newsupdate – tamilnaadi.com

பிரித்தானிய உள்துறைச் செயலருக்கு பொலிசார் எச்சரிக்கை
பிரித்தானிய உள்துறைச் செயலருக்கு பொலிசார் எச்சரிக்கை

குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் நடைபெறும் ஒவ்வொரு திருட்டையும் பொலிசார் விசாரணை செய்தாகவேண்டும் என பிரித்தானிய உள்துறைச் செயலர் அறிவித்திருந்தார்.

பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன், கடைகளில் திருடுவது, சேதப்படுத்துவது, மொபைல் திருட்டு அல்லது கார் திருட்டு ஆகிய குற்றச்செயல்களை பொலிசார் முக்கியத்துவம் குறைந்தவையாக கருதுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று கூறியிருந்தார்.

ஆகவே, குற்றச்செயல் எத்தகையதாயினும் அது குறித்து பொலிசார் விசாரணை செய்தாகவேண்டும் என சுவெல்லா அறிவித்திருந்தார்.

சுவெல்லாவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது. தேசிய பொலிஸ் துறைத் தலைவர்கள் கவுன்சிலின் (The National Police Chiefs’ Council, NPCC) தலைவரான Gavin Stephens, அந்த அறிவிப்பு தொடர்பில் சுவெல்லாவுக்கும், பொலிஸ் துறை அமைச்சரான Chris Philpக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள அந்த கடிதத்தில், பொலிஸ் துறைக்கு அழுத்தம் கொடுப்பது, மொத்தத்தில் குற்றவியல் நீதி அமைப்பின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இணைந்து செயல்படவேண்டிய வியங்கள் பல உள்ளன என்றும் எச்சரித்துள்ளார் அவர்.

இன்னும் பொலிஸ் துறையில் பெருமளவில் பொலிசார் பற்றாக்குறை உள்ளதாக தெரிவித்துள்ள Gavin, ஆகவே, சுதந்திரமாக செயல்பட பொலிஸ் துறைத் தலைவர்களை அனுமதிப்பதும் எந்த குற்றச்செயல்களுக்கு முன்னுரிமை கொடுப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை அவர்களிடமே விடுவதும் சரியே என்று கூறியுள்ளார்.

கல்லைக் கட்டி ஆற்றில் வீசப்பட்ட சிறுவன்: உதவியை நாடும் சர்வதேச பொலிசார்
கல்லைக் கட்டி ஆற்றில் வீசப்பட்ட சிறுவன்: உதவியை நாடும் சர்வதேச பொலிசார்

ஜேர்மனியில் டானூப் நதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் தொடர்பில் சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போல் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் விவகாரம் ஜேர்மன் பொலிசாரை திணறடிக்க வைத்துள்ளது. 5 அல்லது 6 வயது மதிக்கத்தக்க அந்த சிறுவனின் சடலமானது பவேரியாவில் கடந்த ஆண்டு மே மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுவனை கல் ஒன்றால் கட்டி டானூப் நதியில் வீசியுள்ளனர். ஜேர்மன் பொலிசாரால் சிறுவனை அடையாளம் காண முடியவில்லை என்பதுடன் மரண காரணத்தையும் உறுதி செய்ய முடியாமல் போயுள்ளது.

இந்த நிலையிலேயே சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போல் உதவியை நாடியதுடன், Black Notice எனப்படும் அடையாளம் தெரியாத உடல்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க சர்வதேச எச்சரிக்கை விடுக்கவும் வலியுறுத்தியது.

கடந்த மே 19 அன்று சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டபோது, எத்தனை நாட்கள் தண்ணீரில் இருந்தது என்பது தெரியவில்லை என்று இன்டர்போல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 15 கிலோ உடல் எடையுடன் 3 அடி 7 அங்குலம் உயரத்துடன் காணப்பட்டான் என பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், சிறுவன் ஜேர்மனிக்கு வெளியே சில காலம் தங்கியிருந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ள பொலிசார், 195 உறுப்பு நாடுகளைக் கொண்ட இன்டர்போல் இந்த விவகாரத்தில் உதவ முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், சிறுவன் தொடர்பில் எங்கேயோ ஒருவருக்கு உண்மை தெரியும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், உதவ முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மொத்தம் 1,200 விஷப் பொதிகள்… 40 நாடுகள்: கனேடியர் மீது நெருக்கடி
மொத்தம் 1,200 விஷப் பொதிகள்… 40 நாடுகள்: கனேடியர் மீது நெருக்கடி

தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு சோடியம் நைட்ரைட் ரசாயனத்தை விற்பனை செய்த கனேடியர் தொடர்பில் மேலும் பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த நபர் 40 நாடுகளில் மொத்தம் 1,200 விஷப் பொதிகளை அனுப்பியுள்ளதாக நம்பப்படுகிறது. இந்த நிலையில் விரிவான விசாரணைக்கு பின்னர் ஒரு டசின் புதிய குற்றச்சாட்டுகளை அந்த நபர் மீது சுமத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முன்பு ஒன்ராறியோ மாகாணத்தில் 57 வயதான கென்னத் லா என்பவர் மீது ஆலோசனை வழங்குதல் அல்லது தற்கொலைக்கு உதவியதாக இரண்டு குற்றச்சாட்டுகள் பதியப்பட்டது.

ஆனால் தற்போது மாகாணம் முழுக்க பல எண்ணிக்கையிலான தற்கொலை சம்பவங்கள் தொடர்பில் கென்னத் லா மீது 12 புதிய குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளது. மரணமடைந்தவர்கள் 16 முதல் 36 வயதுடையவர்கள் என யோர்க் பிராந்திய காவல்துறை இன்ஸ்பெக்டர் சைமன் ஜேம்ஸ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மேலும், பிரித்தானியாவில் மட்டும் 88 தற்கொலை சம்பவங்களில் கென்னத் லாவுக்கும் தொடர்பிருக்கலாம் என அதிகாரிகள் தரப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது. மட்டுமின்றி கென்னத் லாவின் வாடிக்கையாளர்கள் பட்டியலை ஆய்வு செய்த போது அதில் 200 பேர் பிரித்தானியர்கள் என தெரியவந்துள்ளது.

கென்னத் லா நிர்வகித்துவந்த இணைய பக்கம் ஊடாக 272 பேர் விஷப் பொதி வாங்கியுள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தற்போது பதியப்பட்டுள்ள வழக்குகளில் ரொறன்ரோவில் நால்வர் யோர்க் பிராந்தியத்தில் மூவர், டர்ஹாம் பிராந்தியத்தில் ஒருவர்,

லண்டன், ஒன்ராறியோவில் ஒருவர், தண்டர் பே, வாட்டர்லூ பகுதி மற்றும் பீல் பகுதியில் தலா ஒருவர் என உறுதி செய்யபப்ட்டுள்ளது. கனடாவில் மட்டும் 14 தற்கொலை சம்பவங்களில் கென்னத் லா தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கென்னத் லா அனுப்பியுள்ள 1,200 விஷப் பொதிகளில் 160 எண்ணிக்கை கனடா முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மட்டுமின்றி இத்தாலி, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் கென்னத் லா அனுப்பிய விஷப் பொதி குறித்து அதிகாரிகள் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு உதவுவதற்காக அவர் விருப்பத்துடன் ரசாயனத்தை விற்பனை செய்வதாக வெளியான செய்திகளை கென்னத் லா மறுத்துள்ளார்.

பல நூறு கோடிகள் மதிப்பிலான தங்கத்தை புதைத்து வைத்திருக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்
பல நூறு கோடிகள் மதிப்பிலான தங்கத்தை புதைத்து வைத்திருக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்

சுமார் 200 கோடிக்கும் அதிக மதிப்பிலான தங்கத்தை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பாலைவனத்தில் புதைத்து வைத்துள்ளதாக சிரியா முகாமில் சிக்கியுள்ள பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒரு குழந்தைக்கு தாயாரான இவர் ஐ.எஸ் தீவிரவாதிகளில் உயர் பொறுப்பில் இருந்த இருவரை திருமணம் செய்து கொண்டவர் எனவும் கூறப்படுகிறது.

தற்போது சிரியா முகாம் ஒன்றில் சிறை வைக்கப்பட்டுள்ள குறித்த பெண், 2019ல் கொல்லப்பட்ட ஐ.எஸ் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியின் உறவினர் ஒருவர் வெளியிட்ட தகவலுக்கு ஒத்திருப்பதாக கூறுகின்றனர்.

அல் பாக்தாதி கொல்லப்பட்ட பின்னர் உறவினரான முகமது அலி சஜேத் தெரிவிக்கையில், அவரும் மற்ற தலைவர்களும் கொள்ளையடிக்கப்பட்ட பல நூறு கோடிகள் மதிப்புள்ள அமெரிக்க பணத் தாள்கள், தங்கம் மற்றும் வெள்ளியை பாலைவனத்தில் புதைத்ததாக கூறியிருந்தார்.

