latus tower – tamilnaadi.com

அதிர வைக்கும் தாமரைக் கோபுர செலவீனம்!
கொழும்பு, தாமரைக் கோபுரத்திற்காக 16 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பகிர்ந்து கொண்ட தகவலைத் தொடர்ந்து இந்த சர்ச்சைக்குரிய தாமரைக் கோபுரத் திட்டத்தின் செலவு விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமை கோரிக்கையின் அடிப்படையில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா இந்த தகவல்களை பெற்றுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்கள், தாமரை கோபுரத்தின் 2021 டிசம்பர் 31 வரையிலான காலத்துக்குரிய மொத்த செலவை உள்ளடக்கியுள்ளது.

அந்த தகவல்களுக்கமைய, 113,600,000 அமெரிக்க டொலர் கட்டுமான செலவினங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஆலோசனைக் கட்டணமாக 33 கோடியே 74 இலட்சத்து 85 ஆயிரத்து 20 ரூபாவும், கடன் உறுதி மற்றும் நிர்வாகக் கட்டணங்களுக்காக 22 கோடியே 23 இலட்சத்து 69 ஆயிரத்து 357 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.

தண்ணீர் மற்றும் மின்சாரம் வழங்குதல் ஆகிய செலவினங்கள் உள்ளடங்களாக இதர செலவுகளுக்காக மொத்தம் 34 கோடியே 42 இலட்சத்து 15 ஆயிரத்து 750 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நிலத்திற்கான கட்டணமாக 2 பில்லியன் 250 மில்லியன் ரூபாவும் காப்பீட்டுக் கட்டணமாக 8,665,612 அமெரிக்க டொலரும் செலுத்தப்பட்டுள்ளது.

#SriLankaNews

தாமரை கோபுர பார்வையாளர்கள் நேரத்தில் மாற்றம்!
கொழும்பு தாமரை கோபுரத்தை’ பார்வையிட அனுமதிக்கும் நேரம் இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்கூட்டி நீடிக்கப்பட்டுள்ளதாக தாமரை கோபுர தனியார் நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

அதன்படி, நாளை (20) முதல் வார நாட்களில் நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையும், வார இறுதி நாட்களில் காலை 10.00 மணி முதல் இரவு 11.00 மணி வரையும் தாமரை கோபுரம் பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும்.

தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவான மக்கள் வருகை தருவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சமரசிங்க மேலும் தெரிவித்தார்.

பார்வையிட வருபவர்களுக்கான பயணச்சீட்டு விநியோகம் பார்வை நேரம் முடிவடைவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக நிறுத்தப்படும் எனவும் தெரிவித்தார். அதன்படி வார நாட்களில் இரவு 9.00 மணிக்கு முன்னரும் வார இறுதி நாட்களில் இரவு 10.00 மணிக்கு முன்னரும் ரிக்கெட்டுகளை கொள்வனவு செய்ய வேண்டும். .

சிறப்பு பிரிவு ஏற்படுத்த வாய்ப்பில்லாததால், 2,000 ரூபாய் ரிக்கெட் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு, 500 ரூபாய் ரிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்றார்.

10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான நுழைவுச்சீட்டு 200 ரூபா எனவும், வெளிநாட்டவர்களிடம் இருந்து 20 அமெரிக்க டொலர்கள் பயணச்சீட்டுக்காக அறவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

3 நாட்களுக்குள் 7.5 மில்லியன் வருமானம்!
கொழும்பு, தாமரை கோபுரம் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டு 3 நாட்களுக்குள் 7.5 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.

இந்த 3 நாட்களில் தாமரை கோபுரத்தைப் பார்வையிடுவதற்காக 14 ஆயிரம் பேர் வருகை தந்திருந்ததாக தாமரை கோபுர தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கு வழங்கப்படும் கால அளவு நேற்று(17) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நண்பகல் 12 மணி முதல் இரவு 11 மணி வரை தாமரை கோபுரத்தை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அனுமதிச்சீட்டு இரவு 10 மணி வரை மாத்திரமே விநியோகிக்கப்படும் என ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

மக்கள் பாவனைக்கு இன்று முதல் தாமரைக் கோபுரம்!
தெற்காசியாவில் மிக உயரமான (350M) கொழும்பு தாமரைக் கோபுரம் இன்று முதல் உத்தியோகபூர்வமாக பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளூர் மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

உள்ளூர் மக்களுக்கு ரூ.500 மற்றும் ரூ.2,000 ரிக்கெட்டுகளும் வெளிநாட்டவர்களுக்கு 20 அமெரிக்க டொலர்களும் அறவிடப்படுகிறது.

