ruwan-wijewardene – tamilnaadi.com

சஜித் மற்றும் ஐதேக தலைவர்களுக்கு இடையில் தீர்க்கமான சந்திப்பு!
இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆகியவற்றின் தலைவர்களுக்கு இடையிலான மற்றுமொரு விசேட சந்திப்பு இன்று (24) கொழும்பில் இடம்பெற்றது.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் உள்ள ‘கொழும்பு கிளப்’பில் மதிய உணவுக் கூட்டமாக இச்சந்திப்பு நடைபெற்றது. எதிர்காலத்தில் இரு கட்சிகளும் இணைந்து அரசியல் களத்தில் செயல்படுவதற்கான ஒருமித்த கருத்தை எட்டுவதே இதன் பிரதான நோக்கமாகும்.

இந்த உயர்நிலைச் சந்திப்பில் இரு தரப்பிலிருந்தும் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் மூத்த ஆலோசகர் லக்ஷ்மன் பொன்சேகா. பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அதுகோரல, அகில விராஜ் காரியவசம், நவீன் திசாநாயக்க மற்றும் சாகல ரத்நாயக்க.

கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் திகதி ஆரம்பமான இந்தப் பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக இன்றைய சந்திப்பு அமைந்துள்ளது. இன்றைய கலந்துரையாடல் மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாகச் சஜித் பிரேமதாச தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இரு கட்சிகளுக்கும் இடையிலான இந்த இணக்கப்பாடு, இலங்கையின் எதிர்கால அரசியல் வரைபடத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கிடையில் திடீர் சந்திப்பு : பேசப்பட்ட விடயங்கள் என்ன….
முன்னாள் ஜனாதிபதிகளுக்கிடையில் திடீர் சந்திப்பு : பேசப்பட்ட விடயங்கள் என்ன….

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe) மைத்திரிபால சிறிசேனவுக்கும் (Maithripala Sirisena) இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் ஏற்பாட்டில் கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று (13) பிற்பகல் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா (Anura Priyadharshana Yapa), சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha), மகிந்த அமரவீர (Mahinda Amaraweera), நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva), உதய கம்மன்பில (Udaya Gammanpila), நிமல் லான்சா (Udaya Gammanpila), ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne), ருவன் விஜேவர்தன (Ruwan Wijewardene), சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka) மற்றும் மேலும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இந்தக் கலந்துரையாடல் குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, “பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்தது. ஐக்கிய மக்கள் சக்தியில் யாரும் வரவில்லை. எதிர்காலத்தில் அவர்களும் கலந்துரையாடலில் இணைவார்கள்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒன்றாகப் போட்டியிடுவதா அல்லது தனித்தனியாகப் போட்டியிடுவதா என்பதை விரைவில் முடிவு செய்ய வேண்டியிருக்கும்.” என தெரிவித்தார்.

இதேவேளை கலந்துரையாடலில் கலந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவிக்கையில், “விசேட கலந்துரையாடல் எதுவும் இல்லை. இது ஒரு நட்புரீதியான சந்திப்பு. முன்னாள் ஜனாதிபதி எங்களை வரச் சொன்னார், அதனால் நாங்கள் வந்தோம்.” என குறிப்பிட்டார்.

தேர்தலுக்குப் பின்னர் ரணில் – சஜித் சங்கமம்
தேர்தலுக்குப் பின்னர் ரணில் – சஜித் சங்கமம்

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்காலத்தில் ஒன்றிணைவதற்குரிய சாத்தியம் உள்ளது எனவும், நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இந்தச் சங்கமம் நடக்கலாம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

ஐக்கிய மக்கள் சக்தியையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் ஒன்றிணைத்து தேர்தலில் போட்டியிட வைப்பதற்குரிய முயற்சிகள் எடுக்கப்பட்டன.

எனினும், அந்த முயற்சி கைகூடவில்லை. எனினும், இவ்விரு தரப்பும் ஒரு முகாமில் இருந்தவை. எனவே, இரு தரப்பினரும் இணைவதற்குரிய சாத்தியம் உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இணைந்து, நாட்டு மக்களுக்கு யானையை வழங்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்கும் நோக்கிலேயே நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் சிலிண்டர் சின்னத்தை முன்வைத்தோம்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஆணை கிடைத்தால் நாட்டை ஆளவும் தயார். எதிர்க்கட்சிப் பதவி கிடைத்தால் அர்ப்பணியையும் எமது அணி சிறப்பாக முன்னெடுக்கும் என்றார்.

ரணிலின் சேவை நாட்டுக்கு மீண்டும் தேவை! ஐக்கிய தேசியக்கட்சி ஆரூடம்
ரணிலின் சேவை நாட்டுக்கு மீண்டும் தேவை! ஐக்கிய தேசியக்கட்சி ஆரூடம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சேவை இந்த நாட்டுக்கு மீண்டும் தேவைப்படலாம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,

“ நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது தனி ஒரு ஆளாக சவாலை ஏற்றவர்தான் ரணில் விக்ரமசிங்க. அவர் அன்று சவாலை ஏற்றதால் தான் மக்கள் வாழக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நாட்டை ஆள்வதற்குரிய அனுபவம் குறைவு.

எனவே, நாட்டைச் சரியாக வழிநடத்த முடியாமல் பொருளாதாரம் மீண்டும் சரிந்தால், அந்தச் சந்தர்ப்பத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் இந்த நாட்டுக்குத் தேவை.” – என்றும் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் எதிர்கால அரசியல் தொடர்பில் வெளியான அறிவிப்பு
ரணில் விக்ரமசிங்கவின் எதிர்கால அரசியல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் தேர்தலில் போட்டியிடமாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எதிர்கால அரசியல் சக்திகளுக்கும் தலைமைத்துவத்தை வழங்குவார் என விஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ருவான் விஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியலிலிருந்தும் நாடாளுமன்றத்திற்கு வரமாட்டாரா என ஊடகவியலாளர் ஒருவர் வினவிய கேள்விக்கு பதிலளித்த ருவான் விஜயவர்தன, தேசிய பட்டியலிலிருந்தும் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வரமாட்டார் என கூறியுள்ளார்.

இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி பதவியை வகித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர்கள் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்வதற்காக மீண்டும் நாடாளுமன்றம் செல்லும் பாரம்பரியம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டார்லிங்க் இணைய சேவை மூன்று மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் சாத்தியம்
ஸ்டார்லிங்க் இணைய சேவை மூன்று மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் சாத்தியம்

எலோன் மஸ்க்கின் (Elon Musk) ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையானது மூன்று மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என இலங்கை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் ருவான் விஜேவர்தன (Ruwan Wijewardene) தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“முன்னதாக, இலங்கையில் தமது இணைய சேவையை தொடங்குவதற்கான விண்ணப்பத்தை எலோன் மஸ்க் அனுப்பியிருந்தார்.

இதனையடுத்து, அதற்கான பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டு, அவை முடிந்தவுடன் மூன்று மாதங்களில் செயற்கைக்கோள் இணைய சேவையை ஆரம்பிக்க முடியும்.

மேலும், ஸ்டார்லிங்க் சேவை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கையில் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும்.

அதேவேளை, எலோன் மஸ்க், இலங்கையில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையிலும் ஆர்வமாக உள்ளார்.

அது மாத்திரமன்றி, இணைய சேவை இலங்கைக்கு பாரியளவில் நன்மை பயக்கும். குறிப்பாக இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த உதவும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலில் பொதுத் தேர்தல் : ஏற்பட உள்ள பாரிய சிக்கல் நிலை
முதலில் பொதுத் தேர்தல் : ஏற்பட உள்ள பாரிய சிக்கல் நிலை

நாட்டின் தற்போதைய நிலையில் பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன(Ruwan Wijewardene) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர், ஒக்டோபர் காலப்பகுதிக்குள் நடத்த வேண்டும். அதன் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும்.

என்றாலும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துமாறு பொதுஜன பெரமுன உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் கோரி வருகின்றன.

ஆனால் நாட்டின் தற்போதைய நிலையில் பொதுத தேர்தல் இடம்பெற்றால் எந்தவொரு கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைப்பதற்கு போதுமான பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை.

அவ்வாறான நிலை ஏற்பட்டால் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி முன்னெடுத்துவரும் அனைத்து வேலைத்திட்டங்களும் தடைப்படும். நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளும் மீண்டும் பின்தள்ளப்படும்.

அதனால் ஆரம்பமாக ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு, ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) நிச்சயமாக அதில் வெற்றிபெறுவார். அதன் பின்னர் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு சென்றால் நிலையான ஆட்சி ஒன்றை நாட்டில் ஏற்படுத்தலாம்.

மேலும் ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் பிரதமராக இருந்தே குறுகிய அதிகாரங்களுடன் நாட்டின் அபிவிருத்திக்கு பல நடவடிக்கைகளை முன்னெடுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டு தொடர்பில் ரணில் தரப்பில் இருந்து அறிவிப்பு
2024ஆம் ஆண்டு தொடர்பில் ரணில் தரப்பில் இருந்து அறிவிப்பு

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு தேர்தல் வருடமாக இருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மூன்று தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் 2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்கும். ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படும் .

மேலும், எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி, கூட்டணி அமைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் ஜனாதிபதியுடன் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும் ருவான் விஜேவர்தன சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பணவீக்கம் குறைந்துள்ள போதிலும், பொருட்களின் விலை உயர்வாக இருப்பது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பொருட்களின் விலையை கட்டுப்படுத்த சில வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்துவது அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் ருவான் விஜேவர்தன
ஜனாதிபதித் தேர்தலில் ருவான் விஜேவர்தன

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் போட்டியிடப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

வத்தளை பிரதேசத்தின் புதிய அமைப்பாளராக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பலமண்டல கூட்டத்தில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டுள்ளார் “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பாரிய கூட்டணியில் போட்டியிடுவார்.

இந்த கூட்டணி சிறிலங்கா சுதந்திர கட்சி, பொது ஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி போன்ற உட்பட கட்சிகளில் இருந்தவர்களால் உருவாக்கப்படும் ஜனாதிபதி விக்ரமசிங்க இந்த கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சி செய்கிறார் என்றும் விஜேவர்தன கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர், வத்தளை அமைப்பாளராக ஹரீன் பெர்னாண்டோ நியமிக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் டலஸ் அலகப்பெரும ஆகிய மூவருக்கும் இடையிலான போட்டியே இடம்பெறும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

“எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அடிக்கடி காட்டும் தயக்கம் காரணமாகத் தேர்தலில் போட்டியிட மாட்டார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் எதிர்க்கட்சித் தலைவர் தனது ‘ஆசை- பயம் அணுகுமுறையைக் கடைப்பிடிப்பார்” என்று அவர் கூறியுள்ளார்.

எரிபொருள் கேட்டால் துப்பாக்கிச் சூடு! – ருவான் விசனம்
“பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படும் நாட்டில் தொழிலாளர்களின் உரிமைகள் ஒருபோதும் பாதுகாக்கப்படாது.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையிலான அரசு வெளியேறியதும் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு தற்போதைய தொழிலாளர்களின் போராட்டம் வெற்றிபெறும் எனவும், அதற்காக ஐக்கிய தேசியக் கட்சி அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக மக்கள் ஒன்று கூடி அனைத்து இலங்கையர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்துக்கு தீர்வைக் கோருகின்றனர் என்று தெரிவித்த அவர், நேற்று நாடெங்கும் மக்கள் வீதிக்கு இறங்கியமைக்குக் காரணம் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காகவே எனவும் குறிப்பிட்டார்.

எனவே, பொதுமக்களின் இந்தக் கோரிக்கைகளை அரசு புரிந்துகொள்ள வேண்டும் எனவும் ருவான் விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews