Nalaka Godahewa – tamilnaadi.com

விடுதலைப் புலிகளின் கொள்கையுடையவர் டெலிகொம் நிறுவனத்தை கைப்பற்றுவார்!
விடுதலைப் புலிகளின் கொள்கையுடையவர் டெலிகொம் நிறுவனத்தை கைப்பற்றுவார்!

இலாபமடையும் டெலிகொம் நிறுவனம், லங்கா வைத்தியசாலை, லிட்ரோ நிறுவனம் ஆகியவற்றை தனியார் மயப்படுத்த அரசாங்கம் துரிதகரமாக செயற்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடகேவா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய அரசாங்கம் செயற்படுகிறது. நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பாதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க அதாவது தனியார் மயப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

நட்டமடையும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணிகள் மந்தகதியில் உள்ளன. ஆனால் இலாபமடையும் டெலிகொம் நிறுவனம், லங்கா வைத்தியசாலை, லிட்ரோ நிறுவனம் ஆகியவற்றை தனியார் மயப்படுத்த அரசாங்கம் துரிதகரமாக செயற்படுகிறது.

டெலிகொம் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகள் அரசாங்கத்திடமும், 49 சதவீத பங்குகள் தனியார் வசமும் காணப்படுகின்றன. அரசாங்கத்திடம் உள்ள 50 சதவீத பங்குகளையும் தனியார் மயப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

டெலிகொம் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கையுடையவர் கைப்பற்றுவார். டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர அறிக்கை சமர்ப்பித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் அறிக்கை பொய் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டு உண்மையை மறைத்து விட்டது. நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களின் செயற்பாடுகளை பலவீனப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது என குறிப்பிட்டார்.

பிரதமர் பதவி விலகாவிட்டால் நாம் விலகுவோம்! – அமைச்சர்கள் போர்க்கொடி
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பதவி விலகாவிட்டால், தாம் பதவி விலகுவோம் என நான்கு அமைச்சர்கள் அதிரடியாக அறிவித்துள்னர்.

நிதி அமைச்சர் அலி சப்ரி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஊடகத்துறை அமைச்சர் நாலக கொடஹேவா மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண ஆகியோரே இவ்வாறு அறிவித்துள்ளனர்.

இன்று மாலை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் மஹிந்த பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், அவர் பதவி விலகக்கூடாது என வலியுறுத்தி அலரிமாளிகை நோக்கி சில அரசியல் பிரமுகர்கள் தற்போது படையெடுத்துவருகின்றனர்.

#SriLankaNews

புதிய அரசியலமைப்பு குறித்து ஆராய அமைச்சரவை உப குழு!
புதிய அரசியலமைப்பு குறித்து ஆராய அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நாலக கொடஹேவா இன்று தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு வரைபை தயாரிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வா தலைமையில் சட்டத்துறை நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு 09.09.2020 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இக்குழுவின் ஆரம்ப அறிக்கை 25.04.2022 அன்று ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்களை ஆராய்ந்து உகந்த பரிந்துரைகளை அமைச்சரவைக்கு முன்வைப்பதற்காக கீழ்க்காணும் அமைச்சர்களுடன் கூடிய உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

1. (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ்

வெளிவிவகார அமைச்சர் – (தலைவர்)

2. தினேஷ் குணவர்த்தன,

அரச பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சி அமைச்சர்

3. டக்ளஸ் தேவானந்தா,

கடற்றொழில் அமைச்சர்

4. (வைத்தியர்) ரமேஷ் பத்திரன அவர்கள்

கல்வி அமைச்சர் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்

5. அலி சப்ரி

நிதி அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர்