்தது எனக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. ஏனெனில் எனக்கு தமிழ்மொழி தெரியாது. வசனங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு நன்றாக மனப்பாடம் செய்த பிறகே என்னுடைய வரிகளை பேசுவேன்.

ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் நடிப்பதை பார்த்துக் கொண்டிருப்பேன். அவரின் நடிப்பை பார்த்துக்கொண்டிருப்பது எனக்கு பிடிக்கும். என் சினிமா வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியோரில் விஜய்யும் ஒருவர்.

படப்பிடிப்பு தளத்தில் விஜய் அனைவருடனும் பணிவுடன் நடந்துகொள்வார். படப்பிடிப்பு தளத்தின் உள்ளே வந்து விட்டால் படப்பிடிப்பு முடியும் வரை அவர் வெளியே செல்லமாட்டார். அவரின் அந்த குணத்தை நான் இன்று வரை பின்பற்றி வருகிறேன்” – என நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ராவின் இந்த கருத்துக்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளத்துடன், பாராட்டுகளையும் பெற்றுள்ளன. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

#CinemaNews

கொவிட்டை கட்டுப்படுத்திய முதல் 5 நாடுகளுக்குள் இலங்கையாம் – பீரீஸ் புகழ்ச்சி!!!
கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்திய முதல் 5 நாடுகளுக்குள் இலங்கையும் உள்ளடங்குவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இதனை இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொண்டிருந்த பிராந்திய நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதேபோன்று ஐக்கிய அரபு இராச்சியத்தில் சுமார் 3 இலட்சம் இலங்கையர்கள் தொழில் புரிவதாகவும், அதற்கும் மேலதிகமாக மேலும் பல இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவதாகவும் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டதாவும் அமைச்சர் கூறினார்.

#SrilankaNews

பிரியங்கா – ஜோனாஸ் விவாகரத்து! – முற்றுப்புள்ளியிட்ட பிரியங்கா
2018 ஆம் ஆண்டு நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோனாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திரையுலகில் முன்னணி நடிகையான இவர் தற்போது ஹாலிவுட்டில் பிரம்மாண்டமான திரைபடத்தில் நடித்து வருகின்றார்.

கடந்த வாரம் நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் தனது சமூகவலைத் தளங்களிலுள்ள கணக்குகளின் பெயரிலிருந்து “ஜோனாஸை” நீக்கியுள்ளார். இது அவரின் திருமண உறவு குறித்த ஊகங்களுக்கு வழி வகுத்துள்ளதோடு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இத்தகைய வதந்திக்கு மத்தியில் பிரியங்கா தனது கணவருடன் தீபாவளி பண்டிகையை தன் புதிய இல்லத்தில் கொண்டாடியுள்ளார். இவை குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.

அதுமட்டுமல்லாது, சமீபத்தில் இடம் பெற்ற ஒரு காமடி நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் கலந்து சிறப்பித்துள்ளனர். அதன்போது நடிகை பிரியங்கா தனது கணவர் குறித்து மிக நகைச்சுவையாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

குறித்த நிகழ்ச்சி உரையாடலில் நடிகை பிரியங்கா தமது வாழ்கையின் சில சுவாரஸ்யமான அம்சங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதாவது. தாம் இருவருக்கும் 10 வயது இடைவெளி இருப்பதாகவும் தனது கணவருக்கு 90 பற்றிய இசை குறிப்புக்கள் எதுவும் தெரியாது எனவும் தானே அதனை சொல்லி கொடுப்பதாகவும் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது நாங்கள் இருவரும் குழந்தை பெற்றுக்கொள்வதை கூடிய விரைவில் எதிர்பார்கிறோம் எனவும் மிக்க மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டுள்ளார்.

இந்த செய்தி மூலம் விவாகரத்து தொடர்பில் வைரலாகி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதனிடையில் பிரியங்காவின் தாயார் மது சோப்ராவும் குறித்த வதந்திகளுக்கு தக்க பதிலளித்துள்ளார். அதாவது பிரியங்கா தனது குடும்பபெயரை நீக்கினாலும் தனது கணவருடன் மிக அன்பான வாழ்கையே வாழ்ந்து வருகிறார் ஆகவே இதுபோன்ற தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

#CinemaNews