lizard – tamilnaadi.com

உங்கள் வீட்டில் நிறைய பல்லி இருக்கா? இதனை விரட்ட இதோ சில எளிய வழிகள்!
பொதுவாக ஒருவரது வீட்டின் சுவற்றில் எப்போதும் பல்லிகள் சுற்றிக் கொண்டிருந்தால், அது வீட்டின் அழகை கெடுப்பதோடு, ஆரோக்கியத்திற்கும் சற்று ஆபத்தானது. இதனை முடிந்தவரை விரட்டுவது சிறந்தது.

அந்தவகையில் வீட்டில் உள்ள பல்லியை விரட்டும் சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவற்றை தெரிந்து கொள்வோம்.

மிளகுத் தூளை நீரில் கலந்து, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, பல்லி சுற்றும் சுவற்றில் தெளித்துவிட்டால் போதும், பல்லி வராது.

காபி பவுடரையும், புகையிலையையும் கொண்டு உருண்டையைத் தயாரிக்க வேண்டும். இந்த உருண்டையை பல்லி அதிகம் வரும் பகுதி அல்லது வீட்டின் மூலைமுடுக்குகளில் வையுங்கள். இதனால் இனிமேல் பல்லி வராது.

உங்கள் வீட்டைச் சுற்றி நாப்தலீன் உருண்டைகளை ஆங்காங்கு வையுங்கள். பல்லிகளுக்கு இந்த உருண்டைகளின் கடுமையான வாசனை பிடிக்காது. எனவே இதை வீட்டு முலைகளில் வைத்தால், அதன் வாசனைக்கு பல்லி வராது.

உங்கள் வீட்டில் பல்லி அதிகம் சுற்றினால், ஃப்ரிட்ஜில் உள்ள ஐஸ் நீரை அப்பகுதிகளில் தெளியுங்கள்.

மயில் இறகை பல்லி வரும் இடத்தில் வையுங்கள். இதனால் பல்லி மயில் இறகைக் கண்டு அஞ்சி, இனிமேல் வராதாம்.

உங்கள் வீட்டில் பல்லிகள் சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டால், ஆங்காங்கு மூலைகளில் முட்டை ஓட்டை வையுங்கள்.

வீட்டில் பல்லிகள் அதிகம் இருந்தால், வெங்காயத் துண்டுகளை வீட்டில் ஆங்காங்கு வெட்டி வையுங்கள் அல்லது வெங்காய சாற்றினை நீரில் கலந்து, அந்நீரை ஸ்ப்ரே செய்யுங்கள்.

பூண்டு பற்களை வீட்டின் மூலைகளில் வையுங்கள் அல்லது பூண்டு சாற்றினை நீரில் கலந்து அந்நீரை பல்லி வரும் இடங்களில் தெளித்துவிடுங்கள்.

#lizard  #home #Lifestyle