Spirituality – tamilnaadi.com

பிரிந்த தம்பதிகளை இணைக்கும் ஆலயம்!
பிரிந்த தம்பதிகளை இணைக்கும் ஆலயம்!

பார்வதி தேவியின் சாபம் நீங்கி இறைவனுடன் இணைந்த தலம் இது. எனவே, இத்தல இறைவன்-இறைவியை வழிபடுவதால் நம் பாவங்கள் கரைந்து நாளும் நலமாய் வாழ்வது நிச்சயமே!. பார்வதி தேவி கிணற்றில் இருந்து நெய்யை எடுத்து, இறைவனுக்குப் பூஜை செய்து சாப விமோசனம் பெற்றதாக ஒரு புராண வரலாறு உள்ளது. பார்வதிக்கு ஒரு நாள் திடீரென்று ஓர் ஆசை உண்டானது.

பந்து விளையாட வேண்டும் என விரும்பினாள் அன்னை. தனது ஆசையை சிவபெருமானிடம் கூறவே, சிவபெருமான் உடனே நான்கு வேதங்களையும் ஒரு பந்தாக உருவாக்கி பார்வதியிடம் கொடுத்தார். பார்வதி தனது தோழிகளுடன் பந்து விளையாடத் தொடங்கினாள். நேரம் கடந்து கொண்டேயிருந்தது. ஆட்டம் முடிய வில்லை. ஆதவன் அஸ்தமிக்கும் நேரம் வந்தது.

தான் மறைந்தால் அன்னையின் ஆட்டம் தடைபடுமே என்றெண்ணிய சூரியன், அஸ்தமிக்காது தயங்கி நின்றது. கோபம் கொண்ட சிவபெருமான், பார்வதிக்கும், தன் கடமையைச் செய்யத் தவறிய சூரியனுக்கும் சாபமிட்டார். தேவியை பசுவாகும்படி சிவபெருமான் சாபமிட்டார்.

இதையடுத்து தேவி தன் தமையன் கேசவன் மாட்டு இடையனாகப் பின் தொடர பூலோகம் வந்தாள். பந்து வந்து விழுந்த கொன்றைக் காட்டில் சுயம்பு லிங்கமாக இருந்த புற்றின் மீது பசு உருவில் இருந்த தேவி பாலைச் சொரிந்து வழிபட்டாள். ஒரு நாள் பசுவின் குளம்பு புற்றின் மீது பட, தேவி சுய உருவம் பெற்றாள். சாபம் நீங்கப் பெற்ற அன்னையின் முன் தோன்றிய இறைவன் ‘நீ சுயரூபம் பெற்றுவிட்டாய். எனினும் நெய்யால் பூஜை செய்து பஞ்சாக்னியில் தவம் செய்து என்னை வந்தடைவாய்’ எனச் சொல்லி மறைந்தார்.

உமையவள் இறைவனை பால் கொண்டு அபிஷேகம் செய்த தலம் பந்தனைநல்லூர். இது தற்போது பந்தநல்லூர் என்று அழைக்கப்படுகிறது. பார்வதி தேவி இறைவனுக்கு ஊற்றி வழிபட்ட பால், அங்கிருந்து இரண்டு கி.மீ தொலைவில் உள்ள நெய்குப்பை என்ற தலம் வரை ஓடி வந்து நெய்யாக மாறியது. அன்னை பார்வதி அந்த நெய்யைக் கொண்டு, இங்குள்ள இறைவனை பூஜித்தாள். அந்தத் தலமே நெய்குப்பை திருத்தலமாகும்.

அன்னையின் சாபம் நீங்கிய தலம் இது. இங்கு உள்ள ஆலயமே சுந்தரேசுவரர் ஆலயமாகும். பந்தநல்லூரில் சொரிந்த பால் இந்தத் தலத்தில் நெய்யாக மாறியதாக தல வரலாறு தெரிவிக்கிறது. கூபம் என்றால் கிணறு என்று பொருள். நெய்க்கூபம் என்ற பெயர் கொண்ட இந்தத் தலம் நெய்கூடம் என்றாகி, பின்னர் மருவி தற்போது நெய்குப்பை என அழைக்கப்படுகிறது.

பார்வதி தேவி கிணற்றில் இருந்து நெய் எடுத்து சுவாமிக்கு பூஜை செய்து இறைவனுடன் ஐக்கியமான சிறப்புக்குரிய தலம் இது. மூன்று நிலை ராஜ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது ஆலயம். கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது இக்கோவில். பலிபீடம், நந்தி தேவனைக் கடந்து உள்ளே சென்றால் மணிமண்டபம்.

அம்மன் அருள்மிகு சவுந்திர நாயகி தென்புறம் நோக்கி சாந்தமான முகத்துடன் அருள் பாலிக்கிறாள். அடுத்து உள்ளது மகாமண்டபம். வடபுறம் நடராஜர், சிவகாமி அருள்பாலிக்க, வடகிழக்கு மூலையில் பைரவர், சூரியன் திருமேனிகள் உள்ளது. அடுத்து அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்து கருவறையில் அருள்மிகு சுந்தரேசுவரர் லிங்கத் திருமேனியில் பக்தர்களுக்கு காட்சி தந்து கொண்டிருக்கிறார். தேவ கோட்டத்தில் வடபுறம் தட்சிணாமூர்த்தியும் தென்புறம் துர்க்கையும் உள்ளனர்.

துர்க்கையின் எதிரே சண்டிகேஸ்வரரின் சன்னிதி உள்ளது. உட்பிரகாரத்தில் மேற்கில் மும்மூர்த்தி கணபதி, சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, பால கணபதி, சிவபெருமான், ருத்ராபதீஸ்வரர், பைரவர், கஜலட்சுமி, நால்வர் திருமேனிகளும் உள்ளன. ஆலயத்தின் எதிரே வெளியே வலஞ்சுழி விநாயகர் தனி மண்டபத்தில் வீற்றிருக்கிறார்.

சூரியன் அஸ்தமாகாது தாமதமானதால் சிவபெருமானிடம் சாபம் பெற்றார் அல்லவா? அந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறுவது எப்போது என்று அவர் சிவபெருமானிடம் கேட்டார். ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தனது கிரகணங்களால் இத் தலத்தில் பூஜை செய்ய, சாப விமோசனம் கிடைக்கும் என சிவபெருமான் கூற, சூரியனும் அதன்படி பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றார் என்பது புராண வரலாறு. இங்கு ஆண்டு தோறும் ஆவணி மாதம் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்களும் சூரியன் தன் ஒளிக்கதிர்களால் கருவறை இறைவனை பூஜை செய்வதை இன்றும் காணலாம்.

இத்திருக்கோவிலுக்கு எதிர்புறம் சூரிய தீர்த்தமும், வடக்கே கொள்ளிடம் மற்றும் மண்ணியாறும் அமைந்து ஆன்மிக சிறப்போடு இயற்கை அழகினையும் இனிதே கொண்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்கது மண்ணியாறாகும். ஆலயத்திற்கு வடக்கே இம்மண்ணியாறு செல்வதால் இதை உத்தரவாஹினி என்றும், முருகப் பெருமானால் ஏற்பட்ட நதி இது என்பதால் சுப்பிரமணிய நதி என்றும் வழங்கப்பட்டது. நாளடைவில் சுப்பிரமண்ணிய என்ற சொல் மருவி இன்று மண்ணியாறு என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் தலவிருட்சம் பவளமல்லி. தினசரி இங்கு காலை, சாயரச்சை என இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

மேலும், இங்கே கோவிலின் வெளியே வீற்றிருக்கும் வலஞ்சுழி விநாயகர் சூரிய பூஜைக்கு இடையூறு ஏற்படாதவாறு சற்றே தள்ளி அமர்ந்து காட்சி தருகிறார். கர்ப்பகிரகமும் நுழைவாசலை விட்டு சற்றே தள்ளி அமைந்திருப்பது ஓர் அற்புதமான அமைப்பாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெரும் சிறப்பைப் பெற்றுள்ள இத்தலத்தை ஒரு முறை தரிசனம் செய்வோருக்கு சகல சாப பாவ விமோசனங்களை இத்தல இறைவன் தந்தருள்வார் என பக்தர்கள் நம்புகின்றனர்.

