srilanka – tamilnaadi.com

வெளிநாட்டில் பலியான இலங்கை இளைஞன் – கனவை நிறைவேற்றி 24 மணி நேரத்திற்குள் நடந்த துயரம்
ஜப்பானில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த ரிஷிதா பிரியங்கா அனுராத என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வேலைவாய்ப்புக்காக ஜப்பான் சென்ற இளைஞன் பணத்தை சேகரித்து தனக்கு பிடித்த அதிநவீன மோட்டார் சைக்கிளை கொள்வனவு செய்துள்ளார்.

தனது கனவு நனவாகி 24 மணிநேரம் முடிவதற்குள் அதே மோட்டார் சைக்கிளில் விபத்துக்குள்ளாகி அவர் உயிரிழந்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் அவரது பதிவு மறைவதற்கு முன்னர் அவர் உயிரிழந்து விட்டதாக நண்பர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞனின் காதலியும் விரைவில் ஜப்பான் சென்று அவரை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஈரானின் அணுஉலைகளை தாக்கிய அமெரிக்கா: ஈரான் கொடுத்த முக்கிய விளக்கம்..!
அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்ததையடுத்து அமெரிக்காவும் இந்த தாக்குதலில் உள்நுழைந்துள்ளது.

ஈரானின் ஃபோர்டோவ் அணுசக்தி நிலையம் உள்ளிட்ட மூன்று தளங்களை அமெரிக்கா நேற்றையதினம் தாக்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், Fordow is gone என்பதன் மூலம் ஃபோர்டோவ் அணுசக்தி நிலையம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது என்பதை ட்ரம்ப் தெரிவிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில், ட்ரம்ப் வெளிப்படையான இராணுவத் தாக்குதலை அறிவித்துள்ளார்.

ஃபோர்டோ அணுசக்தி நிலையப் பகுதியின் ஒரு பகுதி வான்வழித் தாக்குதலுக்கு உள்ளானது என்று ஈரானின் கோம் மாகாண செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் அணுசக்தி தளங்களுக்கு அருகிலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும், அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக ஈரான் தரப்பில் வெளியிட்ட தகவலின்படி,

அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை.அணுசக்தி நிலையங்களில் தீங்கு விளைவிக்கும் எந்த பொருட்களும் இல்லை. செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகள் அந்த அணுசக்தி மையங்களிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அணுசக்தி மேம்பாட்டை நிறுத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது.அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும்.

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின், ஈரான் மீதான அதிரடி தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்பை மிக தீவிரப்படுத்தி வருவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனக்கு பின் ஈரானின் அதியுச்ச தலைவர்களாக இருக்கக்கூடிய மூவரை பரிந்துரைந்த அலிகமேனி
இஸ்ரேல் உடனான போரில் தான் கொல்லப்பட்டால் தனக்கு பிறகு யார் ஈரானின் தலைமை மதகுருவாக இருக்கலாம் என்று மூவரை ஈரானின் அதிஉச்ச தலைவர் அயதுல்லா அலிகமேனி(Ali kameni) பரிந்துரைத்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல்-ஈரான் தாக்குதலில் தற்போது அமெரிக்காவும் களமிறங்கியுள்ளமையானது போரின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகின்றது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “கமேனியை கொல்வது ஈரான் – இஸ்ரேல் பிரச்சினையை அதிகப்படுத்தாது. மாறாக முடிவுக்கு கொண்டு வரும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில், ‘ஈரானின் உச்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார்.

நாங்கள் அவரை இப்போதைக்கு கொல்லப் போவதில்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது என்றும் பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையே, ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனிக்கு இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் சவால் விடுத்துள்ளார்.

அதில், “ஈரானின் அண்டை நாட்டைச் சேர்ந்த சர்வாதிகாரி ஒருவர் (ஈராக்கை சேர்ந்த சதாம் உசேன்), இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததால், அவருக்கு நேர்ந்த கதியை எண்ணிப் பாருங்கள்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தநிலையில் தான் இஸ்ரேல் உடனான போரில் நான் கொல்லப்பட்டால் தனக்கு பிறகு யார் ஈரானின் தலைமை மதகுருவான இருக்கலாம் என மூவரை பரிந்துரைத்துள்ளார்.

