SriLankaNews – tamilnaadi.com

அகமதாபாத் விமான நிலையம் அருகே 242 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய விமானம் !
இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

மேகனி நகரில் விமானம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமான விபத்தை தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி வரும் நிலையில் விமானத்தில் இருந்தவர்கள் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் எயார் இந்தியா நிறுவனத்தை சேர்ந்தது என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

விபத்தின் போது விமானத்தில் 200 இற்கும் மேற்பட்ட பயணிகள் சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன

விடுதலைப் புலிகள் அமைப்பை வைத்து அரசியல் செய்யும் இனவாதிகள்! சமூக ஆர்வலர் ஆதங்கம்
இந்த நாட்டில் உள்ள இனவாதிகள், மற்றும் மதவாதிகள் தங்கள் அதிகாரத்தை இழக்கும் ஒவ்வொரு முறையும், விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் எழுச்சி பெறுவதாக பொய்களைப் பரப்பி வருகின்றனர் என சமூக ஆர்வலர் சிரிந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒற்றுமையை அழிக்க பொய்யான அறிக்கைகளை வெளியிடுபவர்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி இன்று பொலிஸ் முறையாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

ஊடகங்களுக்கு இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இந்த நாட்டில் உள்ள இனவாதிகள், மற்றும் மத வெறியர்கள் வெள்ளவத்தை கடற்கரையில் உறவினர்களுக்காக நடத்திய நினைவு நிகழ்வை சீர்குலைக்க முயன்றனர்.

அங்கு சென்றவர்களின் குடும்பத்தின் ஒரு உறவினர் போரின் போது இறந்திருக்கலாம். அவர்களை நினைவு கூறுவது தவறல்ல, ஒரு உறவினரை இழந்ததன் வலி குடும்பத்தினருக்கு மட்டுமே தெரியும்.

எனவே, சமீபத்தில் வெள்ளவத்தை கடற்கரையில் தமது உறவுகளை போரில் இழந்தவர்களால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இது விடுதலைப் புலிகளை வளப்படுத்தவோ அல்லது மீண்டும் எழுச்சி பெறவோ அனுமதிக்காது.

இவ்வாறான செயற்பாடுகளினால் பாதிப்புறும் இந்த நாட்டில் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்” என்றார்.

மீண்டும் பேருந்துகளில் இருந்து நீக்கப்படவுள்ள அலங்கார பொருட்கள்..!
வீதி விபத்துகளைக் குறைத்து, நெறிப்படுத்தப்பட்ட போக்குவரத்து முறையை நிறுவும் நோக்கில் ஜூலை 1ஆம் திகதி முதல் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இன்று (22.05.2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பேருந்துகளில் இருந்து கூடுதல் நவீனமயமாக்கல் பாகங்களை அகற்றும் திட்டமும் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதியை இன்று முதல் தொடங்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் குருநாகல் மற்றும் மீரிகம இடையேயான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் வெளியேறும் இடங்களில் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி கட்டணங்களை செலுத்தலாம்.

இதற்கமைய, 35 இன்டர்சேஞ்ச்களிலும் 119 வெளியேறும் வாயில்களிலும் இதற்காக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கடவூச்சீட்டு: எங்குள்ளது தெரியுமா..!
உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கடவூச்சீட்டு: எங்குள்ளது தெரியுமா..!

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கடவூச்சீட்டாக வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் (Mexico) கடவூச்சீட்டு உள்ளது.

இதன் விலை சுமார் ரூ.19,481.75 ரூபாய் என்பதுடன் இது 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். கடவூச்சீட்டு என்பது உலகத்தை சுற்றி வர உதவும் மிக முக்கியமான பயண ஆவணமாகும்.

இதனை பெறுவதற்கு மக்கள் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். கடவூச்சீட்டின் விலை வசிக்கும் இடத்தைப் பொறுத்தது மற்றும் நாடுகளுக்கு இடையே மாறுபடும்.

Compare The Market அறிக்கையில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2024 -ம் ஆண்டில் கடவூச்சீட்டு பெறுவதற்கான செலவு ரூ.19,000 முதல் ரூ.1,500 வரை மாறுபடுகிறது.

இதற்கமைய, உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கடவூச்சீட்டை வட அமெரிக்க நாடான மெக்சிகோ கொண்டுள்ளது.

அதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் 10 ஆண்டு கடவூச்சீட்டு ரூ.19,041 மற்றும் அமெரிக்காவின் 10 ஆண்டு கடவூச்சீட்டு ரூ.13,868 ஆகும்.

இலங்கையில் திடீரென பணக்காரராகும் நபர்கள் – பொலிஸ் நிலையங்களில் குவியும் முறைப்பாடுகள்
இலங்கையில் திடீரென பணக்காரராகும் நபர்கள் – பொலிஸ் நிலையங்களில் குவியும் முறைப்பாடுகள்

இலங்கையில் பலர் திடீரென பணக்காரர்களாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திடீர் பணக்காரர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இவ்வாறான முறைப்பாடுகள் கிடைப்பதாக, அவர் தெரிவித்துள்ளார்.

சிலர் திடீரென பணக்காரர்களாகி விட்டதாகவும், அவர்கள் பணக்காரர்களாக மாறுவதற்கு எந்த காரணமும் இல்லை எனவும் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்திற்கு வரும் நேரடி முறைப்பாடுகளுக்கு மேலதிகமாக, தொலைபேசியிலும் முறைப்பாடுகள் வருவதாக பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில், கிடைக்கப்பெறும் ஒவ்வொரு முறைப்பாடு தொடர்பிலும், விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என, அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புலம்பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரில் பெரும் சதி!
புலம்பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரில் பெரும் சதி!

புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரில் பெரும் சதி இடம்பெறுவதாக சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கிளை பொறுப்பாளர் ரகு தெரிவித்துள்ளார்.

மாவீரர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் செயலுக்கு பின்னர் சொல்லை வைத்தவர். இருப்பினும் தற்போது எமது புலம்பெயர் தேசங்களில் தலைவரின் பெயரினாலும், அவரது குடும்பத்தின் பெயராலும் முன்னெடுக்கப்படும் அனைத்தும் சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

எனவே புலம்பெயர் மக்கள் உண்மையான நிலவரங்களை அறிந்து சரியான முடிவினை எடுக்க வேண்டும்.

மேலும், எமது தேசிய போராட்டத்தையும், விடுதலைப்புலிகளின் தலைவரையும் அவரது குடும்பத்தினரையும், போராளிகளின் தியாகத்தையும், மக்களின் அர்ப்பணிப்பையும் சீர்குலைக்க சிலர் முயற்சித்து வருகின்றனர் எனவும், அதற்கு தமிழ் மக்களாகிய நாங்கள் விளிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

தாயகம் கோரிய உரிமைப்போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சுவிட்சர்லாந்தில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், சுவிட்சர்லாந்தில் ஒன்று திரண்ட பெருந்திரளான மக்கள் சுடரேற்றி உணர்வுபூர்வமாக தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை, ஏனைய புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் தின நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர் வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபா
தொடர் வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபா

நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(26.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (26.07.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 337.17 ரூபாவாகவும், கொள்வனவு விலை 323.69 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 256.95 ரூபாவாகவும், கொள்வனவு விலை 243.88 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 373.80 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 356.48 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 435.48 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 416.45 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், இன்றையதினம் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

ஜூலை 1ஆம் திகதி முதல் குறைவடையும் வட்டி வீதம்
கடன் அட்டைகளுக்கான வட்டி வீதம் ஜூலை 1ஆம் திகதி முதல் குறைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, வங்கிகள் வட்டி வீதம் குறைத்துள்ள போதிலும், கடன் அட்டைகளுக்கான வட்டி வீதங்கள் மிக அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் சமீபத்தில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருந்தனர்.

இதற்கமைவாக, கடன் அட்டைகளுக்கு அறவிடப்படும் 36 சதவீதமான வருடாந்த வட்டி வீதம் 2 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் அனுஷ்டிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் ஜனனதினம்
படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர். நடராஜா ரவிராஜின் 61 ஆவது ஜனன தினம் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.

அமரர். ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்னால் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

அன்னாரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்க பட்டதோடு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், சசிகலா ரவிராஜ், சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

சரமாரியான துப்பாக்கி பிரயோகம் ; கொழும்பில் பதற்றம் – நால்வர் காயம்!
களனி – திக்பிட்டிகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணை

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.