500 மில்லிலீற்றர் தண்ணீர் போத்தல் ஒன்றை 19 ரூபா செலவில் அனைத்து ச.தொ.ச விற்பனை நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் என்று வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல்...
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பரிப்புவா’ என்றழைக்கப்படும் மானவடுகே அசங்க மதுரங்க, கோன்கடவள பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு தேடுதல் வேட்டையின் போதே இவர் கைது...
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், சகலதுறை ஆட்டக்காரருமான வனிந்து ஹசரங்கவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. எனவே, ஆஸ்திரேலியாவுடன் இன்று நடைபெறும் மூன்றாவது ரி-20 போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது....
தேர்தல் முறைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி எதிர்வரும் 24 ஆம் திகதி இக்கலந்துரையாடல் இடம்பெறும் என தெரியவருகின்றது. அடுத்த தேர்தலை எந்த முறைமையின்கீழ் நடத்துவது என்பது...
பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி கொழும்பிலும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கவுள்ளது. இதன்படி இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக கையெழுத்து திரட்டப்படவுள்ளது....
மிகைக் கட்டண வரி விதிக்கப்படவுள்ள நிறுவனங்களில் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் உட்பட 9 நிதியங்கள் உள்ளடக்கப்படவில்லை என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி மேற்கு பகுதியில் இன்று அதிகாலை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டில் வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,...
யாழ்ப்பாணம் – மயிலிட்டி துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இரண்டாம் கட்டத்தின் கீழ் துறைமுகத்தின் பகுதிகளை ஆழ, அகலம் ஆக்குதல், படகுகளை கட்டிவைக்க ஏற்றவாறு ஆழமாக்கி குறித்த பகுதியைச்...
கந்தளாய் சீனி நிறுவனத்தின் 85% வீத பங்குகளை சிங்கப்பூர் நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சமர்ப்பித்துள்ளார். செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து செயற்பாடுகள் ஆரம்பமாகி பத்தாம் ஆண்டு நிறைவடையும் வரை முதலீட்டாளர் 85%...
உழைக்கும் வர்க்கத்தினருக்கு பெரும் பாதிப்பாக அமையவுள்ள மிகைவரி சட்டமூலத்தை அரசு உடனடியாக மீளப்பெற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தொழிற்சங்கப் போராட்டம் வெடிக்கும் என்று அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் எச்சரிக்கை...
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரவின் வீடுமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து, குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அச்சங்கத்தால் விடுக்கப்பட்டுள்ள...
உக்ரேன் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சம் துருப்புகளை நிறுத்தியிருப்பது தொடர்பாக கலந்துரையாடுவதற்கே பேச்சுக்கு வருமாறு உக்ரேன் ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. உக்ரேன் வெளிவிவகார அமைச்சர் Dmytro Kuleba உத்தியோகபூர்வமாக இந்த அழைப்பை விடுத்துள்ளார். மேற்குலக நாடுகள்...
எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது...
பேரூந்தில் சென்ற பெண்ணின் தங்கச்சங்கிலியை கொள்ளையிட்ட மூன்று கில்லாடி பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்றாம் தடுப்பூசியை செலுத்துவதற்காக குறித்த பெண் தமது சகோதரியுடன் பேருந்தில் பயணித்து ஹிக்கடுவை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு அருகில் இறங்கிய...
கொவிட் தொற்றினால் பொருளாதாரரீதியில் பாதிக்கப்பட்ட நாட்டைக் காப்பாற்ற அரசாங்கம் கடுமையாக போரைாடுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து மினுவாங்கொடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை...
அடுத்தமாதமளவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமரை சந்திக்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் நேரம் ஒதுக்கி தருமாறு கோரியுள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் , பிரதமர் மோடியின் வருகை குறித்து...
ஊடகவியலாளர் சமுதித்தவின் இல்லம் மீது ஆயுதம் தாங்கிய குழு நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தனது வன்மையான கண்டனங்களை பதிவிட்டுள்ளார். இது தொடர்பில் கருத்து...
உக்ரைனில் போர்க்கால சூழல் நிலவும் நிலையில் இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உக்ரேனில் வாழும் இலங்கையர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அங்கு...
உப்பூர் பகுதியில் அமைக்கப்பட்டு நிறுத்தப்பட்ட அனல்மின்நிலைய திட்டத்தை மீள ஆரம்பிக்க நடவடிக்கை மே்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தமிழக மின்வாரியம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உப்பூரில் 12 ஆயிரத்து 788 கோடி ரூபாயில்...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானிகள் மன்றம் ‘நேரத்துக்கு மட்டும் வேலை’ தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வை வழங்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிர்வாகம் தவறிவிட்டதாகவும் அதனால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட...