Massacre – tamilnaadi.com

கைக்கூலியான விக்னேஸ்வரன் நல்லவராகக் காட்டப்பட்டார்- கஜேந்திரன்
இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கி அவர்களை தங்களுடைய கூலிகளாக வைத்துக்கொண்டு தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் என்ற பெயரிலேயே இந்த ஒற்றையாட்சிக்குள் தமிழர்களிடத்தில் இந்த செயல்பாட்டிற்கு துணை போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்தார்.

தமிழராய்ச்சி மாநாட்டிலே படுகொலை செய்யப்பட்ட அவர்களை நினைவு கூறும் நிகழ்வு தமிழாராய்ச்சி மாநாடு நினைவுத் தூபியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் அனுஷ்டிக்கப்பட்டது.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக்காலத்தில் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பொதுமக்களை பொலிசார் தாக்கினர்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்களே தவறு இழைத்தனர். அப்பாவி மக்கள் 11 பேர் படுகொலை செய்வதற்கு காரணமாக அமைந்தனர்.

குறித்த சம்பவம் இடம்பெற்று 47 வருடங்கள் கடந்த நிலையிலும் அது தொடர்பாக குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.

அப்போதிருந்த மாநகர மேஜர் அல்பிரெட் துரையப்பா செய்த அந்த பெரும் துரோகம் ஆட்சிக் காலத்திலேயே தமிழர்கள் மிகப் பெரும் போராட்டத்தில் ஈடுபட கூடிய ஒரு நிலைமை தான் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

தமிழர்களை பொறுத்த வரையிலே தமிழர்கள் மீதான இந்த படுகொலைகளை மட்டுமல்ல.

வடகிழக்கு தமிழர்களுக்கு எதிராக ஆட்சியாளர்கள் ஸ்ரீலங்கா காவல்துறையினர் படையினர் மேற்கொண்ட படுகொலைகள் பாரியளவிலான போராட்டத்தில் ஈடுபட அதற்கான சூழலை உருவாக்கியது.

அந்த ஆயுத போராட்டம் பின்னர் சர்வதேச துணையோடு இருந்தாலும், அது மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்கவில்லை ஒரு துரோகத்தனமான செயல்பாட்டிலேயே தமிழ் கட்சிகள் ஈடுபட்டிருப்பது என்பதுதான் மிகவும் துரதிஷ்டவசமானதாக இருக்கிறது.

இந்த செயல்பாடானது மீண்டும் தமிழர்களை எங்கே கொண்டு செல்லப் போகின்றது என்பது தொடர்பாக ஒரு அச்சம் ஏற்படுகின்றது.

தமிழர்களை நிராகரித்து தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமஸ்டி தீர்வு வேண்டும் என்று வலியுறுத்தி எழுபத்தி நான்கு வருடங்களாக போராடி வந்திருக்கின்றனர்.

இன்று தமிழ் மக்கள் மத்தியில் வாக்கு பெற்ற கட்சிகள் ஒற்றையாட்சியை அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் எமது அரசியல் பயணத்தை ஆரம்பித்திருந்தோம். அன்று எங்களுடைய கருத்தை பொய் என்று சொல்லி சொன்னார்கள் 2015ஆம் ஆண்டில் நாங்கள் சொன்ன கருத்துக்கள் ஓரளவுக்கு உண்மையாக தொடங்கியது.

நீதியரசராக இருந்த கைக்கூலியான விக்னேஸ்வரன் அவர்களை தமிழர்களில் ஒருவராக காட்டி, தமிழ் சிவில் சமூகத்தை சேர்ந்தவர்களும் கூட அவரை ஒரு நல்லவர் வல்லவர் என்று எங்களுடைய மக்களுக்கு காட்டி அவரை தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்க துணை நின்று இருந்தார்கள்.

புலம்பெயர் தேசங்களில் இருந்தும் அவருடைய துரோகத்தனம் தெரிந்து கொண்டும் அவருக்குத் துணைநின்றனர்.

விக்னேஸ்வரன் கூட இந்த 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற இந்த துரோகத்துக்கு துணை போயிருக்கின்றார்.

மக்கள் இதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், சித்தார்த்தன், மாவை சேனாதிராசா விக்னேஸ்வரன் ஆகியவர்கள் கூட்டிணைந்து

அரசியலமைப்பு ஆவணம் ஒன்றைத் தயார் செய்திருக்கிறார்கள்.

இது படிப்படியாக வளர்ச்சி அடைந்து நாடாளுமன்றத்திலும் அந்த அரசியலமைப்பை ஆதரிப்பார்களாக இருந்தால் இந்த தீவில் தமிழர்கள் நிரந்தர அடிமைகளாக்கப்படுவார்கள்.

இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கி அவர்களை தங்களுடைய கூலிகளாக வைத்துக்கொண்டு. தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் என்ற பெயரிலேயே இந்த ஒற்றை ஆட்சிக்குள் தமிழர்களிடத்தில் இந்த செயல்பாட்டிற்கு துணை போய்க் கொண்டிருக்கிறார்கள்.

எங்களுடைய மக்கள் விழிப்படைய வேண்டும் என்று இந்த தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்ட இந்த மக்கள் மீது நாங்கள் ஆணையாக நாங்கள் கேட்கின்றோம் என்றார்.

#SrilankaNews

படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் நடராஜா ரவிராஜின் நினைவேந்தல் நிகழ்வு
சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

சாவகச்சேரியில் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள நினைவு சதுக்கத்தில் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஞா.கிஷோர் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, ரவிராஜ் அவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

#SrilankaNews

படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின், 21ஆவது ஆண்டு நினைவேந்தல்
படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின், 21ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

தனது வீட்டில் ஊடகங்களுக்கு செய்தி எழுதிக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ம.நிமலராஜன், ஆயுததாரிகளால் துப்பாக்கியால் சுட்டும், குண்டு வீசியும் படுகொலை செய்யப்பட்டார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நினைவேந்தல் நிகழ்வில் நிமலராஜனின் உருவப்படத்திற்கு யாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனும் வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோசும் இணைந்து மலர் மாலை அணிவித்தார்.

அதனையடுத்து யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ஜெயசீலன் நினைவுச்சுடரை ஏற்றியதுடன் ஊடகவியலாளர்கள் பலரும் மலரஞ்சலி செலுத்தினர்.

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

2000ஆம் ஆண்டு, ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு 10 மணியளவில் யாழ்ப்பாணம் நகரின் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக அப்போது இருந்த, கச்சேரியடிப் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டார்.

அன்று மாலையில், நாகர்கோவிலில் விமானப்படை உலங்குவானூர்தி விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்ட செய்தியை பிபிசி தமிழோசைக்கு தொலைபேசி மூலம் வழங்கியிருந்தார்.

பின்னர் நாளிதழுக்காக தொலைநகலில் அனுப்புவதற்காக அந்தச் செய்தியை எழுதிக் கொண்டிருந்த போதே, அவரது வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் அவரைச் சுட்டுப்படுகொலை செய்தனர்.

அதையடுத்து, அவரது வீட்டுக்குள் கைக்குண்டை வீசிவிட்டுச் சென்றதில், நிமலராஜனின் தந்தை, தாய், மருமகன் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர்.

#SrilankaNews