Pollice – tamilnaadi.com

கொத்து ரொட்டியால் மோதல்! – இளைஞர் அடித்து கொலை
காலி பத்தேகம பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு கொத்து ரொட்டி வாங்கச் சென்ற இளைஞர் உணவக உரிமையாளரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்தேகம, நாகொட பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு கொத்து ரொட்டி வாங்குவதற்காக குறித்த இளைஞர் சென்றுள்ளார்.

அப்போது இளைஞருக்கும் உணவக உரிமையாளருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த இளைஞர் வெளியே தனது வீடு சென்று கூரிய ஆயுதம் ஒன்றை எடுத்து வந்து உணவக உரிமையாளரை தாக்கியுள்ளார்.

அதன் காரணமாக ஆத்திரமடைந்த உணவக உரிமையாளரும் அவரது மகனும் இணைந்து குறித்த இளைஞரை உலக்கையால் அடித்து தாக்கியுள்ளது.

இதனால் சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் உணவக உரிமையாளரின் மகனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

சூட்கேஸ் பெட்டியில் புதுமணப்பெண்
பிரித்தானியா மேற்கில் உள்ள யார்க்ஷ்யர் பகுதியில் திருமணம் முடிந்து நான்காவது நாளில் பெண் ஒருவர் சூட்கேஸ் பெட்டி ஒன்றினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமையே அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதில் 45 வயதுடைய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சாலையோரத்தில் மறையான இடத்தில் சூட்கேஸ் பெட்டியினுள் திணிக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்பது தங்களால் நம்ப முடியவில்லை.அவர் மிகவும் எளிமையான, இரக்க குணம் கொண்டவர். உதவி கேட்டு யார் அவரை நாடினாலும் உதவும் குணம் கொண்டவர் என அவரது நெருங்கிய தோழிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இந்த கொலை தொடர்பில் உள்ள மர்மங்களை அவிழ்ந்த பொலிஸ் தரப்பு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.

#WorldNews

சினிமா பாணியில் பணம் கொள்ளை! – சாரதி அதிரடி கைது
ஹற்றன் நகரில் சினிமாப் பாணியில் 6 கோடி ரூபா பணத்துடன் வானைக் கடத்திய சாரதியை நேற்று விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

ஹற்றன் நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம். இயந்திரத்தில் வைப்பில் இடுவதற்காக கண்டியில் இருந்து தனியார் நிறுவனம் ஒன்றால் கொண்டு வரப்பட்ட பணமே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தனியார் நிறுவனத்தின் அதிகாரி, பாதுகாப்பு அதிகாரி மற்றும் சாரதி ஆகியோர் ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை வைப்பிலிட வந்துள்ளனர்.

அந்தவேளை அதிகாரியும் பாதுகாப்பு ஊழியரும் வானிலிருந்து இறங்கியவுடன் சாரதி வானை எடுத்துக் கொண்டு பணத்துடன் தப்பித்துள்ளார்.

தலவாக்கலை– லிந்துலை வழியாக அம்பேவல பகுதியில் வான் செல்லுகின்றமையை தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்து பொலிஸார் மற்றும் அதிரடிப் படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப் படையினர் வானை வழிமறித்து சாரதியை கைது செய்துள்ளனர். அத்துடன் குறித்த பணத் தொகைகைகயும் வானையும் கெப்பட்டிப்பொல பொலிஸ் நிலையத்தில் வைத்து ஹற்றன் பொலிஸ் நிலையத்துக்கு கையளித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரான சாரதியையும் பணத் தொகையையும் ஹற்றன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது என நுவரெலியா விசேட அதிகாரப் படையினர் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

எதிர்க்கட்சி – ஆளும்கட்சி நடுவீதியில் மோதல்
நாவலப்பிட்டி ஜயதிலக மைதானத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற நடைபாதை தொடர்பில் கண்காணிக்க அங்கு வருகை தந்த எதிர்க்கட்சி மற்றும் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே இன்று கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நடைபாதை 20 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வருகிறது எனவும் இதனைப் பார்வையிட நகர சபையின் முன்னாள் தவிசாளர், ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர், நாவலப்பிட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் எனப் பலர் அங்கு வந்திருந்தனர்.

எனினும் மைதானத்துக்குள் நுழையும் பிரதான வாயில் நகர சபையால் மூடப்பட்டுள்ளதால் அவர்கள் மைதானம் அருகில் காத்திருந்தனர்.

இந்த நிலையில் நாவலப்பிட்டி நகர சபை தற்போதைய தவிசாளர் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு வருகை தந்த போது இருதரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு இறுதியில் கைகலப்பு மோதலாக மாறியுள்ளது.