தேர்வு செய்யப்பட்ட மூவரில் கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த முடிவை ஈரானின் நிபுணர்கள் சபை மற்றும் மூத்த மதத் தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

தேவைப்பட்டால் விரைவான மாற்றத்திற்குத் தயாராக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்த நடவடிக்கை போர்க்கால அவசரத்தால் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது சாதாரண சூழ்நிலைகளில், ஒரு புதிய உச்ச தலைவரை நியமிக்கும் செயல்முறை பல மாதங்கள் ஆகும். இதில் தீவிரமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும்.

பல வேட்பாளர்கள் கலந்துகொள்ள வேண்டும். ஆனால், நாடு இப்போது போரில் ஈடுபட்டுள்ள நிலையில், இஸ்லாமிய குடியரசு மற்றும் அவரது மரபு இரண்டையும் பாதுகாக்க விரைவான மாற்றத்தை உறுதி செய்ய கமேனி விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய தொழிலதிபர் கைது
கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலங்கம, உரணாவ, தலவத்துகொட சந்திப்பில், பிராடோ ரக வாகனத்தை முந்திச் செல்ல இடமளிக்காததால் துப்பாக்கியை காட்டி வாகன ஓட்டி ஒருவரை மிரட்டியதற்காக, தொழிலதிபரான பிராடோ ஓட்டுநரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்த 9 மில்லி மீற்றர் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நுகேகொட, மஹாசென் மாவத்தையிலிருந்து தலவத்துகொட நோக்கி ஒருவர் தனது மோட்டார் வாகனத்தில் பயணித்தபோது, ​​சந்தேக நபர் பிராடோ ஜீப்பில் பின்னால் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிராடோ வாகன ஓட்டுநர் பல சந்தர்ப்பங்களில் மோட்டார் வாகனத்தை முந்திச் செல்ல முயன்றுள்ளார். ஆனால் வாய்ப்பு இல்லாததால், அவர் கோபமடைந்து தலவத்துகொட சந்திக்கு அருகில் ஜீப்பை நிறுத்தினார்.

பிராடோ ஓட்டுநர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை காட்டி வாகன ஓட்டியை மிரட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகன ஓட்டுநர் முறைப்பாட்டின் பேரில், பிராடோ வாகனத்தின் ஓட்டுநர் துப்பாக்கியுடன் பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இலங்கையில் கோவிட் தொற்றினால் 2 பேர் உயிரிழப்பு
நாடு முழுவதும் பரவி வரும் கோவிட் தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் சுவாச நோயாளிகளில் 9 முதல் 13 சதவீத வரை தற்போது புதிய கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ பீடத்தின் முதன்மை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு, இது தீவிரமாக இருக்கலாம்.

அவ்வாறானவர்களே இதைப் பற்றி கவலைப்பட வேண்டும். இலங்கையில் இரண்டு மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இருவரும் உடல் நிலையில் சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்களாகும்.

அதனை தவிர, தற்போது எங்களுக்கு ஒரு தீவிரமான சூழ்நிலை இல்லாததால் தேவையற்ற அச்சமடைய தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் விமான நிலையம் அருகே 242 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய விமானம் !
இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

மேகனி நகரில் விமானம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமான விபத்தை தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி வரும் நிலையில் விமானத்தில் இருந்தவர்கள் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் எயார் இந்தியா நிறுவனத்தை சேர்ந்தது என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

விபத்தின் போது விமானத்தில் 200 இற்கும் மேற்பட்ட பயணிகள் சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன

பாடசாலை மாணவிகளுக்கு ஆபத்தாக மாறும் AI தொழில்நுட்பம்…! பெற்றோர்களே அவதானம்
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 16 வயதுடைய 4 மாணவிகளின் முகங்களை முறையற்ற புகைப்படங்களாக இணைத்து வட்ஸ்அப் குழுக்களில் பரப்பிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 2 சந்தேக நபர்களையும் ஹொரணை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர், அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிபதி சந்தன கலன்சூரிய உத்தரவிட்டார்.

முறைப்பாட்டாளர்களான மாணவிகள் கற்கும் அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் மற்றும் ஹொரணை பகுதியில் உள்ள மற்றுமொரு பாடசாலையின் மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொரணையில் உள்ள பிரபலமான பாடசாலையின் மாணவி ஒருவர், தனது பெற்றோருடன் மொரகஹஹேன பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

தங்கள் மகளின் முகத்தின் புகைப்படத்தைப் பயன்படுத்தி AI தொழில்நுட்பத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் வட்ஸ்அப் குழுவில் பரப்பப்படுவதாகவும், தனது மகள் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும், வகுப்புகளுக்கு செல்ல தயங்குவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட ஒரு நாளுக்குள் அதே பாடசாலையை சேர்ந்த 3 மாணவர்களிடமிருந்து மேலும் 3 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்ததையடுத்து பொலிஸ் அதிகாரிகள் இந்த விடயத்தில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளனர்.

மாணவர்களின் முகங்களின் தகாத புகைப்படங்களை உருவாக்க AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ். மாநகர மேயர் பதவிக்கு மதிவதனியைப் பரிந்துரைத்த தமிழரசுக்கட்சி
யாழ்ப்பாணம்(Jaffna) மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைத்துள்ளது.

அதேவேளை, யாழ். மாநகர சபையின் துணை மேயர் பதவிக்கு இம்மானுவேல் தயாளன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

யாழ். நல்லூரில் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தில் இன்று(9) பிற்பகல் நடைபெற்ற கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபைக்கான மேயர், துணை மேயர் தெரிவுகள் எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ கஞ்சா மீட்பு
சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுகம் அருகே உள்ள கடற்கரையில் நேற்று(7) காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த .10 லட்சம் இந்திய மதிப்பிலான 50 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லை ஊடாக படகுகளில் இலங்கைக்கு கஞ்சா, ஐஸ் போதைப்பொருள், பீடி இலை பண்டல்கள், கடல் அட்டை, சமையல் மஞ்சள், திமிங்கலம் துடுப்பு, சுக்கு உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுக கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தி செல்ல இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குழுவாக ராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து சேராங்கோட்டை வரை கடற்கரை பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கஞ்சா மூட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் காரில் இருந்த மூவரை பிடித்து விசாரணைக்காக ராமேஸ்வரம் துறைமுகம் பொலிஸ் நிலையத்திற்கு தனிப்பிரிவு பொலிஸார் அழைத்து சென்றனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் கஞ்சா மூட்டைகள் படகில் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக கொண்டுவரப்பட்டதாக தெரிவித்ததுடன் அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் தங்கச்சிமடம் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளை சேர்ந்த ஆறு நபர்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 50 கிலோ கஞ்சாவின் இந்திய மதிப்பு ரூ.10 லட்சம் என்றும், பிடிபட்ட கார் ரூ.5 லட்சம் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கடற்கரை பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கை ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தீஷ் எச்சரித்துள்ளார்.

ராமேஸ்வரம் துறைமுகத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது கடற்றொழில் கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு வெள்ளவத்தையில் சந்தேகத்துக்குரிய மரணம்
கொழும்பு- வெள்ளவத்தையைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர், சந்தேகத்துக்குரிய நிலையில் மரணமானமை குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வேலவனாராம வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்குள் மயக்க நிலையில் அவர் மீட்கப்பட்டு பின்னர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அங்கு அவர் இறந்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று ஜூன் 7 ஆம் திகதி நிகழ்ந்துள்ளது.

உள்ளூர்வாசிகளிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டின் பேரில் வெள்ளவத்தை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் இறந்தவர் வெள்ளவத்தையில் உள்ள வேலவனாராம வீதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், இன்று பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.