அவ்வாறு பதுக்கப்பட்ட தொகையில் புதிய அட்டூழியங்களுக்கு நிதி உதவி செய்யப் பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது. தற்போது சிரியா முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ள குறித்த பெண்மணியும், தங்கம் புதைக்கப்பட்டுள்ள இடம் தமக்கு தெரியும் எனவும், ஆனால் எவரும் தமது பேச்சை நம்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு சென்ற இடமெல்லாம் கொள்ளையிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதை அடுத்து, தங்களிடம் இருந்த தங்கம் மற்றும் பணத்தை பாலைவனத்தில் புதைத்திருக்க வாய்ப்பிருப்பதாகவே பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆண்ட்ரூ ட்ரூரி நம்புகிறார்.

மேலும், குறித்த பெண் தெரிவிக்கையில், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் கீழ் என்ன நடந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தியதாலையே தாம் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும், தம்முடன் இருந்த பெண்கள் பொய்யை கூறி விடுதலையானதாகவும் தெரிவித்துள்ளார்.

மிக ஆபத்தான, கொடூர செயல்களை முன்னெடுத்த பல பெண்களும், தங்கள் உண்மை முகத்தை மறைத்து, அந்தந்த நாடுகளின் அரசாங்கத்தை ஏமாற்றி, சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து, ஐந்து வயது யாசிதி அடிமைப் பெண்ணை சங்கிலியால் கட்டி, சுடும் வெயிலில் தாகத்தால் இறக்கச் செய்த ஜேர்மன் பெண்ணுக்கு, முனிச் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுவர் மீது மோதி நொறுங்கிய கார்: சிறுவன் உள்பட 3 பேருக்கு நேர்ந்த சோகம்
சுவர் மீது மோதி நொறுங்கிய கார்: சிறுவன் உள்பட 3 பேருக்கு நேர்ந்த சோகம்

அயர்லாந்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்து கோ டிப்பரரியில் உள்ள கேஷலில் கார் ஒன்று சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் காரின் முன் இருக்கையில் இருந்த ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் பின் இருக்கையில் இருந்த சிறுவன் உள்பட 3 பேர் விபத்தில் சிக்கினர்.

அவசர சேவைகள் விபத்து ஏற்பட்ட வின்டுமில் நாக்புல்லோஜ் பகுதி சாலையில் கூடியிருந்ததை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரத்திற்கு அடைத்து வைக்கப்பட்டது.

இந்த விபத்தில் காரின் முன் இருக்கையில் இருந்த ஆண் பெண் என இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டனர்.

மேலும் பின் இருக்கையில் இருந்த சிறுவன் உடல் குளோன்மெலில் உள்ள டிப்பரரி பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

குளோன்மெலில்  4 இளைஞர்கள் சாலை விபத்தில் கொல்லப்பட்ட இரண்டு தினங்களுக்கு பிறகு இந்த சம்பவம் அரங்கேறி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“ஆதித்யா- எல்1” விண்கலம் சூரியனை எந்த வகையில் ஆய்வு செய்யும்?
“ஆதித்யா- எல்1” விண்கலம் சூரியனை எந்த வகையில் ஆய்வு செய்யும்?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திரனை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.

இதற்காக ‘ஆதித்யா- எல்1’ என்ற விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வருகிற 2-ந்தேதி பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டமிட்டு உள்ளது.

இதற்கான இறுதிக்கட்டப்பணியான ‘கவுண்ட்டவுன்’ வருகிற 1-ந்தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ‘ஆதித்யா- எல்1’ விண்கலத்தின் செயல்பாடுகள் என்ன?, இது சூரியனை எந்த வகையில் ஆய்வு செய்ய இருக்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

‘ஆதித்யா- எல்1’ விண்கலத்தில் சூரியனின் கொரோனா, ‘குரோமோஸ்பியர், போட்டோஸ்பியர்’ மற்றும் சூரியக் காற்று ஆகியவற்றை ஆய்வு செய்ய 7 கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கருவிகள் ‘கரோனல்’ வெப்பமாக்கல் அவற்றின் செயல்பாடுகள் மற்றும் பண்புகள், விண்வெளி வானிலையின் இயக்கவியல், துகள் மற்றும் புலங்களின் பரவல் போன்றவற்றை புரிந்து கொள்வதற்கான மிக முக்கியமான தகவல்களை வழங்கும்.

4 ‘ரிமோட் சென்சிங்’ கருவிகள் சூரியனின் வளிமண்டலத்தை ஒளியின் வெவ்வேறு அலை நீளங்களில் படம் பிடிக்கும். இதில் புலப்படும், புற ஊதா மற்றும் எக்ஸ் கதிர்களும் அடங்கும். சூரிய கொரோனாவை படம் பிடித்து அதன் இயக்கவியலையும் ஆய்வு செய்யும்.

