Parenting – tamilnaadi.com

பெற்ற தாயாரை 41 ஆண்டுகள் தேடிய மகன்… இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி: லண்டனில் சம்பவம்
பிரித்தானியர் ஒருவர் தனது பெற்ற தாயாரை 41 ஆண்டுகள் தேடிய நிலையில், இறுதியில் அவரது உயிரற்ற உடலை லண்டன் இல்லத்தில் கண்டெடுத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஸ்டீவன் ஸ்மித் என்பவர் கடந்த 2021ல் தான் தனது பெற்ற தாயாரை லண்டனில் அவரது இல்லத்தில் கண்டுபிடித்துள்ளார். தாயாரை சடலமாக கண்டுபிடித்த நிலையில், தமது உண்மையான தந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

1980ல் தாம் பிறக்கும் போது தமது தந்தை சிறையில் இருந்ததாக மட்டும் தாம் தெரிந்து கொண்டதாக கூறும் ஸ்டீவன் ஸ்மித், தாம் யார் என்றும் எங்கே பிறந்தேன் என்பதும் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டதாகவும், ஆனால் தற்போது தாம் தேடிய விடை கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு வேல்ஸில் பிறந்த ஸ்டீவன் ஸ்மித் பின்னர் தாயாருடன் லண்டனில் குடிபெயர்ந்துள்ளார். ஆனால் மிக விரைவிலேயே சிறார்கள் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதனையடுத்து பிள்ளைகள் இல்லாத ஒரு இளம் தம்பதிக்கு அவர் தத்துக்கொடுக்கப்பட்டார்.

5 வயதாக இருக்கும் போது தத்தெடுத்த தந்தையும் விட்டுப்பிரிய, தத்தெடுத்த தாயார் இன்னொரு திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த தம்பதிக்கு பிள்ளைகள் சிலர் பிறக்க, தாங்கள் அனைவரும் எசெக்ஸ் பகுதியில் குடியேறியதாக ஸ்டீவன் ஸ்மித் நினைவுகூர்ந்துள்ளார்.

எசெக்ஸ் பகுதியில் திருமணம் செய்து கொண்ட ஸ்டீவன் ஸ்மித் 4 பிள்ளைகளுக்கு தந்தையானார். ஆனால் தமது உண்மையான பெற்றோர் யார் என்பதை தெரிந்துகொள்ள மிகுந்த ஆவலாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2020ல் டிஎன்ஏ சோதனை முன்னெடுத்ததன் மூலமாக தனது சகோதரர் ஒருவரை கண்டுபிடித்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து சகோதரி ஒருவரையும் சந்திக்க, அவருக்கு தெரிந்த தகவலின் அடிப்படையில் 2021ல் தமது உண்மையான தாயாரை கண்டுபிடித்ததாக ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

அப்போது கோவிட் கட்டுப்பாடுகள் அமுலில் இருந்த வேளை. ஒருவழியாக அவரது குடியிருப்பு முகவரியைத் தேடி கண்டுபிடித்து, வீட்டுக்கு சென்றபோது, குளியலறையில் அவர் சடலமாக கிடந்ததை ஸ்டீவன் ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.

தாம் அவருக்கு மூத்த மகன் என்பதையும் தமக்கு மூன்று சகோதரிகளும் நான்கு சகோதரர்களும் இருப்பதை பின்னர் தெரிந்து கொண்டதாகவும் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

சிலர் வேல்ஸில் குடியிருப்பதாகவும், சிலர் அமெரிக்காவிலும் சிலர் கென்ட் பகுதியில் குடியிருப்பதாகவும் தெரிந்து கொண்டதை ஸ்டீவன் குறிப்பிட்டுள்ளார்.

பசியால் துடிக்கும் பிள்ளைகளுக்கு மயக்க மருந்தளிக்கும் தாய்மார்கள்: ஆசிய நாடொன்றின் அவல நிலை
பசியால் துடிக்கும் பிள்ளைகளுக்கு மயக்க மருந்தளிக்கும் தாய்மார்கள்: ஆசிய நாடொன்றின் அவல நிலை

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உலக உணவு திட்டமூடாக அவசர உணவு உதவிகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானின் 10 மில்லியன் மக்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த மக்கள் கடும் பட்டினிக்கு தள்ளப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஓராண்டாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அவசர உணவு உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது. இதனால், பெண்கள் மட்டுமே கொண்ட 2 மில்லியன் குடும்பங்கள் கடும் நெருக்கடியை எதிகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

மட்டுமின்றி, தலிபான் ஆட்சியின் கீழ் பெண்கள் வேலைக்கு செல்லும் நிலையும் இல்லை என்பதால், குடும்பம் முழு பட்டினிக்கு தள்ளப்பட்டுள்ளதாக 6 பிள்ளைகளின் தாயாரும் விதவையுமான சொஹைலா தெரிவித்துள்ளார்.

பல நாட்கள் இரவு நேரம் சாப்பிட ஏதுமின்றி, தூக்கத்திற்கு செல்வதாகவும், அந்த இரவு நேரம் எங்கே பிச்சை எடுப்பது என்றும் அவர் பிள்ளைகளுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.

பட்டினியால் துடிக்கும் பிஞ்சு பிள்ளைகளுக்கு மயக்க மருந்தளித்து தூங்க வைக்கும் அவல நிலையில் இருப்பதாகவும் சொஹைலா குறிப்பிட்டுள்ளார். மயக்க மருந்தால் ஒரு முழு நாள் தூங்கும் பிள்ளையை பயத்துடன் உயிருடன் இருக்கிறதா என்றும் சில வேளைகளில் பரிசோதிக்க நேர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் தாய்மார்கள், பட்டினியால் அழும் பிள்ளைகளுக்கு அளிக்கும் மயக்க மருந்தானது அளவுக்கு அதிகமானால் சுவாசக் கோளாறு ஏற்படலாம் என்றே மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானில் தற்போது செஞ்சிலுவை சங்கமே சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் அளிப்பதுடன் 30க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் உணவுக்கு நிதியுதவி அளித்து வருகிறது.

ஆனால் தற்போது அந்த அமைப்பும் நிதி நெருக்கடியால், மிக விரைவிலேயே தங்கள் சேவையை கைவிட இருப்பதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு முன்னர், முக்கால்வாசி பொதுச் செலவுகளும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து முந்தைய ஆட்சிக்கு நேரடியாக வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் இந்த நிதியுதவியானது 2021 ஆகஸ்டு முதல் கைவிடப்பட்டது. இதனால், ஆப்கானிஸ்தான் பொருளாதாரம் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

மேலும், உலர்ந்த ரொட்டி மற்றும் குடிநீரால் மட்டும் மில்லியன் கணக்கான மக்கள் உயிர்வாழ்கின்றனர். சிலர் இந்த குளிர்காலத்தை கடக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.