பிரிந்த தம்பதியர் இந்த ஆலயம் வந்து, இறைவன் இறைவியை அர்ச்சனை செய்து வழிபட்டு, 48 நாட்கள் முடிவில் ஆலயத்தில் மூல மந்திர ஹோமம் நடத்துவதினால், அவர்கள் மீண்டும் சேர்ந்து இனிய இல்லறம் நடத்துவது உறுதி என்கின்றனர் பக்தர்கள்.

#Spirituality

செவ்வாய்தோஷம் நீக்கும் முருகன் வழிபாடு!
புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் சுமார் 25 கி.மீ தொலைவில் தேனிமலை கிராமத்தில் அழகிய முருகன் கோயில் உள்ளது. செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகளில் ஓரை காலத்தில் இங்கு வந்து ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில் தோஷம் நீங்கி, திருமண வரம் கைகூடும்.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், முருகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை ஒழியும். பங்குனி உத்திர நாளில் புதுக்கோட்டை திருமயம், பொன்னமராவதி, அன்னவாசல், முதலான பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் சுமந்து வந்தும் வழிபடுகின்றனர்.

மலையடிவாரத்தில், சுனை ஒன்று உள்ளது. இதில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும். கார்த்திகை நட்சத்திர நாளில் இந்த முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வழிபடுவது விசேஷம். ஸ்ரீவள்ளி-ஸ்ரீதெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு மாலை சார்த்தி, திருமாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கைகூடும்.

#Spirituality

சூரிய பகவானுக்கு விரதம் அனுஷ்டிப்பதன் பலன்கள்!
சூரிய பகவானுக்கு விரதம் அனுஷ்டிப்பதன் பலன்கள்!

ஞாயிறு விரதம் அல்லது “சூரிய விரதம்” இருக்க விரும்புவர்கள் எல்லா காலங்களிலும் இவ்விரதத்தை மேற்கொள்ளலாம் என்றாலும் “ஐப்பசி” மாத வளர்பிறை ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விரதத்தை அனுஷ்டிப்பது மிகவும் சிறப்பானதாகும்.

இந்த ஞாயிறு விரதத்தை எந்த ஒரு மாதத்திலும் வளர்பிறை ஞாயிற்றுக்கிழமையில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு, சூரியன் உதிக்கின்ற காலை வேளையில் சூரியனை தரிசித்தவாறே, அவருக்குரிய மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.

பின்பு நவகிரக சந்நிதிக்கு சென்று சூரிய பகவானுக்கு செந்தாமரை பூவை சமர்ப்பித்து, கோதுமை தானியங்கள் சிறிதளவு வைத்து, நெய் தீபங்கள் ஏற்றி, வாசனை மிக்க தூபங்கள் கொளுத்தி, கோதுமை கொண்டு செய்யப்பட்ட இனிப்பு உணவுகளை நைவேத்தியமாக வைத்து சூரிய பகவானின் காயத்ரி மந்திரங்கள், பீஜ மந்திரங்கள் போன்றவற்றை 108 எண்ணிக்கை அல்லது 1008 எண்ணிக்கையில் துதித்து வழிபட வேண்டும்.