இவர்களின் அடிதடியை கட்டுப்படுத்த அங்கு பொலிஸார் வருகை தந்ததன் பின்னரும் கூட இரு தரப்பினரிடையே மோதல் தொடர்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இரு தரப்பினரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் சுற்றிவளைப்பில் 8 பேர் அதிரடி கைது
நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் மற்றும் அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை பொலிஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதற்கமைய பானம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெடஓய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று சுற்றிவளைப்புகளில் அனுமதிப்பத்திரமின்றி டிரக்டர்களில் மணல் ஏற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து இரண்டு டிரக்டர்களும், ஜே.சி.பி. இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொத்துவில், திஸ்ஸமஹாராம ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 33, 34 மற்றும் 52 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது

மேலும் வாகரை மத்தி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் காடழிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது என வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பு அழிக்கப்பட்டிருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மதுபான சுற்றிவளைப்பொன்றில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் இவரிடமிருந்து 33.75 லீற்றர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் அத்துடன் 178 லீற்றர் கோடா, ஒரு எரிவாயு அடுப்பு என்பவற்றையும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

223 ஆமைகளுடன் மூவர் கைது
நீர்கொழும்பு பகுதியில் நான்கு மாடிகளைக் கொண்ட வீடொன்றில் வளர்ப்பதற்கு தடைசெய்யப்பட்ட உயிரினமான 223 நட்சத்திர ஆமைகள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதிப் பத்திரம் இன்றி நட்சத்திர ஆமைகளை வைத்திருப்பதற்கோ அல்லது வாகனங்களில் ஏற்றி செல்லவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 223 நட்சத்திர ஆமைகளை ரெஜிபோம் பெட்டிகளில் அடைத்து வாகனங்களில் கொண்டு செல்ல தயார் செய்யப்பட்ட நிலையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் இந்தியப் பிரஜைகள் எனவும் ஒருவர் முல்லேரியாவைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களிடமிருந்து லொறி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களின் விசாரணைகளை மேற்கொண்டு நீர்கொழும்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாய்க்கால் நீரில் மூழ்கி சங்கானையில் சிறுவன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் சங்கானை தேவாலய வீதியை சேர்ந்த ஆறு வயதுச் சிறுவன் குளத்திற்கு செல்லும் வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சங்கானை ஸ்தான அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் ஆறு வயதுடைய நிறோஜன் ஸ்டீபன் என்ற சிறுவனே உயிரிழந்தவராவார்.

நேற்று நண்பகலில் இருந்து சிறுவனை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்ததையடுத்து, அப்பிரதேச மக்கள் தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.

கிராமத்தவர்களால் தொடர்ந்தும் சிறுவன் தேடப்பட்டுவந்த நிலையில், இரவு 9.30 மணியளவில் வாய்க்காலில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அப்பளத்தை எடுத்து உண்ட சிறுமிக்கு தாய் வாயில் சூடு!
சமைத்து வைத்த உணவிலிருந்த அப்பளம் ஒன்றை தாயாருக்குத் தெரியாது எடுத்து சாப்பிட்ட காரணத்தால் 5 வயது மகளுக்கு தாய் வாயில் சூடு வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் கிளிநொச்சி அக்கராயன் விநாயகர் குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில் குறித்த தாய் அக்கராயன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் தந்தை தொழிலுக்கு சென்ற வேயை இந்தக் கொடூர செயல் இடம்பெற்றுள்ளது எனவும் இதனை அவதானித்த சிறுமியின் தாத்தா பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அக்கராயன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் கைது செய்த தாயாரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

கொடூரமாக மனைவி வெட்டிக் கொலை! – கணவன் கைது
குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கணவன் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் களுத்துறை புளத்சிங்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கோவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த (வயது–54) என்ற பெண்ணே இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 இற்கு தகவல் வழங்கப்பட்டமையை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளதுடன் படுகொலையுடன் தொடர்புடைய குறித்த பெண்ணின் கணவரை கைதுசெய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஒன்றரைக் கோடி பெறுமதியான கஜமுத்துகளுடன் மூவர் கைது!
வவுனியாவில் ஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்கள் நான்கை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் மூவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு விரைந்தபோது வவுனியாவிலுள்ள பிரபல உணவகம் ஒன்றுக்கு முன்பாக வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களிடமிருந்து 4 கஜமுத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவற்றின் பெறுமதி ஒன்றரைக் கோடி ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டோர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் மூவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.