Staff – tamilnaadi.com

இந்தியாவில் 180 கோடி மக்களுக்கு செலுத்தப்பட்டது தடுப்பூசி!!
நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

அதன்பின், கடந்த ஆண்டு ஜூனில் இருந்து நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், இந்தியாவில் மொத்தம் 180 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதில் 96.70 கோடி பேருக்கு முதலாவது டோஸ் தடுப்பூசியும், 86.21 கோடி பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 2.12 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

#IndiaNEws

பல்கலைக்கழக ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டம்!
புதிய ஓய்வூதிய நடைமுறைக்கு ஏற்ப பல்கலைக்கழக ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்த அறிக்கையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பாக புதிய நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து குறித்த நடைமுறை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

வவுனியா பேருந்துகளில் பாலியல் சீண்டல்களா!!!
வவுனியாவிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் பெண்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் காணப்படுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

காலை மற்றும் மாலை நேரங்களில் பாடசாலை மாணவர்கள் , அலுவலக உத்தியோகத்தர்கள் , பணியாற்றும் ஊழியர்கள், தனியார் வகுப்புகளுக்கு செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகள் அதிகளவில் தனியார் மற்றும் அரச பேரூந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அலுவலக உத்தியோகத்தர் போன்ற பாணியில் சீரான உடையணித்து வருகின்ற ஓர் சில இளைஞர்கள் பேரூந்தில் பெண்களுக்கு அருகேயுள்ள ஆசனத்தில் இருந்து பாலியல் ரீதியான துன்புறுத்தல் மேற்கொள்கின்றனர்.

சன நேரிசல் காணப்படுகின்ற சமயங்களில் பெண்களுடன் வேண்டுமென்றே உரசுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்களுடன் பாலியல் ரீதியான செயற்பாட்டில் ஈடுபடும் இவ்வாறான ஓர் சில இளைஞர்களினால் பல பெண்கள் வேலையினை இடைவிட்டுள்ளனர்.

எனவே பொலிஸார் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்து சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

#SrilankaNews

பயிற்சி பெற்ற பணியாளர்களை எதிர்பார்க்கும் ஜப்பான்!
இலங்கைக்கான புதிய ஜப்பான் தூதுவர் மிசிகொஷி ஹெதெகி இலங்கையில் பயிற்சி பெற்ற பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.

இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

திறன் மற்றும் நிபுணத்துவம் கொண்ட பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையிலிருந்து ஜப்பானுக்கு 14 துறைகளின் கீழ் பணியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

75 ஜப்பானிய முதலீட்டு நிறுவனங்கள் இலங்கையில் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமது பதவிக் காலத்திற்குள் இந்நாட்டின் முதலீட்டை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு ஆர்வமாக உள்ளதாக மிசிகொஷி ஹெதெகி தெரிவித்தார்.

#SriLankaNews

பாலியல் துஷ்பியோகத்தில் ஈடுபட்ட WHO நிறுவன ஊழியர்கள்
உலக சுகாதார நிறுவன ஊழியர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர் என தகவல் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

காங்கோ நாட்டில் உலக சுகாதார அமைப்பின் ஊழியர்கள் பணியாற்றும் போதே இவ்வாறு பாலியல் துஷ்பியோகத்தில் ஈடுபட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆபிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உலக சுகாதார அமைப்பு ஊழியர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டனர்.

அவர்கள் அங்கு பல்வேறு இடங்களுக்குச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

இவ்வாறு அங்கு 199 இற்கும் மேலான ஊழியர்கள் ஆங்காங்கே சிகிச்சை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் உலக சுகாதார நிறுவன ஊழியர்கள் பலர் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டனர் எனத் தெரியவந்துள்ளது.

அதில் உலக சுகாதார ஊழியர்கள் 9 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியாகியுள்ளது.

அத்துடன் 50 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் எனவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் செயல்களில் ஈடுபட்டனர் என 83 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானம் வருத்தம் தெரிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.