supply – tamilnaadi.com

கட்டணம் செலுத்தாத எம்பிக்கள்! – நீர் விநியோகம் துண்டிப்பு
நீர் கட்டணத்தை செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கான நீர் விநியோகத்தை துண்டிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன், நீர் கட்டணங்களை செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை சபாநாயகருக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களால் சுமார் 3 மில்லியனுக்கும் அதிக கட்டணம் செலுத்தப்பட வேண்டியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

#SriLankaNews

நாடெங்கும் இன்று முதல் காஸ் சிலிண்டர் விநியோகம்
நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர் விநியோக நடவடிக்கை இன்று பிற்பகல் முதல் முன்னெடுக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம் மற்றும் 2 தசம் 3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தையில் விநியோகிக்கப்படவுள்ளன என்று குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், 3 ஆயிரத்து 950 மெற்றிக் டொன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளது.

இதன்படி, தர பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு குறித்த எரிபொருள் தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், நாடளாவிய ரீதியில் இன்று முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரை நாளாந்தம் 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளன என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு விநியோகிக்கப்படவுள்ள எரிவாயு சிலிண்டர்களில் 60 வீதமானவை கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன எனவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, வார இறுதியில் 2 ஆயிரத்து 500 மெற்றுக் டொன் எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது எனவும் லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

இன்றும் சமையல் எரிவாயு விநியோகம் இல்லை!
நாட்டில் இன்றும் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காகக் காத்திருப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, எரிவாயு விநியோகத்தை நாளை முதல் முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 26ஆம் திகதி இலங்கையை வந்தடையவிருந்த 3 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் தாமதமடைந்தது.

இந்தநிலையில் குறித்த எரிவாயு கப்பல் இன்று இலங்கையை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளை முதல், எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும்.

எனவே, இன்று எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களைக் கோரியுள்ளது.

இதேவேளை, எரிவாயு அடங்கிய இரண்டு கப்பல்கள் எதிர்வரும் முதலாம் மற்றும் 5ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

#SriLankaNews

கொழும்பில் ஏற்பட்ட திடீர் நீர்த்தடை!!
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் திடீரென நீர்த்தடை ஏற்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இந்த திடீர் நீர் விநியோக தடை நீர் குழாய் உடைந்தமையினால் ஏற்பட்டுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோக தடை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நீர் விநியோகம் தடை, தெஹிவளை மற்றும் கல்கிசை பகுதிகள், இரத்மலானை, கொழும்பு 05, கொழும்பு 06, பத்தரமுல்ல, பெலவத்த, உடுமுல்லை, ஹிம்புட்டான ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.

#SrilankaNews

மயிலிட்டி துறைமுக இரண்டாம் கட்ட பணிகள் இன்று ஆரம்பம்!!
யாழ்ப்பாணம் – மயிலிட்டி துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இரண்டாம் கட்டத்தின் கீழ் துறைமுகத்தின் பகுதிகளை ஆழ, அகலம் ஆக்குதல், படகுகளை கட்டிவைக்க ஏற்றவாறு ஆழமாக்கி குறித்த பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் தொழிலை மேம்படுத்துவதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் தொழில் செய்யும் மீனவர்கள் தங்குவதற்கான வசதி, சிற்றுண்டிச்சாலை படகுகள் கட்டுவதற்கும் திரும்பிச் செல்வதற்கான பாதைகளை அமைத்தல், துறைமுகத்தை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வேலைத் திட்டங்களும் இதற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த வருட இறுதிக்குள் இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்து மூன்றாம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது குறிப்பிட்டார்.

குறித்த ஆரம்ப நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சிவஸ்ரீ அமைச்சின் செயலாளர்கள் நீரியல் வழங்கல் திணைக்கள அதிகாரிகள், மீனவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#SrilankaNews

நீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்படாது!
மின்வெட்டு காரணமாக நீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்படாது என நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் செயலாளர் பிரியத் பண்டு தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு ஏற்பட்டால் நீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால், நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், குடிதண்ணீர் விநியோகத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எவ்வாறாயினும், எந்தவொரு பிரதேசத்திலும் மின் தடை ஏற்பட்டால் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு மின்சாரம் வழங்குவதற்கு சபை இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக செயலாளர் தெரிவித்தார்.

மேற்கூறியவாறு இரண்டு அல்லது மூன்று மணிநேரம் மின்சாரம் தடைப்பட்டால் அந்த நேரத்தில் விநியோகத்திற்காக தண்ணீரை சேகரிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

நீர் விநியோகத்தை துண்டிக்கும் நிகழ்வு இடம்பெறும் என தாம் நினைக்கவில்லை எனவும், நீண்டகாலமாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் மின்சார சபை இதுவரையில் அறிவிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews