Sri lanka election 2024 – tamilnaadi.com

உடன் நடத்துங்கள் – அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் சுமந்திரன்
உடன் நடத்துங்கள் – அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் சுமந்திரன்

மாகாண சபைத் தேர்தலைக் கால தாமதமின்றி அரசாங்கம் நடத்த வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran) வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த வருட இறுதி வரை காத்திருக்காமல், உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிந்த பிறகு, மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கு முன்னதாக மாகாண சபைகளை முழு அதிகாரத்துடன் இயங்கச் செய்வது முக்கியமானதாகும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை அரசாங்கம் எடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கு மூன்று வருடங்கள் வரை செல்லும். எனவே, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற முறைமை தொடர்பில் தமது பரிந்துரைந்துகளை அனைவரும் முன்வைக்கலாம்.

புதிய அரசியலமைப்பு மக்களுடனான கலந்துரையாடலின் பின்னரே கொண்டுவரப்படும். இதுதொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்துவதற்கு போதிய கால அவகாசம் உள்ளது.

எனவே, மாகாண சபை முறையை ஒழிப்பதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தை இதுவரை எடுக்கவில்லை.

மாகாண சபை முறைமை புதிய அரசியலமைப்பில் தொடர்ந்தால் தற்போது இருக்கும் அதிகாரங்களுக்கு அப்பாலான அதிகாரங்கள் வழங்கப்படாது எனவும் தற்போதைய அதிகாரங்கள் குறைக்கப்படாது எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மக்கள் அரசுக்கு வழங்கிய அசாதாரண ஆணை : விமல் வீரவன்ச வெளியிட்ட தகவல்
பொதுத் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுன(jvp) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு(npp) வடக்கு மக்கள் வாக்களித்தது இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்தின் மீதான வெறுப்பையே பிரதிபலிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச(wimal weerawansa) தெரிவித்துள்ளார்.

இது வழக்கத்திற்கு மாறான ஆணை என்றும், இதை அரசு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கனேடியதமிழ்ச் சங்கம் போன்ற நிறுவனங்கள் மீண்டும் இனவாத, மதவாத, பிரிவினைவாதக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும், அவற்றைத் திருப்திப்படுத்துவதற்குப் பதிலாக, ஐக்கிய நாட்டில் உள்ள அனைத்து மக்களின் விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்கான பயணத்தை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆணையின் மூலம் பொருளாதார நெருக்கடி விரைவில் தீர்க்கப்பட்டு மக்களுக்கு நியாயமான நாள் அமையும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.

அரசாங்கம் சரியான பாதையில் செல்லவில்லை என்றால் மக்களைத் திரட்டி அதற்கு தலைமைத்துவத்தை வழங்குவதே தேசிய சுதந்திர முன்னணியின் வகிபாகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு தெரிவான மலையகத் தமிழர்கள் 8 பேர்
நாடாளுமன்றத்திற்கு தெரிவான மலையகத் தமிழர்கள் 8 பேர்

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி 8 உறுப்பினர்கள் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றது.

160 நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து 196 பேர் நேரடியாகவும் 29 பேர் தேசியப் பட்டியல் ஊடாகவும் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட உள்ளதுடன், 17.1 மில்லியன் மக்கள் இம்முறை வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர்.

இந்நிலையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா (Nuwara Eliya), பதுளை (Badulla), இரத்தினபுரி (Ratnapura) ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏழு மலையகத் தமிழர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட கிஷ்ணன் கலைச்செல்வி 33346 வாக்குளை பெற்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்ப்பில் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) 46,438 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பழனி திகாம்பரம் (Palani Digambaran) 48018 வாக்குளை பெற்றும், வே.இராதாகிருஷ்ணன் (Velusami Radhakrishnan) 42,273 வாக்குகளை பெற்றும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட கிட்ணன் செல்வராஜ் 60041 வாக்குளை பெற்றும் அம்பிகா சாமுவேல் 58201 வாக்குகளை பெற்றும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.

அதுபோன்று இரத்தினபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சுந்தரலிங்கம் பிரதீப்பும், மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட சரோஜா போல்ராஜும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார்.

தேவேளை, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள ராமலிங்கம் சந்திரசேகரனும் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினால் மொத்தமாக 8 மலையக எம்.பிகள் இம்முறை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவர்.

அநுர அரசின் புதிய பிரதமர் யார்….!
அநுர அரசின் புதிய பிரதமர் யார்….!

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், அடுத்த நடவடிக்கை குறித்து கட்சி பரிசீலித்து வருகிறது.

அதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின் போது உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

இதனையடுத்து புதிய அமைச்சரவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய அரசாங்கத்தின் பிரதமராக, தற்போதைய அமைச்சரான விஜித ஹேரத்தை நியமிக்க வேண்டும் என கட்சிக்குள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது வெளியான விருப்பு வாக்குகளின் அடிப்படையில் கம்பஹா மாவட்டத்தில் அதிகூடிய 716,715 வாக்குகளை விஜித் ஹேரத் பெற்றுள்ளார். இதனையடுத்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமகால பிரதமரும், புதிய நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஹரினி அமரசூரிய 655,289 விருப்பு வாக்குகளை கொழும்பு மாவட்டத்தில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களுக்கு நன்றி! நம்பியவர்களை கைவிடாமல் பாதுகாப்பதாக ஜனாதிபதி தரப்பில் உறுதி
தமிழர்களுக்கு நன்றி! நம்பியவர்களை கைவிடாமல் பாதுகாப்பதாக ஜனாதிபதி தரப்பில் உறுதி

கடந்த ஜனாதிபதி தேர்தலை விடவும் இம்முறை பொதுத் தேர்தலில் தமிழர்களின் ஆதரவு பாரிய புரட்சியாக மாறியுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை தேசிய மக்கள் சக்தி பதிவு செய்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் அதனை தெரிவித்துள்ளார்.

விகிதாசார தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி தமக்கு கிடைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மகத்தான வெற்றியின் அரசியல் நிலைப்பாடுகளை அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகும் என தெரிவித்துள்ளார்.

பல்வேறு பிரச்சாரங்களுக்கு மத்தியில் தேசிய மக்கள் சக்தியை நம்பி வாக்களித்த தமிழ் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி மீது தமிழர்கள் வைத்த நம்பிக்கையை பாதுகாத்து அதனை முன்னெடுத்துச் செல்லவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மக்களின் நலனுக்காக அதனை பயன்படுத்தவும் எதிர்பார்த்துள்ள ரில்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் வட மாகாணத்தில் ஐந்து ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் மனோ: உறுதியளித்தார் சஜித்
மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் மனோ: உறுதியளித்தார் சஜித்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மனோ கணேசனுக்கு (Mano Ganesan) தேசியப் பட்டியல் ஊடாக உறுப்புரிமையை வழங்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் (14.11.2024) இடம்பெற்றது.

160 நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து 196 பேர் நேரடியாகவும் 29 பேர் தேசியப் பட்டியல் ஊடாகவும் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட உள்ளதுடன், 17.1 மில்லியன் மக்கள் இம்முறை வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர்.

கொழும்பு (Colombo) மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்நிலையில், மனோ கணேசனுக்கு தேசியப் பட்டியல் ஊடாக உறுப்புரிமையை வழங்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் காலத்தில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த தேசியப்பட்டியல் பதவி வழங்கப்படுவதாக மேலும் தெரியவந்துள்ளது.

இனவாதத்தைப் புறந்தள்ளிய வட மாகாண மக்கள்: டில்வின் சில்வா புகழாரம்
இனவாதத்தைப் புறந்தள்ளிய வட மாகாண மக்கள்: டில்வின் சில்வா புகழாரம்

வடமாகாண மக்கள் பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாறாது, இனவாதத்தைப் புறந்தள்ளி எமக்கு வாக்களித்தமைக்கு விசேடமாக நன்றி தெரிவிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இன்றையதினம் (15.11.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “விகிதாசாரத் தேர்தலின் கீழ் தேசிய மக்கள் சக்தி வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் அரசியல் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும், வெற்றிக்காகத் தியாகம் செய்தவர்களுக்கு அனைவருக்கும் நன்றிகள்.

விசேடமாக பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாறாத வடமாகாண மக்கள், இனவாதத்தைப் புறந்தள்ளி எமக்கு வாக்களித்தமைக்கு நன்றிகளை தெரவித்துக்கொள்கிறேன்.

மக்கள் வழங்கிய பெரும்பான்மையான அதிகாரத்தை மக்களின் நன்மைக்காக அர்ப்பணித்து மக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்போம் எனவும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி
கொழும்பில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 78,8636 வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 208,249 வாக்குகளைப் பெற்று 04 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 51,020 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 34880வாக்குகளைப் பெற்றுள்ளது.

கொழும்பு – கொலன்னா தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் கொலன்னா தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 62, 416 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 19, 456 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3, 393 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 2, 254 வாக்குகளைப் பெற்றுள்ளது.

கொழும்பு – கடுவல்ல தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் கடுவல்ல தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 97, 157 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 16, 264 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 5, 829 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3, 269 வாக்குகளைப் பெற்றுள்ளது.

கொழும்பு – ஹோமாகம தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் ஹோமாகம தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 102, 122 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 17, 139 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 5, 541 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4, 127 வாக்குகளைப் பெற்றுள்ளது.

கொழும்பு – கெஸ்பவ தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் கெஸ்பவ தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 95,302 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 14, 579 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 7, 229 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3, 810 வாக்குகளைப் பெற்றுள்ளது.

கொழும்பு – அவிஸ்ஸாவெல்ல தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் அவிஸ்ஸாவெல்ல தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 55, 620 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 15, 263 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 43,90 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3, 994 வாக்குகளைப் பெற்றுள்ளது.

sri lanka parliament election 2024 colombo district result

கொழும்பு – மத்திய கொழும்பு தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் மத்திய கொழும்பு தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 3,9160 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 2,7347 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,612 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 923 வாக்குகளைப் பெற்றுள்ளது.

கொழும்பு மொரட்டுவ தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் மொரட்டுவ தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 56,550 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 14,395 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4,324 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 2,707 வாக்குகளைப் பெற்றுள்ளது.

கொழும்பு கோட்டை தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் கோட்டை தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 31,278 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 9,085 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,926 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,351 வாக்குகளைப் பெற்றுள்ளது.

கொழும்பு – தெஹிவளை தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் தெஹிவளை தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 26,188 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 8,427 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,657 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,536 வாக்குகளைப் பெற்றுள்ளது.

கொழும்பு – பொரளை

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் பொரளை தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 24,318 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 9,246 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,654 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,122 வாக்குகளைப் பெற்றுள்ளது.

கொழும்பு – தபால் மூல வாக்கு முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு(Colombo) மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 28,475 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 2,985 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,814 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 934 வாக்குகளைப் பெற்றுள்ளது.

யாழ் மாவட்டத்தை கைப்பற்றிய அநுரவின் திசைகாட்டி : இறுதி தேர்தல் முடிவுகள்
யாழ் மாவட்டத்தை கைப்பற்றிய அநுரவின் திசைகாட்டி : இறுதி தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி (NPP) 80,830 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 63,327 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 27,983 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுள்ளது.

சுயேட்சைக் குழு 17 இன் கீழ் போட்டியிட்ட தரப்பினர் 27,855 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுள்ளனர்.

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (DTNA) 22,513 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் மாவட்டத்தில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற அநுர தரப்பு
புத்தளம் மாவட்டத்தில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற அநுர தரப்பு

புத்தளம் மாவட்ட இறுதி முடிவு

புத்தளம் மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 239,576 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அம்மாவட்டத்தில் மொத்தம் 6 ஆசனங்களை அந்தக் கட்சி வெற்றிகொண்டுள்ளது.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 65,679 வாக்குகளை புத்தளம் மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 2 ஆசனத்தை வெற்றிகொண்டுள்ளனர்.

அத்துடன், புதிய ஜனநாயக முன்னணி 15,741 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் எவ்வித ஆசனங்களையும் வெற்றிகொள்ளவில்லை.

இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 663,673 ஆகும்.

அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை, 410,853

செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை 379,681

நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 31,172 ஆகும்.

கடந்த தேர்தலில்…

இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.

இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 220,566 வாக்குளையும் 05 ஆசனங்களையும் புத்தளம் மாவட்டத்தில் வெற்றிகொண்டது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 80,183 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 2 ஆசனங்களையும் புத்தளம் மாவட்டத்தில் வெற்றி கொண்டனர்.

முஸ்லிம் தேசியக் கூட்டணி கட்சி புத்தளம் மாவட்டத்தில் 55,981 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் புத்தளம் மாவட்டத்தில் 9,944 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.

புத்தளம் தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 47,714 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 23,512 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணியினர் 2,701 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1,891 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஆனமடுவ தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் புத்தளம் மாவட்டத்தின் ஆனமடுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 45955 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 11710 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணியினர் 4345 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 4284 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

சிலாபம் தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 51913 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 11604 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 3789 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணியினர் 2250 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

நாத்தாண்டிய தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 39,388 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 7360 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணியினர் 2734 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1555 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் புத்தளம் மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 11,404 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 1,661 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணியினர் 672 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 454 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.