Mahindananda Aluthgamage Conviction – tamilnaadi.com

ஊழலுக்கு எதிராகத் தீவிரமடையும் நடவடிக்கைகள்: 2025 இல் 7,500 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்!
நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பில் ஊழலை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பெரும் வேகமெடுத்துள்ளதாக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் கடந்த நவம்பர் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் ஆணைக்குழுவிற்கு மொத்தமாக 7,506 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதில் 4,960 முறைப்பாடுகள் முறைப்பாட்டுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், 439 முறைப்பாடுகள் தொடர்பில் முறையான புலனாய்வு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போதிய ஆதாரங்கள் இல்லாமை அல்லது சட்ட வரம்பிற்குள் வராத காரணத்தினால் 2,145 முறைப்பாடுகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்காக 858 முறைப்பாடுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஊழலுக்கு எதிரான கள நடவடிக்கைகளில், இந்த ஆண்டு 119 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் 61 நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைந்ததுடன், இதன் ஊடாக 76 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, காவல்துறை திணைக்களத்தைச் சேர்ந்த 35 பேர், பாடசாலை அதிபர் ஒருவர், மூன்று கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு பொது சுகாதார பரிசோதகர்கள் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர்.

இது தவிர, விசேட விசாரணைப்பிரிவு, இரகசிய புலனாய்வுப் பிரிவு மற்றும் சொத்து விசாரணைப் பிரிவு மூலம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் முன்னாள் அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல (7 வழக்குகள் தொடர்பில்), எஸ்.எம். சந்திரசேன, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தமட்டில், இக்காலப்பகுதியில் 95 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் கையூட்டல் தொடர்பான 61 வழக்குகளும், ஊழல் தொடர்பான 18 வழக்குகளும், விளக்க முடியாத சொத்துக் குவிப்பு தொடர்பான 13 வழக்குகளும் அடங்கும்.

இந்த வழக்குகளில் 35 காவல்துறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 126 பேர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, 67 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டதில் 41 பேர் குற்றவாளிகளாகக் காணப்பட்டு அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் ஆகியோரும் அடங்குவர்.

தண்டப்பணம் மற்றும் அபராதங்கள் ஊடாக சுமார் 27 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நிதி அரசு வருமானமாகப் பெறப்பட்டுள்ளது. தற்போது 287 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நிலையில், ஊழலுக்கு எதிரான இந்த போராட்டம் நாட்டின் நிர்வாகத் தூய்மையை உறுதிப்படுத்துவதில் முக்கிய மைல்கல்லாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.