இந்த விரதம் இருப்பவர்கள் அந்த ஞாயிற்றுக்கிழமை முழுவதும் திடஉணவு சாப்பிடாமல் நோன்பிருந்து மறுநாள் காலையில் சூரிய தரிசனம் செய்த பின்பு, சூரிய பகவானுக்கு வீட்டிலேயே ஒரு செம்பு பாத்திரத்தில் சிறிது நீர் நிவேதனமாக அளித்த பின்பே விரதத்தை முடிக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையிலிருப்பவர்கள் நீராகாரம், பழச்சாறுகள் போன்றவற்றை அருந்தி விரதமிருக்கலாம்.

சூரிய விரதம் மேற்கொள்ளும் நபர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். கொடிய நோய்கள் ஏதும் அண்டாது. முகத்தில் ஒரு வசீகரம் உண்டாகும். சமூகத்தில் பிறர் மதிக்கின்ற சூழ்நிலை ஏற்படும். தந்தையின் உடல்நலம் மேம்பட்டு அவரின் ஆயுள் நீடிக்கும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும். துஷ்ட சக்திகள், செய்வினை மாந்திரிகம் போன்றவை சூரிய விரதம் இருப்பவர்களை அண்டாது.

#Spirituality

12 கோபுரங்கள் கொண்ட மீனாட்சி அம்மன் கோவிலின் அதிசயம்!
மீனாட்சி அம்மன் கோவிலை நினைத்தால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அதன் கோபுரங்கள் தான்.

இந்த கோபுரங்களில் எண்ணற்ற சிற்பங்களும் உள்ளன. சிவமகாபுராணம், திருவிளையாடற்புராணம், லிங்கபுராணம், தேவி மகாத்மியம் முதலிய புராணங்கள் தொடர்பான சிற்பங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

வெளிகோபுரங்கள் கோவிலின் வெளி மதிலில் 4 திசைகளிலும் 4 கோபுரங்கள் உள்ளன. இவை வெளிகோபுரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு கோபுரமும் 60 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட வாயிற் தூணோடு தொடங்கி படிப்படியாக பல அடுக்குகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

4 வாயில்களும் உயர்ந்த உறுதியான கதவுகளை கொண்டுள்ளது. இந்த கோபுரங்களின் அடிப்பகுதி கருங்கல்லினால் ஆனது. இவற்றின் உப பீடம், அதிஷ்டானம், பாதம் ஆகிய பகுதிகளில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகள் அழகுற அமைந்துள்ளன.

கருங்கல் பகுதிக்கு மேலுள்ள சிகரப்பகுதி பல நிலைகளைக் கொண்டுள்ளது. இந்த பகுதி செங்கல், சாந்து இவற்றால் ஆனது. மேல்நிலைகளில் சுதை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளிகோபுரங்கள் நான்கும் அவை அமைந்துள்ள திசைகளை கொண்ட கிழக்கு கோபுரம், மேற்கு கோபுரம், தெற்கு கோபுரம், வடக்கு கோபுரம் என்று அழைக்கப்படுகின்றன.

கிழக்கு கோபுரம் சுவாமி சன்னதிக்கு நேர் எதிரே கிழக்கு ஆடி வீதியை சார்ந்து அமைந்துள்ள கிழக்கு வாயிலின் மேல் அமையப்பெற்றுள்ளது.

4 கோபுரங்களிலும் இதுவே மிகவும் பழமையானதாகும். இதற்கு சுந்தரபாண்டியன் கோபுரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இது கி.பி.1216 முதல் 1238 வரை ஆட்சி செய்த மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது என்றும், கி.பி. 1251 முதல் 1278 வரை அரசாண்ட சடையவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன.

இது 153 அடி உயரம் கொண்டது. இதன் அடித்தளம் நீளம்111 அடி அகலம் 65 அடி. கிழக்கு கோபுரம் 1011 சுதைகளுடன் 9 நிலைகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

தெற்கு கோபுரம் விசுவநாத நாயக்கர் காலத்தில் கி.பி.1559-ல் இந்த கோபுரம் திருச்சி நகரைச் சேர்ந்த சிராமலை செவ்வந்தி மூர்த்தி செட்டியார் என்பவரால் கட்டப்பட்டது. 4 கோபுரங்களிலும் இந்த கோபுரம் உயரமானது.இந்த கோபுரத்தின் உயரம் 160 அடி, அடி தளத்தின் நீளம் 108 அடி, அகலம் 57 அடி. 9 நிலைகளை கொண்டு அமைந்துள்ள இதில் புராண கதைகளை விளக்கும் 1511 சுதை சிற்பங்கள் உள்ளன. கட்டுமானத்தின்போது இவை அமைக்கப்படவில்லை.

பிற்காலத்தில் தான் அமைக்கப்பட்டது என்ற செய்தியை கி.பி.1798-ம் ஆண்டு கல்வெட்டு கூறுகிறது. மேற்கு கோபுரம் கி.பி.1315 முதல் 1347 வரை மதுரையை ஆண்ட சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் இதனை கட்டினான். கி.பி.1323-ல் கட்டி முடிக்கப்பெற்றது. 9 நிலைகளை கொண்டது.இதன் உயரம் 154.6 அடி. அடிதளம் நீளம் 101 அடி, அகலம் 63.6 அடி.இதில் 1124 சுதை சிற்பங்கள் உள்ளன. சித்திரை வீதியில் இருந்து வாகனங்களில் பொருட்களை கோவிலுக்குள் கொண்டுவர ஏதுவாக படிகள் இல்லாதபடி இக்கோபுரவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

வடக்கு கோபுரம் இந்த கோபுரத்தின் கட்டுமான பணியை முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி.1564-72) தொடங்கினார். இதனை கி.பி.1878-ல் வயிநகரம் செட்டியார் நிறைவு செய்தார். 9 நிலைகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 152 அடி. அடி தளத்தின் நீளம் 111.6 அடி. அகலம் 66.6 அடி. இந்த கோபுர வாயிலின் மேற்கு பக்கம் முனியாண்டி கோவில் உள்ளது. இது ஒரு நாட்டுப்புற காவல் தெய்வமாகும்.

இந்த கோபுரத்தை கட்டிய கிருஷ்ணப்ப நாயக்கர் மீனாட்சி அம்மன் கோவிலில் மேலும் பல திருப்பணிகளை செய்துள்ளார். சுந்தரேசுவரர் சன்னதி முன்னுள்ள கம்பத்தடி மண்டபம், இதன் அருகில் அமைந்துள்ள திருஞானசம்பந்தர் மண்டபம், 2-ம் பிரகார சுற்று மண்டபம், அம்மன் கோவில் நடுப்பிரகார மண்டபம் ஆகியவை இந்த மன்னர் கட்டியது ஆகும்.

இவரது ஆட்சி காலத்தில் தான் அரியநாத முதலியார் கி.பி.1570-ல் ஆயிரங்கால் மண்டபத்தை கட்டினார். ராய கோபுரம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் நான்குப்புற கோபுரங்கள் தவிர இத்துடன் தொடர்புடைய கோபுரம் புதுமண்டபத்திற்கு கிழக்கே ஒன்றுண்டு.

இந்த கோபுரம் திருமலைநாயக்கரால் கி.பி.17-ம் நூற்றாண்டு கட்ட தொடங்கப்பட்டது. இதன் அடித்தளம் 174 அடி நீளமும், 117 அடி அகலமும் கொண்டது. மற்றைய 4 கோபுரங்களின் அடித்தளங்களோடு ஒப்பிடும்போது இந்த கோபுரத்தின் அடித்தளம் மிக நீளமாகவும் அகலமாகவும் உள்ளது. இந்த கோபுரம் ராயகோபுரம் என்று அழைக்கப்படுகிறது. ஏதோ சில காரணங்களால் இந்த கோபுரம் முதல் தளத்துடன் நின்று விட்டது. முதல் தளத்தின் உயரம் 57 அடியாகும்.

