medicines – tamilnaadi.com

மருந்து கொள்வனவை துரிதப்படுத்தும் சுகாதார அமைச்சகம்
வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து மருந்துகளை நேரடியாக கொள்முதல் செய்வதற்கு வசதியாக இலங்கையின் சுகாதார அமைச்சகம் ஒரு குழுவை நியமிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மருந்துத் துறையினர் இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

இந்த எதிர்ப்புக்கு மத்தியிலும், குறித்த நடவடிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மருந்து விநியோகச் சங்கிலியில் தற்போதுள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட்டு இடையூறுகள் குறைக்கப்படும் வரை, வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து நேரடி உதவியைப் பெற அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக, சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த வழிமுறையின் கீழ் எதிர்கால நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு செயற்படுத்த, ஒரு குழுவை அமைக்கவும், அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன் பிறகு, தேசிய கொள்முதல் ஆணையகத்தின் ஒப்புதலுடன், அமைச்சகம் தேவையான இறுதி ஒப்புதல்களுக்காக, அமைச்சரவைக்கு ஒரு புதிய திட்டத்தை சமர்ப்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அரசாங்கத்திற்கு – அரசாங்கத்திற்கு அடிப்படையில் மருந்துகளை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகரகங்கள் மூலம் வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், சீனா, இந்தோனேசியா, துருக்கி மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளுக்கு இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அமெரிக்க வரலாற்றில் எதிர்பாராத அளவில் மருந்துகளின் விலைமாற்றத்தை அறிவிக்கவுள்ள ட்ரம்ப்
அமெரிக்காவின், பரிந்துரைக்கப்பட்ட மற்றும் சாதாரண மருந்துகளின் விலைகள் கிட்டத்தட்ட உடனடியாக 30வீதம் முதல் 80வீதம் வரை குறைக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாளை காலை 9:00 மணிக்கு, வெள்ளை மாளிகையில், நமது நாட்டின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிர்வாக உத்தரவுகளில் ஒன்றில் நான் கையெழுத்திடுவேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதற்கமைய, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் மருந்துகளின் விலைகள் கிட்டத்தட்ட உடனடியாக 30வீதம் முதல் 80வீதம் வரை குறைக்கப்படும்.

உலகில் எங்கும் மருந்துகளுக்கு மிகக் குறைந்த விலையை செலுத்தும் நாடுகளை போலவே அமெரிக்காவும் அதே விலையை செலுத்தும் ஒரு மிகவும் விரும்பப்படும் நாடாக மாறும் வகையிலான கொள்கை ஒன்றை நான் நிறுவுவேன்.

மேலும் நமது குடிமக்களின் சுகாதாரச் செலவுகள் இதற்கு முன் நினைத்துப் பார்க்காத எண்ணிக்கையில் குறைக்கப்படும். கூடுதலாக, எல்லாவற்றிற்கும் மேலாக, அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டொலர்களைச் சேமிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அனைத்து நகரங்களிலும் உடனடியாக முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை!
நாட்டின் அனைத்து நகரங்களிலும் உடனடியாக முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை!

அரச மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் அரச மருந்தகங்களை விரைவாக நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கூறுகையில்,”‘உங்கள் நகரத்திற்கான மருந்தகம்” திட்டத்தின் கீழ், இவ்வாறு அரச மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் அரச மருந்தகங்களை விரைவாக நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், “உங்கள் நகரத்தில் ஒரு மருந்தகம்” திட்டம் அவசரத் திட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ், வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் மருந்தகங்கள் இல்லாத மாவட்டங்கள் உட்பட பிற மாகாணங்களில் அரச மருந்தகங்களை நிறுவுவதற்கான அவசரத் திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து தசாப்தங்களாக, நாடு முழுவதும் 64 அரச மருந்தகங்களை நிறுவுவதற்கு அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் இந்த அரச மருந்தகங்கள் அனைத்தும் நாட்டு மக்களுக்கு பயனுள்ள, தரமான மற்றும் தொடர்ச்சியான சேவையை வழங்கும்.” என அமைச்சர் கூறியுள்ளார்.

பங்களாதேஷின் கறுப்புப்பட்டியல் நிறுவனத்துக்கு அரச மருந்துக் கூட்டுத்தாபனம் அனுமதி: சுமத்தப்படும் குற்றச்சாட்டு
அரச மருந்துக் கூட்டுத்தாபனம் தொடர்பில்,மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணி குற்றச்சாட்டை முன்வத்துள்ளது.

நோயாளிகளின் வாய்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் கிருமிநாசினியை வழங்குவதற்காக ஒரு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட பங்களாதேஷ் நிறுவனத்திற்கு கேள்விப்பத்திரத்தை, அந்த கூட்டுத்தாபனம் வழங்கியதாக, தொழிற்சங்க கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.

ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அந்தக் கூட்டணியின் தலைவர், சமல் சஞ்சீவ, நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய நிலையை மீறி இந்த கேள்விப்பத்திர வழங்கல் முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், நோயாளிகளின் வாய்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும், 270,000 கிருமிநாசினி போத்தல்களை வாங்க கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டன.

இதன்படி 2024 டிசம்பர் 12 அன்று ஒரு முடிவு எட்டப்பட்டது, மிகக் குறைந்த ஏலதாரருக்கு இந்த கேள்விப்பத்திரம் வழங்கப்பட்டது.

எனினும், கேள்விப்பத்திரம் வழங்கப்பட்ட இந்த நிறுவனம் முன்னர், இலங்கையில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனம் என்று மருத்துவர் கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இந்த நிறுவனம், இலங்கை அரசாங்கத்திற்கு 127 மில்லியன் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் மருத்துவர் சஞ்சீவ கூறியுள்ளார் .

அடுத்த வருட தொடக்கத்திற்குள் பல மருந்தகங்கள் மூடப்பட வாய்ப்பு
அடுத்த வருட தொடக்கத்திற்குள் பல மருந்தகங்கள் மூடப்பட வாய்ப்பு

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் பல மருந்தகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 5000 மருந்தகங்களின் வருடாந்த அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக்கொள்வதற்காக தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபைக்கு அனுப்பப்பட்ட பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச வைத்தியசாலைகள் மற்றும் தனியார் மருந்தகங்களுக்கு சுமார் பத்தாயிரம் மருந்தாளர்கள் தேவைப்படுகின்ற போதிலும், தற்போது நாடளாவிய ரீதியில் ஆறாயிரம் மருந்தாளுநர்கள் மாத்திரமே உள்ளனர்.

இந்நிலையில், மருந்தக உரிமையாளர்கள் ஒரு மருந்தாளுநரிடம் பதிவுசெய்து, பயிற்சி பெற்ற மருந்தாளுநர்களுடன் சேர்ந்து மருந்தகங்கள் மூலம் தங்கள் சேவைகளை வழங்குகிறார்கள்.

இருப்பினும், தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை அவசர தீர்மானமொன்றை எடுத்து வருடாந்த உரிமம் புதுப்பித்தலின் போது மருந்தாளுநர்கள் இல்லை எனக் கூறி விண்ணப்பங்களை நிராகரிக்க ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு 5ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், மருந்தாளுநர்கள் பற்றாக்குறை இருந்த போதிலும், தேவை பூர்த்தியாகும் வரை உரிமங்களை புதுப்பிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்திருந்தது.

இதற்கிடையில், மருத்துவ அதிகாரிகளால் மருந்தகங்களை ஆய்வு செய்யும் அல்லது உரிமங்களை பரிந்துரைக்கும் திட்டத்தை ஒக்டோபர் 10ஆம் திகதி தொடங்க சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு கடத்த இருந்த மாத்திரைகள் மீட்பு!
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த வலி நிவாரண மாத்திரைகளை தமிழக க்யூ பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு வலி நிவாரண மாத்திரைகள் கடத்தப்படவுள்ளதாக க்யூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து க்யூ பிரிவு பொலிஸார் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் நிறுத்திப்பட்டிருந்த பதிவெண் இல்லாமல் சந்தேகத்திற்கு இடமான முறையில் தரித்து நின்ற நாட்டு படகினை சோதனை செய்தனர்.

அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக சுமார் 443 அட்டைகளில் 4430 வலி நிவாரண மாத்திரைகள் மீட்கப்பட்டன.

க்யூ பிரிவு பொலிஸாரினால் மீட்கப்பட்ட வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் நாட்டுபடகு என்பவற்றை சுங்கத்துறை அதிகாரிகளடம் ஒப்படைத்தனர்.

#SriLankaNews

மருந்து கொள்வனவிற்கு உலக வங்கி நிதியுதவி!!
மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, அரசாங்க வைத்தியசாலைகளில் சில மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாகவும், இப்பிரச்சினையை நிர்வகிப்பதற்கும் தொடர்ந்து மருந்து விநியோகத்தை உறுதி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அந்நிய செலாவணி பற்றாக்குறையால் சில மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இருப்பினும், இந்தியக் கடன் வரியின் கீழ் இந்தியாவில் இருந்து மருந்து மருந்துகள் மற்றும் உபகரணங்களை இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNEws

மருந்துகளுக்கு தட்டுப்பாடு! – ஒத்துக்கொண்டது அரசு
நாட்டில் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்த கூற்றை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சபையில் முற்றாக நிராகரித்தார்.

நாட்டில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவது உண்மை என குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் டொலர் தட்டுப்பாடு காரணமாக, அதற்கான தாமதம் ஏற்படுவதாகவும் அடுத்த வாரத்தில் அந்த மருந்துகள் நாட்டுக்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசானது இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில் தட்டுப்பாடான மருந்துகளை இன்னும் ஒரு வாரத்தில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஏற்றல் செயற்பாடுகள், குறிப்பாக பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் பெரும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்பவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன.

அத்தகைய பிரசாரங்களில் எந்தவித உண்மையும் கிடையாது.

தடுப்பூசியினால் நோய்கள் ஏற்படுவதாக விஞ்ஞான ரீதியாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை நாம் பொறுப்புடன் குறிப்பிடுகிறோம்.

அதேவேளை பாராளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

நாட்டில் என்ரிஜனுக்கான பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார். உண்மையில் என்ரிஜனுக்கான சிறு அளவிலான தட்டுப்பாடு நிலவியது. அது தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் மேலும் 4 இலட்சம் என்ரிஜன்கள் நாட்டுக்கு கிடைக்கவுள்ளன.

தேசிய மருந்துப் பொருட்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் தரவுகள் அழிக்கப்பட்டமை தொடர்பில் பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாராளுமன்றத்திலும் பலர் அது தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தனர். எவ்வாறாயினும் அழிக்கப்பட்ட அனைத்து தரவுகளும் மீளப் பெற்றுக் கொள்ளப் பட்டுள்ளது என்பதை நாம் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மருந்து விலையேற்றம் தொடர்பான தரவுகள் அளிக்கப்பட்டுள்ளதாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை.

அது தொடர்பான விசாரணைகளை தற்போது குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் மேற்கொண்டு வருகிறது. விரைவில் உண்மை நிலை நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

கொரோனா தொற்று – சுவிட்சர்லாந்து அரசு தகவல்
உருமாறிய ஒமைக்ரான் வைரசால் கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வர வாய்ப்பு என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வந்து கொண்டிருக்கிறது. அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்ததால் கொரோனா நோய்தொற்று அதிகரித்தபடியே இருக்கிறது.

தற்போது புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து கொரோனா நோய் தொற்று முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் முழுமையான பலனை அளிக்கவில்லை. இதனால் கொரோனா பெரும் தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி நிலவி வருகிறது. இதற்கிடையே உருமாறிய ஒமைக்ரான் வைரசால் கொரோனா பெருந்தொற்று விரைவில் முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தியால் கொரோனா தொற்று முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று முடிவு காலத்துக்கு வருகிறது என்று சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் அலைன் பெர்செட் கூறியதாவது:-

ஒரு பெருந்தொற்றில் இருந்து அதன் முடிவு கட்டத்துக்கு செல்வதில் நாம் தீர்க்கமானதாக இருக்கக்கூடிய ஒரு திருப்புமுனையில் இருக்கிறோம். மக்களிடம் அதிகளவில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகி இருக்கிறது.

ஒமைக்ரான் வைரஸ் இந்த கொரோனா தொற்று நோயின் முடிவின் தொடக்கமாக இருக்கலாம். ஒமைக்ரான் வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியது. குறைவான ஆபத்துக்கொண்டது.

ஆனால் அந்த வைரஸ் எங்களது தடுப்பை உடைப்ப தற்கு எந்த காரணமும் இல்லை. அது எச்சரிக்கையாக மாறுவதற்கான பகுதியையும் கொண்டிருக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சுவிட்சர்லாந்து அரசு கொரோனா தனிமைப்படுத்தும் காலத்தை 10 நாளில் இருந்து 5 நாட்களாக குறைக்க முடிவு செய்துள்ளது.

#World

நாட்டில் குறிப்பிட்ட இந்த மருந்துகளுக்கும் தட்டுப்பாடாம்!-
இலங்கையில் தற்போது முக்கிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் புற்றுநோய் மற்றும் எச்ஐவி- எயிட்ஸ் நோய்களுக்கான மருந்துகளும் அடங்குகின்றன என சுகாதார அமைச்சின் உள்ளகத் தரப்புக்களைக் குறிப்பிட்டு கொழும்பின் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை 33 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் உாிய நடைமுறைகளை கவனிக்கத் தவறியதால், இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள 33 மருந்துகள் விபரங்கள் இதோ;

Abacavir 60mg with Lamivudine 30mg tablet, Abacavir 300mg tablet, Allopurinol 100mg tablet, Asparaginase Injection 10,000IU vial, Cefuroxime Syrup 125mg in 5ml, 100ml bottle, Cetrimide cream 0.5%, 50g tube, Cholecalciferol 5000 IU tablet, Corticotropin Injection 200 IU in 5ml vial,

Cyclosporine Syrup 100mg in 1ml, 50ml bottle, Cytarabine Injection 100mg in 5ml vial, DicobaltEdetate Injection 300mg in 20ml ampoule,

#SrilankaNews