sri la nka – tamilnaadi.com

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பத்து கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்க ஜெல் கரைசல் அடங்கிய 4 பொதிகளை உடலில் மறைத்து வைத்திருந்த நிலையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இது குறித்த முதல் செய்தி வெளியானதும், ‘கோல்டன் ஜெல்’ என்ற பொருளை இதுவரை கேள்விப்பட்டதே இல்லை என பலரும் கூறியுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய தீர்வை வரியற்ற வர்த்தக நிலையத்திலுள்ள 24 வயதுடைய பெண்ணின் கைகளுக்கு இது எவ்வாறு வந்ததென ஆராயப்பட்டது.

இந்த நிலையில் சில கடத்தல்காரர்கள் விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுடன் தொடர்புபட்டு மோசடியான முறையில் இவற்றினை கடத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

விமானம் மூலம் நாட்டுக்கு வருபவர்கள் கொண்டு வரும் பொருட்களை வெளியே எடுத்துச் செல்ல விமான நிலைய ஊழியர்கள் உதவுகிறார்கள் என்றால் அது மிகவும் ஆபத்தான நிலைமை என கூறப்படுகின்றது.

அங்கு பணியாற்றும் ஊழியர்கள் என்ற நம்பிக்கையில் பணியாளர்கள் பெரிய அளவில் சோதனைக்குட்படுத்தப்படுவதில்லை. இதனை தங்களுக்கு சாதகமாக கடத்தல்காரர்கள் பயன்படுத்திக் கொள்வதாக தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான பொருட்களை எடுத்துச் செல்வார்களா என்பதை பாதுகாப்புப் படையினர் ஆர்வத்துடன் சரிபார்க்கும் அரிதான சந்தர்ப்பங்களும் உள்ளன.

அதற்கமைய, இந்த ஊழியர் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் போது தங்க ஜெல் கரைசல் பொட்டலங்களை மறைத்து வைத்து எடுத்து செல்ல முயற்சித்துள்ளார். எனினும் அவர் ஒழுங்கற்ற முறையில் நடப்பதாக சிசிடிவி கண்காணிப்பில் காட்டிய சந்தேகத்தின் அடிப்படையில், இந்த பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஜெல் கரைசல் அடங்கிய 4 பொட்டலங்கள் மேலதிக விசாரணைக்காக தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, தங்க ஜெல் குறித்து விசாரணை நடத்தும் போது, ​​தற்போது கடத்தல்காரர்கள் தங்கத்தை ஜெல் வடிவில் தயாரித்து சட்டவிரோதமாக கடத்துவதாக தெரியவந்துள்ளது.

ஜெல்லை மீண்டும் தங்கமாக மாற்றும் தொழில்நுட்பம் இந்தியாவில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (05.07.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வங்கியின் கூற்றுப்படி,நேற்றுடன் ஒப்பிடுகையில் 299.74 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 297.8 ரூபாவாக குறைந்துள்ளது.

இதேவேளை விற்பனை விலை 317.47 ரூபாவிலிருந்து 315.41 ரூபாவாக குறைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி,நேற்றுடன் ஒப்பிடுகையில் 296.92 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 297 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை விற்பனை விலை 315 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை முறையே 298 மற்றும் 313 ரூபாவாக பதிவாகியுள்ளது.

விரைவில் பேச்சு என்கிறார் ரணில்!
விரைவில் பேச்சு என்கிறார் ரணில்!

அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முன்னெடுத்துள்ள பேச்சின் அடுத்த சுற்றுப் பேச்சு விரைவில் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அரசியல் தீர்வு தொடர்பில் வெளிநாடுகளில் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் அடுத்த கட்டப் பேச்சு எப்போது நடைபெறும் என ஜனாதிபதியிடம் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்

“பேச்சு விரைவில் நடக்கும். அது தொடர்பில் சந்தேகப்படத் தேவையில்லை. அரசியல் தீர்வில் உறுதியாக இருக்கின்றேன்.

வெளிநாடு சென்றமையால் திட்டமிட்டவாறு பேச்சு நடக்கவில்லை. சர்வதேச சமூகத்திடம் அரசியல் தீர்வு தொடர்பில் கருத்துரைத்துள்ளேன்.

எனவே, அதைச் செயற்படுத்துவேன்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை – அரசுடனான பேச்சு தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனைக் கேட்டபோது,

“ஜனாதிபதி ரணில் கூறிய திகதியில் பேச்சு நடக்கவில்லை. அடுத்த கட்டப் பேச்சு சம்பந்தமாக அறிவிக்கப்படவில்லை.

தொடர்ந்து இவ்வாறு விட்டுக்கொண்டிருக்க முடியாது. நாங்கள் தீர்க்கமான முடிவு எடுப்போம் என்று ஜனாதிபதியிடம் நேரடியாக கடைசி சந்திப்பில் தெரிவித்துவிட்டேன்.

விரைவில் ஒரு முடிவு எடுப்போம். ஒரு வாரத்தின் பின்னர் என்னைத் தொடர்புகொள்ளுங்கள்” என பதிலளித்துள்ளார்.