இதுகட்டி முடிக்கப்பட்டிருந்தால் ஏனைய 4 கோபுரங்களை விட உயர்ந்த கோபுரமாக திகழ்ந்திருக்கும். வெளிகோபுரங்கள் தவிர சுவாமி கோவிலில் 5 சிறிய கோபுரங்களும், அம்மன் கோவிலில் 3 சிறிய கோபுரங்களும் அம்மனுக்கும், சுவாமிக்கும் தனித்தனியாக 2 தங்க விமானங்களும் உள்ளன. 160 அடி உயரம் கொண்ட மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுரம் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இக்கோவில் எட்டு கோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களை தாங்குகின்றன. இத் திருக்கோவில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது.

இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. இவற்றுள் கிழக்கு கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்கு கோபுரம் கி.பி. 1323-ம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559-ம் ஆண்டிலும், வடக்கு கோபுரம் கி.பி. 1564 முதல் 1572-ம் ஆண்டிலும் கட்டப்பட்டு முடிக்கப் பெறாமல், பின்னர் 1878-ம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தை சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப் பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

இவற்றுள் தெற்கு கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது.மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1570-ல் கட்டப்பெற்று 1964-ம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப்பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570-ம் ஆண்டில் கட்டப்பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப்பட்டது.

#Spirituality

திருமணதடை நீக்கும் விரதம்!
திருமணதடை நீக்கும் விரதம்!

சித்திரை மாதம் தசமி திதி, ஸ்ரீ வாசவி ஜயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. அன்னை வாசவி கன்னிகா பரமேஸ்வரி, கலியுகத்தில் அவதரித்த அன்னை ஆதிபராசக்தியின் அம்சம்.

கி.பி 11 -ம் நூற்றாண்டு ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் வாழ்ந்த வணிகர் குலத்தைச் சேர்ந்த தம்பதியான குஸ்ம ஸ்ரேஷ்டி – குஸ்மாம்பா தம்பதி நீண்ட நாள்கள் புத்திர பாக்கியம் இல்லாமல் புத்திர காமேஷ்டி யாகம் செய்து அன்னையை வேண்டினர். அவர்களின் பக்திக்கு இரங்கிய அன்னை, அவர்களுக்குத் தானே மகளாக வந்து பிறந்தாள்.

பிறந்த கணத்தில் அன்னை பெற்றோருக்கு நான்கு கரங்களோடு காட்சி கொடுத்து, தான் இறைவடிவம் என்பதை உணர்த்தி அடுத்த கணம் சாதாரண மழலை ஆனாள்.

தெய்வமே தனக்கு மகளானது கண்டு மகிழ்வுற்று அவளைச் சீரோடும் சிறப்போடும் வளர்த்து வந்தனர். அன்னை அழகிலும் அறிவிலும் செழித்து வளர்ந்தாள்.

அவள் அழகுகண்டு அவளைப் பெண்கேட்டு அனுப்பினான் விஷ்ணுவர்த்தன் என்னும் மன்னன். ஆனால் கன்னிகா தேவி, தான் காலம் முழுதும் சிவபூஜை செய்யவே விரும்புவதாகவும், யாருக்கும் மனைவியாக இருக்க முடியாது என்றும் சொல்லி மறுத்தாள்.

அதைக் கேள்விப்பட்ட விஷ்ணுவர்த்தன் அவளையும் அவள் ஊரையும் அழித்துவிடுவதாகப் படையெடுத்துவந்தான். அப்போது ஊரில் உள்ளோர் கூடிப் பேசினர்.

ஒரு பெண்ணுக்காக ஊரே ஏன் அழிய வேண்டும் என்று 600க்கும் மேற்பட்ட கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் ஊரைவிட்டு வெளியேறிப் போயினர். ஆனால் கன்னிகா தேவியோடு எஞ்சியிருந்த மக்கள் துணை நின்றனர்.

அன்னை அப்போது தான் யார் என்பதை விளக்கித் தன் முடிவுக்குக் கட்டுப்படுபவர்கள் என்னோடு வானுலுகம் புகலாம் என்றாள். மேலும், ‘என்னைத் தெய்வமாக ஏற்ற மக்களுக்குக் கலியுகம் முடியும்வரை தான் துணை நின்று காத்தருள்வேன்’ என்று வாக்குக் கொடுத்தாள்.

அன்னையின் முடிவை ஏற்பதாக 102 கோத்திரத்தினர் உடன்பட்டனர். மற்றவர்களை அன்னை ஆசீர்வதித்து, உலகில் வாழும் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை விளக்கினாள். பின்பு அக்னி குண்டம் எழுப்பி அதில் அன்னை இறங்கி மறைந்தாள். அன்னையின் பின் மற்ற 102 கோத்திரத்தில் குழந்தைகள் வயோதிகர்கள் தவிர அனைவரும் அக்னிகுண்டத்தில் இறங்கித் தீத் தீண்டாது மறைந்தனர்.

அந்தக் கணத்தில் அன்னையை அபகரிக்கப் படையெடுத்துவந்த விஷ்ணுவர்த்தனின் தலை வெடித்துச் சிதறியது. இதைக் கண்ட மன்னனின் படைகள் சிதறி ஓடின. அவன் நாட்டில் பல துர் சகுனங்கள் நிகழ்ந்தன.

இதற்கெல்லாம் காரணம் வாசவி அன்னையின் கோபமே என்று உணர்ந்த விஷ்ணுவர்த்தனின் மகனான ராஜராஜ நரேந்திரன் அன்னை வாசவியின் சகோதரனான விருபாட்சனை அணுகி மன்னிப்புக் கோரினான். அன்னைக்கு ஓர் ஆலயம் எழுப்பி வழிபடுவதாகக் கூறி அவ்வாறே ஒரு கோயிலையும் எழுப்பினான். வணிகர் குலம் முழுமையும் அன்னையைக் குலதெய்வமாகக் கொண்டு வழிபடத் தொடங்கினர்.

அன்னை அவதரித்த சித்திரை வளர்பிறை தசமி திதியை அன்னையின் ஜெயந்தி தினமாகச் சிறப்போடு கொண்டாடி வருகின்றனர். அன்னை கன்னிகா பரமேஸ்வரியின் வழிபாடு காலப்போக்கில் நாடெங்கும் பரவியது. தமிழகத்தில் பல்வேறு தலங்களில் அன்னை கன்னிகா பரமேஸ்வரிக்கு ஆலயங்கள் உள்ளன.

அன்னையை வழிபட்டால் சத்ரு பயம் நீங்கும் என்றும் வேண்டும் செல்வம் சேரும் என்பதும் நம்பிக்கை. திருமணமாகாத பெண்கள் கன்னிகா பரமேஸ்வரியை மனதில் நினைத்து விரதம் இருந்து 48 நாள்கள் தியானித்தால் அன்னை மனம் மகிழ்ந்து அவர்களுக்குத் திருமண வரம் அருள்வாள் என்பது ஐதிகம்.

#Spirituality

தீயசக்தியை விரட்டும் அம்மன் பாிகாரம்!
தீயசக்தியை விரட்டும் அம்மன் பாிகாரம்!

வீட்டில் இரவு படுத்தால் நிம்மதியான தூக்கம் இல்லை, சந்தோஷமான வாழ்க்கை இல்லை, வீட்டில் இருப்பவர்களுக்கு நோய்நொடி பிரச்சனை, கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியின் அதிகமா, கண் திருஷ்டியின் ஆதிக்கமா, என்று புரியவில்லை.

சந்தோஷமாக இருந்த குடும்பம் தான், ஒரு சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சந்தோஷம் தொலைந்து போய்விட்டது.

என்ன செய்வது என்று தெரியாமல் நிர்கதியாக நிற்பார்கள். வீட்டின் மூலை முடுக்குகளில் மறைந்திருக்கும் துர் சக்திகளை விரட்டி அடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்லவா. அவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள ஒரு பரிகாரம்.

