Public Property Act SL – tamilnaadi.com

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான பொதுச் சொத்து முறைகேடு வழக்கு: இன்று மீண்டும் நீதிமன்றில் விசாரணை!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கு, இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் லண்டன் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளுக்காக 2025 ஆகஸ்ட் 22 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) சென்ற அவர், கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 26 வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அவரது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு, 2025 ஆகஸ்ட் மாத இறுதியில் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய மூன்று சரீரப் பிணைகளில் செல்ல நீதவான் நிலுபுலி லங்காபுர அனுமதி வழங்கியிருந்தார்.

கடந்த 2025 அக்டோபர் 29 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பான அனைத்து விசாரணைகளையும் பூர்த்தி செய்து, அதன் அறிக்கையை 2026 ஜனவரி 28 ஆம் திகதிக்குள் (இன்று) நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, இன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றம் முக்கிய தீர்மானங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருவது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.