‘சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப்’, ஒளிக்கோளம் மற்றும் ‘குரோமோஸ்பியரை’ குறுகிய மற்றும் அகன்ற அலைவரிசையில் உள்ள புற ஊதா அலை நீளங்களில் படம் பிடிக்கும் தன்மை கொண்டது.

அதேபோல் ‘சோலார் லோ எனர்ஜி எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்’ சூரியனில் இருந்து மென்மையான எக்ஸ்ரே உமிழ்வை ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல், ‘ஹை எனர்ஜி எல்-1 ஆர்பிட்டிங் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்’ கருவி சூரியனில் இருந்து கடின எக்ஸ்ரே உமிழ்வை ஆய்வு செய்யும்.

அதில் உள்ள 3 இன்-சிட்டு கருவிகள் சூரியக் காற்றின் கலவை, இயக்கவியல் மற்றும் காந்தப்புலத்தை அளவிடும். சூரியக் காற்றின் துகள் பரிசோதனை, சூரியக் காற்றின் கலவை மற்றும் இயக்கவியலை ஆய்வு செய்யும். விண்கலத்தில் உள்ள பிளாஸ்மா அனலைசர் தொகுப்பு கருவி சூரியக்காற்றின் பிளாஸ்மா பண்புகளை அளவிட இருக்கிறது.

மேம்பட்ட ‘டிரை- ஆக்சியல் ஹை-ரெசல்யூஷன் டிஜிட்டல்’ காந்தமானிகள் சூரிய காற்றில் உள்ள காந்தப்புலத்தை அளவிட்டு தகவல்களை அளிக்க இருக்கிறது.

இவ்வாறு இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

ரஷியா மண்ணில் 18 மாதங்களில் மிகப்பெரிய தாக்குதல்: 6
ரஷியா மண்ணில் 18 மாதங்களில் மிகப்பெரிய தாக்குதல்: 6

உக்ரைன் மீது ரஷியா கடந்த 18 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் அடி வாங்கிக் கொண்டிருந்த உக்ரைன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவால் தற்போது பதிலடி கொடுத்து வருகிறது.

குறிப்பாக டிரோன் மூலம் முக்கியமான இடத்தை டார்கெட் செய்து வருகிறது.

இதனால் ரஷியாவில் உயிர்ச்சேதம் இல்லை என்றாலும், கட்டிடங்கள் போன்றவை கட்டமைப்புகள் சேதம் அடைந்து வருகின்றன.

இன்று அதிகாலை ஆறு பிராந்தியங்களை இலக்காக வைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 18 மாதங்களில் ரஷியா மீதான மிகப்பெரிய தாக்குதல் இது எனக் கூறப்படுகிறது.

ரஷியாவின் மேற்கு பிராந்தியமான பிஸ்கோவில் உள்ள விமான நிலையம் டிரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் அப்பகுதி தீப்பிடித்து எரிந்ததாக உள்ளூர் கவர்னர் மற்றும் மீடியாக்கள் தெரிவித்தன.

இதற்கிடையே ஓர்யோல், பிரயான்ஸ்க், ரியாஜான், கலுகா மற்றும் மாஸ்கோ பிராந்தியத்தில் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிஸ்கோ பிராந்தியம் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில், நான்கு Il-78 போக்குவரத்து விமானங்கள் சேதமடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து பிஸ்கோவ் கவர்னர் மிஹைல் விடேர்னிகோவ், இந்த விமான நிலையத்தில் வரும், செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.

நடக்கவே தடுமாறும் முதியவர் செய்த செயல்
நடக்கவே தடுமாறும் முதியவர் செய்த செயல்

இரண்டு முழங்கால்களிலும் அறுவை சிகிச்சை, இரண்டு முறை இடுப்பெலும்பு அறுவை சிகிச்சை, புற்றுநோய், மாரடைப்பு என அவருக்கு உள்ள பிரச்சினைகளைப் பார்த்தால், அவர் 24 மணி நேரமும் படுக்கையில் படுத்துக்கொண்டுதான் இருக்கவேண்டும்.

ஆனால், அந்த 86 வயது கனேடியர், நான்கு வயது சிறுமி ஒருத்தியின் உயிரைக் காப்பாற்றியதால், இன்று அவரை மக்கள் ஹீரோ என புகழ்கிறார்கள்.

கனடாவின் எட்மண்டனில் வாழ்ந்துவரும் Fred Wasylyshyn (86), தனது mobility scooter உதவியுடன் தனது நாயை வெளியே அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, சற்று தொலைவிலிருந்த குளம் ஒன்றை நோக்கி சுமார் 4 வயதுள்ள சிறுமி ஒருத்தி நடந்து செல்வதைக் கவனித்துள்ளார் அவர்.

அந்த குளம் அபாயமானது என்பதை நன்கு அறிந்த Fred எவ்வளவோ சத்தமிட்டும், அந்தச் சிறுமி குளத்தை நோக்கி நடந்துகொண்டே இருக்க, கஷ்டப்பட்டு தனது மொபிலிட்டி ஸ்கூட்டரிலிருந்து எழுந்த Fred, குளத்தை நோக்கி தன்னாலியன்ற வேகத்தில் நடந்துள்ளார்.

அந்த இடம் நடக்க வசதியாக இல்லாததால், கீழே விழுந்து எழுந்த Fred, அந்தச் சிறுமியை நெருங்குவதற்குள் அவள் தண்ணீருக்குள் இறங்கிவிட்டிருக்கிறாள்.

ஆனால், அவளுக்கு அந்த தண்ணீர் ஆழமாக இருக்கவே அவள் தத்தளிக்கத் துவங்க, அதற்குள் தண்ணீருக்குள் இறங்கிய Fred குழந்தையைப் பிடித்து இழுத்து அவளை கரைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

அதற்குள், நாய் குரைக்கும் சத்தத்தையும், அங்கு நடந்த களேபரத்தையும் கவனித்த மக்கள் ஏழு எட்டு பேர் அங்கு விரைந்ததுடன், மருத்துவ உதவிக்குழுவினரையும் அழைத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில், வங்கிக்குச் சென்றிருந்த Fredஇன் மனைவி Ruth வீட்டுக்குத் திரும்ப, கணவர் உடல் முழுவதும் சேறாக, நடுங்கியபடி அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டுவிட்டதா என்ற எண்ணம்தான் தனக்கு முதலில் வந்தது என்கிறார் Ruth.

பின்னர், தன் கணவர் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் என்பது தெரிந்ததும், தனக்கு அதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்கிறார் Ruth. காரணம், அவர் மற்றவர்கள் மீது மிகுந்த அக்கறை காட்டுபவர் என்றும், யாருக்கு என்ன உதவி தேவை என்றாலும், உதவுவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்கமாட்டார் என்பது தனக்குத் தெரியும் என்கிறார் Ruth.

Fredஐப் பொருத்தவரை, தான் சரியான நேரத்தில் அந்த குளத்தின் அருகில் இருந்தது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறார் அவர். தான் சில நிமிடங்கள் தாமதமாக வந்திருந்தாலும், குழந்தை தண்ணீரில் மூழ்கியிருக்கக்கூடும் என்கிறார் அவர்.

Fredஆல் காப்பாற்றப்பட்ட அந்தக் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவளை கண்காணித்து வருவதாகவும், அவளது உடல் நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இம்ரான் கான் தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம்!
இம்ரான் கான் தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் 3 ஆண்டு சிறை தண்டனையை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

தோஷகானா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, கடந்த 5ஆம் திகதி மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், இந்த தீர்ப்பு அவசரமாக வழங்கப்பட்டதாகவும், அதில் குறைபாடுகள் இருப்பதாகவும் இம்ரான் கானின் வழக்கறிஞர் வாதிட்டார்.

மேலும், இம்ரான் கானின் தண்டனையை ரத்து செய்யுமாறு அவர் வலியுறுத்தினார். இந்த நிலையில், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இம்ரான் கான் மீதான தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.

நடிகை விஜயலக்ஷ்மியின் குற்றச்சாட்டிற்கு சீமானின் பதில்
நடிகை விஜயலக்ஷ்மியின் குற்றச்சாட்டிற்கு சீமானின் பதில்

நடிகை விஜயலக்ஷ்மியின் புகாருக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.

திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக கடந்த 2011ஆம் ஆண்டு சீமான் மீது நடிகை விஜயலக்ஷ்மி புகாரளித்ததை தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மீண்டும் புகாரளித்துள்ளார்.

அப்போது விஜயலக்ஷ்மி சீமானை நம்பி இந்த இடத்தில் நிற்பதாகவும், அவரை கைது செய்யும்வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் விஜயலக்ஷ்மி புகார் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ”அமைதியாக கடந்து போகவேண்டும் என்று நினைக்கிறேன் என்றும், எனக்கு பல கோடிக்கணக்கான குடும்பங்கள் இருக்கிறது, மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள், மீண்டும் மீண்டும் இதை பற்றி பேசுவது கேவலமாக இருக்கிறது” என சீமான் தெரிவித்தார்.