வார நாட்களில் பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையும், வார இறுதி நாட்களில் பிற்பகல் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையும் தாமரைக் கோபுரம் பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.

#SriLankaNews

தாமரைக் கோபுரத்தில் இணைந்தனர் 80% உள்ளூர் முதலீட்டாளர்கள்
கொழும்பு தாமரைக் கோபுரத்தில் 80% உள்ளூர் முதலீட்டாளர்களும், 20% வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இணைந்துள்ளனர்.

15க்கும் மேற்பட்ட நிகழ்வுகளுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. தாமரைக் கோபுரம் சமீபத்திய 5G இணைப்புடன் பொருத்தப்பட்டிருக்கும். தாமரைக் கோபுரத்தை கட்டுவதற்கான மொத்த செலவு 113 மில்லியன் டொலர் 2024 க்குள் மீட்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 ஆம் திகதி முதல் திறக்கப்படும் தாமரை கோபுரத்திற்கு வரும் பொதுமக்களுக்காக தரை தளம்-

ஆறு சொகுசு அறைகள் (6 வது தளம்), ஒரு கண்காணிப்பு தளம் (7 வது தளம்) பிரபலமான உணவகங்கள், பப் (Pub) மற்றும் சுழலும் உணவகம் (5 ஆவது தளம்) , விருந்து மண்டபம் (4 வது தளம்) மேலும் நினைவுப்பரிசு அங்காடிகள் (souvenir shop) என்பவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதோடு, பல முன்னணி வணிக வங்கிக் கிளைகளும் தரை தளத்தில் நிறுவப்படுகிறது.

மூன்றாவது தளத்திலுள்ள மாநாட்டு மண்டபம், ஒரே நேரத்தில் சுமார் 400 பேருக்கான இருக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.அத்துடன், திறந்த தளம் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

மக்கள் பாவனைக்கு தாமரை தடாகம்
இலங்கை மக்களுக்கு புத்தம் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடமான தாமரை கோபுரத்தின் செயல்பாடுகளை செப்டம்பர் 15 முதல் ஆரம்பிக்கத்

திட்டமிடப்பட்டுள்ளது.

சுமார் 113 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரத்தின்

செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், பல புதிய அனுபவங்களை வழங்க கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த தாமரைக் கோபுரத் திட்டத்திற்கு சீன நிறுவனம் 88.65 மில்லியன் அமெரிக்க டொலர்

கடனுதவியை வழங்கியுள்ள நிலையில், மீதித் தொகையை இலங்கை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக சீனாவிடம் பெறப்பட்ட கடன் தவணை 2024 ஆம் ஆண்டிற்குள் செலுத்தி

முடிக்கப்பட உள்ளது. அத்துடன் ஏற்கனவே கடனாகப் பெறப்பட்ட சுமார் 66 மில்லியன் அமெரிக்கடொலர்கள் மீளச் செலுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இவ்வருடம் மார்ச் மாதம் திறைசேரியின்

கீழ் ஸ்தாபிக்கப்பட்டது. மேலும் அதன் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் கணக்காய்வாளர்

நாயகம் திணைக்களத்தினால் கணக்காய்வு செய்யப்படுகிறது.

தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு

பெப்ரவரி 28 ஆம் திகதி சீன நிறுவனம் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்து மீண்டும் இலங்கை

அரசிடம் ஒப்படைத்தது.

உலகிலுள்ள செல்வந்த நாடுகளில் இருப்பதைப் போன்ற பொழுதுபோக்கு மற்றும் புதிய

தொழில்நுட்ப வசதிகளை வழங்க திட்டமிட்டிருப்பதாக கொழும்பு லோட்டஸ் டவர் தனியார்நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு சாகச விளையாட்டுகளான ஸ்கை டைவிங் (Sky diving ) மற்றும் பங்கி ஜம்பிங் (Bungee

jumping) ஆகியவையும் இதில் அடங்கும்.

இதுவரை 80 சதவீதமான உள்நாட்டு முதலீட்டாளர்களும் 20 சதவீதமான வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தாமரை கோபுரத்தில் முதலீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். டயலொக் டெலிகொம் நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் என்பன தலா 200 மில்லியன் ரூபா முதலீடு செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளன.

தாமரைக்கோபுரத்தின் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நுழைவுச் சீட்டைக் கொள்வனவு செய்து, அனைவரும் இதனைப் பார்வையிடவும் புதிய அனுபவங்களை பெறவும் முடியும். நுழைவுச் சீட்டொன்றின் விலை 500 ரூபா என்பதோடு விசேட நுழைவுச் சீட்டின் விலை 2,000 ரூபாவாகும். பார்வையிட வரும் வெளிநாட்டவர் ஒருவருக்கான நுழைவுச் சீட்டு 20 அமெரிக்க டொலர்களாகும்.

அடுத்த சில மாதங்களில் நுழைவுச் சீட்டுக்கு பதிலாக QR தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

10.5 ஏக்கர் நிலப்பரப்பில் தாமரை கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு இதுவரை 58 முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதில் 22 பேர் ஒப்பந்தம் மேற்கொள்ள இணங்கியுள்ளனர். 15 பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்காக எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிவரை முன்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் தாமரைக்கோபுர செயற்பாடுகளை மேலும் வெற்றிகரமாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தாமரை கோபுரத்திற்கு வரும் பொதுமக்களுக்காக தரை தளம், பிரபலமான உணவகங்கள், பப் (Pub)

மற்றும் நினைவுப்பரிசு அங்காடிகள் (souvenir shop) என்பவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதோடு, பல

முன்னணி வணிக வங்கிக் கிளைகளும் தரை தளத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் தளம் , அலுவலக வசதிகளுக்காக பயன்படுத்தப்படுவதுடன் டிஜிட்டல் சினிமா அனுபவத்தைப் பெறவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மூன்றாவது தளத்திலுள்ள மாநாட்டு மண்டபம், ஒரே நேரத்தில் சுமார் 400 பேருக்கான இருக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், திறந்த தளம் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய தொழில்நுட்பத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள இலங்கையில் உள்ள மிகவேகமாக இயங்கக்கூடிய மூன்று மின் தூக்கிகள் தாமரைக் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அனைத்து அனுபவங்களையும் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் பொதுமக்கள் பார்த்தும் அனுபவித்தும்

மகிழ முடியும் என்று கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

#SriLankaNews

செப். 15 இல் திறப்புவிழா காண்கிறது தாமரை கோபுரம்
கொழும்பு தாமரை கோபுரம் அடுத்த மாதம் செப்ரெம்பர்- 15 ஆம் திகதி திறக்கப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் கோபுரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 செப்ரெம்பர் 16ஆம் திகதி வைபவ ரீதியாக திறந்து வைத்தார். எனினும் பின்னர் மக்கள் யாரும் பார்வையிட எந்தவொரு வணிக செயற்பாட்டிற்கோ பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது கொழும்பு தாமரை கோபுரம் தனது அடுத்த கட்ட வணிகத் திட்டத்திற்கான முதலீட்டு வாய்ப்புகளுக்காக திறக்கப்படவுள்ளது. இதற்கான விளம்பரங்களை வெளிப்படுத்தியுள்ளது.

இங்கு சர்வதேச அளவிலான நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

356 மீட்டர் உயரமான இந்த கோபுரம், தெற்காசியாவிலேயே பெரிய கோபுரமாக கருதப்படுவதுடன், உலகிலேயே 19ஆவது உயரமான கோபுரமாகவும் திகழ்கின்றது.

இந்த வாய்ப்புகளில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள வர்த்தகர்கள் கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

#SriLankaNews