President Election Ranil Wikremesinghe – tamilnaadi.com

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணிலுக்கு வாய்ப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது மொட்டுக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கும் இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று(17.01.2024) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

“தற்பொழுது மொட்டுக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவதற்கான நான்கு வேட்பாளர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. குறித்த நான்கு பெயர்களில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரும் உள்ளது. கடைசிநேரத்தில் இந்தப் பட்டியலில் பெயர் இல்லாத புதிய நபர் ஒருவர் கூட களமிறக்கப்படலாம்.

எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய ஒருவரே வேட்பாளராக நியமிக்கப்படுவார். அதன் காரணமாக வேட்பாளர் குறித்து கவலைப்படத் தேவையில்லை. வேட்பாளர் யார் என்பது முக்கியமல்ல, வெற்றி பெற முடியுமா என்பதுதான் முக்கியம். ஏனெனில் எமது பிரதிநிதித்துவ முகாமை வெற்றிபெறச் செய்ய வேண்டியது அவசியமாகும்.

அத்துடன், எங்களது அரசியல் முகாமுக்கு வெற்றியைத் தரக்கூடிய பலம் கொண்டுள்ள எந்தக் கட்சி அல்லது சக்தியுடன் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

மேலும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை மறுசீரமைப்பதற்காக கிராமிய மக்களைக் தெளிவூட்டும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

ரணிலுக்கு எவருமே சவாலாக மாட்டார்கள்
ரணிலுக்கு எவருமே சவாலாக மாட்டார்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு எவரும் சவாலாக அமையமாட்டார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் இடம்பெறும். தேர்தலைப் பிற்போடும் எண்ணம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (10.10.2023) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்கு அரசு திட்டமிட்டு வருகின்றது என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

அவ்வாறான எந்த எண்ணமும் அரசுக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ இல்லை. அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருடமே இடம்பெற இருக்கின்றது. அதனால் உரிய காலத்தில் தேர்தல் இடம்பெறும்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறு தயாராகப் போகின்றது, அதற்கான வேலைத்திட்டங்கள் என்ன என்பவை தொடர்பாக கடைசியாக இடம்பெற்ற கட்சியின் செயற்குழுவின்போது நாங்கள் கலந்துரையாடி இருந்தோம்.

அதனால் எதிர்க்கட்சியினர் தங்களின் பிரசாரத்துக்காக எந்த அடிப்படையும் இல்லாத விடயங்களைத் தெரிவி்த்து மக்களைக் குழப்பி வருகின்றனர்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி, ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்கு அரசு திட்டமிட்டு வருகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான எந்த யோசனையும் தெரிவிக்கப்படவில்லை. நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருக்கின்றபடியாலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தீர்மானங்களை விரைவாக முன்னெடுக்க முடியுமாகி இருக்கின்றது.

அதனால் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையைத் தற்போதைக்கு இல்லாமலாக்க எந்தத் திட்டமும் இல்லை.

ஆனால், நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகும். அதனால் எதிர்காலத்தில் அனைவருடனும் கலந்துரையாடி இது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளலாம்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதாக தம்மிக்க பெரேரா தெரிவித்திருக்கின்றார். அது அவருடைய உரிமை. அவரைப் போன்று ஜனாதிபதியாகக் கனவு காண்பவர்கள் பலரும் இருக்கின்றனர்.

என்றாலும் வங்குரோத்து அடைந்திருந்த நாட்டை மீட்பதற்கு யாரும் முன்வராத நிலையில் இந்த நாட்டை மீண்டும் ஸ்திரமான நிலைக்குக் கொண்டுவர யார் நடவடிக்கை எடுத்தது என்பது மக்களுக்குத் தெரியும்.

அதனால் தம்மிக்க பெரேராவோ அல்லது வேறு யாராக இருந்தாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு சவாலாக அமையமாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.