இந்த எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள். உங்கள் வீட்டில் நீங்கள் இழுந்த சந்தோஷத்தை ஒரே நாளில் மீண்டும் பெறுவதற்கு இந்த பரிகாரம் துணையாக இருக்கும். இந்த பரிகாரத்தை ஒரு வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும்.

பூஜை அறையில் செய்யலாம். ஒரு பித்தளை சொம்பு அல்லது செம்பு சொம்பு, சிறிய அளவில் இருக்கும் சொம்பு எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் சுத்தமான நல்ல தண்ணீரை ஊற்றி கொஞ்சமாக வேப்ப இலை, கொஞ்சமாக மஞ்சள் பொடி ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை, அந்த தண்ணீரில் போட்டு அதை அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

பூஜைக்கு முன்பு வழக்கம் போல பூஜை அறையை சுத்தம் செய்து, சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்திருக்க வேண்டும்.

ஒரு தாம்பூல தட்டில் வேப்ப இலைகளை பரப்பி, அதன் மேலே இரண்டு மண் அகல் விளக்குகளை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். உங்களுக்கு இஷ்டமான ஏதாவது ஒரு அம்மனை நினைத்துக் கொள்ளுங்கள்.

அந்த அம்மனின் பெயரை 108 முறை உச்சரித்து மந்திரம் சொல்ல வேண்டும். இல்லை என்றால் ‘ஓம் சக்தி பராசக்தி’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி அம்மனை மனம் உருகி வீட்டிற்கு அழைக்க வேண்டும்.

உண்மையான பக்தியோடு நம்பிக்கையோடு நீங்கள் அம்மனின் பெயரைச் சொல்லி வீட்டிற்குள் அழைத்தால், அம்மன் வந்து நீங்கள் வைத்திருக்கும் அந்த சொம்பு தண்ணீரில் இறங்கி விடுவாள். மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் தீர வேண்டும். வீட்டில் ஏதாவது துர்ஷக்தி இருந்தால் கூட, கெட்ட சக்தி இருந்தால் கூட, அது வீட்டை விட்டு வெளியேற வேண்டும்.

குடும்பத்தில் சந்தோஷம் பிறக்க வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து, கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். பூஜை நிறைவடைந்த பின்பு வெள்ளிக்கிழமை அன்றே அந்த கலச சொம்பில் இருக்கும் தண்ணீரை எடுத்து வீட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் நன்றாக தெளித்து விடுங்கள்.

வீட்டில் இருப்பவர்கள் மேலும் இந்த தண்ணீரை தெளித்து விடுங்கள். அந்த அம்மன் இறங்கிய தீர்த்தம் தான் இது. அந்த தண்ணீரில் போட்ட எலுமிச்சம் பழத்தை எடுத்து பூஜையறையில் மூன்று நாட்கள் வைக்க வேண்டும்.

எலுமிச்சம்பழம் அழுகாமல் காய்ந்து விட்டால், உங்களுடைய வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை. காய்ந்த எலுமிச்சம் பழத்தை கால்படாத இடத்தில் போட்டு விடலாம்.

எலுமிச்சம் பழம் அழுகி இருந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை அந்த எலுமிச்சம் பழம் தன்னகத்தே ஈர்த்துக் கொண்டது என்று அர்த்தம். கைப்படாமல் அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து தூக்கிக் கொண்டு போய் ஊருக்கு வெளிப்பக்கம் போட்டுவிட்டு வந்து விடுங்கள். அவ்வளவுதான். குடும்ப பிரச்சனைக்கு ஒரு சில நாட்களில் நல்லதொரு தீர்வை அந்த அம்பாளே காட்டிக் கொடுப்பாள். இது ஒரு எளிமையான பரிகாரம் தான் நம்பிக்கை உள்ளவர்கள் செய்து பலன் பெறலாம்.

#Spirituality