Landslide In Sri Lanka – tamilnaadi.com

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு!
இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு!

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

மறுஅறிவித்தல் வரும் வரை இந்த அறிவிப்பு செல்லுபடியாகும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, பதுளை மாவட்டத்தின் பசறை, ஹாலிஎல, கந்தகெட்டிய, ஊவா பரனகம, மீகஹகிவுல, சொரணதொட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேலும், இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது கடந்த (28) பிற்பகல் 12.30 மணி முதல் நேற்று (01) பிற்பகல் 12.30 மணி வரை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த, நிலையிலே மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்து தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை நேற்று (14) மாலை 4.00 மணி முதல் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, காலி மாவட்டம் – யக்கலமுல்ல, நியாகம, இமதுவ, களுத்துறை மாவட்டம் – பேருவளை, கேகாலை மாவட்டம் – கலிகமுவ, குருநாகல் மாவட்டம் – நாரம்மல, பொல்கஹவெல, அலவ்வ, நுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டம் – கஹவத்த, ஓபநாயக்க, பெல்மடுல்ல, நிவித்திகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு 1ஆம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு மாவட்டம் – சீதாவக, பாதுக்கை, களுத்துறை மாவட்டம் – வலல்லாவிட்ட, ஹொரண, இங்கிரிய, மத்துகம, தொடங்கொட, புலத்சிங்கள, பாலிந்தநுவர, அகலவத்த, காலி மாவட்டம் – அல்பிட்டிய, பத்தேகம, நெலுவ, நாகொட, வந்துரம்ப, தவளம், கம்பஹா மாவட்டம் – அத்தனகல்லை, கேகாலை மாவட்டம் – ருவன்வெல்ல, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட, வரகாபொல, புலத்கொஹுபிட்டிய, கேகாலை, மாவனெல்லை, அரநாயக்க, தெரணியகலை, இரத்தினபுரி மாவட்டம் – அஹெலியகொட, கிரியெல்ல, அயகம, எலபாத, கலவான, இரத்தினபுரி, குருவிட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு 2ஆம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு- வெள்ளபெருக்கு குறித்து தொடரும் எச்சரிக்கை!
மண்சரிவு- வெள்ளபெருக்கு குறித்து தொடரும் எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலி, கம்பஹா, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நுவரெலியா மற்றும் குருநாகல் மாவட்டங்களில் முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் களனி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே களனி கங்கைக்கு அண்மித்த தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு குறித்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பயகம, கொலன்னாவ, கொழும்பு, வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அவ்வழியாகச் செல்லும் சாரதிகளை மிகவும் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மக்களே அவதானம்! மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
மக்களே அவதானம்! மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, நேற்று (12) மாலை 4.00 மணி முதல் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதுளை மாவட்டம் – எல்ல, ஹாலிஎல, பசறை, காலி மாவட்டம் – யக்கலமுல்ல, நியாகம, இமதுவ, களுத்துறை மாவட்டம் – பேருவளை, கேகாலை மாவட்டம் – கலிகமுவ, குருநாகல் மாவட்டம் – நாரம்மல, பொல்கஹவெல, அலவ்வ, நுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டம் – கஹவத்தை, ஓபநாயக்க, பெல்மடுல்ல, நிவித்திகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு 1ஆம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மாவட்டம் – சீதாவக, பாதுக்க, களுத்துறை மாவட்டம் – வலல்லாவிட்ட, ஹொரண, இங்கிரிய, மத்துகம, தொடங்கொட, புலத்சிங்கள, பாலிந்தனுவர, அகலவத்தை, காலி மாவட்டம் – எல்பிட்டிய, பத்தேகம, நெலுவ, நாகொட, கம்பஹா மாவட்டம் – அத்தனகல்ல ஆகிய பகுதிகளுக்கு 2ஆம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டம் – ருவன்வெல்ல, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட, வரகாபொல, புலத்கொஹுபிட்டிய, கேகாலை, மாவனெல்ல, அரநாயக்க, இரத்தினபுரி மாவட்டம் – எஹலியகொட, கிரியெல்ல, அயகம, எலபாத்த, கலவான, இரத்தினபுரி, குருவிட்ட உள்ளிட்ட பகுதிகளுக்கும் 2ஆம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் தொடரும் மழை நிலை காரணமாக, சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தின் நாகொட, எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தின் வல்லாவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காலி மாவட்டத்தின் நயாகம, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை நேற்று (07) காலை 9.30 மணி முதல் இன்று இரவு 9.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரித்துள்ளதுடன் மழை நிலைமை தொடரலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு பிரதேசத்தில் 162.5 மி.மீ அளவிற்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஏழு மாவட்டங்களுக்கு நீட்டிக்கபட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை
ஏழு மாவட்டங்களுக்கு நீட்டிக்கபட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்னும் நடைமுறையில் இருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு, காலி, கேகாலை, நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நடைமுறையில் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு சிவப்பு அறிவித்தல் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் புளத்சிங்கள மற்றும் இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் கலவான, அஹெலியகொட மற்றும் அலபாத்த பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, பரகொட மற்றும் புளத்சிங்கள பிரதேசத்தில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வெள்ள அனர்த்த நிவாரண குழுவொன்று களமிறக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

நாட்டில் சீரற்ற காலநிலை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் சீரற்ற காலநிலை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையைச் (srilanka) சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கனமழை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு நேற்று (17) மாலை 4 மணி முதல் இன்று (18) மாலை 4 மணி வரை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் மண்சரிவு ஏற்பட்ட இடங்கள், குறிப்பாக மலைப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்துமாறும் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நள்ளிரவில் நடந்த அனர்த்தம்…! இருவர் உயிரிழப்பு
நள்ளிரவில் நடந்த அனர்த்தம்…! இருவர் உயிரிழப்பு

கம்பஹா (Gampaha) பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (1.6.2024) இரவு பல்லேவெல, தியந்தர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

தெனகம பிரதேசத்தில் வசிக்கும் 20 மற்றும் 27 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் பல்லேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பல்லேவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக 3834 குடும்பங்களை சேர்ந்த 13717 பேர் பாதிக்கப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு உட்பட ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
கொழும்பு உட்பட ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் ஏழு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (27.05.2024) மாலை நான்கு மணி வரையில் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பின்வரும் பகுதிகளுக்கு நிலை 02 எச்சரிக்கை விடுக்கப்பட்டது:

• கொழும்பு – சீதாவக பிரதேச செயலகப் பிரிவு (DSD) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

• களுத்துறை – இங்கிரிய, புலத்சிங்கள மற்றும் மத்துகம மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

• கேகாலை – புலத்கொஹுபிட்டிய, தெரணியகல, ருவன்வெல்ல, கேகாலை, தெஹியோவிட்ட, வரகாபொல, யட்டியந்தோட்டை, மாவனெல்ல மற்றும் கலிகமுவ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

• நுவரெலியா – அம்பகமுவ மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்

• இரத்தினபுரி – இம்புல்பே, பலாங்கொட, எலபாத, கலவான, கிரியெல்ல, எஹலியகொட, அயகம, இரத்தினபுரி மற்றும் குருவிட்ட மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

பின்வரும் பகுதிகளுக்கு நிலை 01 எச்சரிக்கை

• கொழும்பு – பாதுக்க பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

• கம்பஹா – அத்தனகல்ல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

• களுத்துறை – தொடங்கொட, வலல்லாவிட்ட, அகலவத்தை, பாலிந்தநுவர மற்றும் ஹொரண மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

• கண்டி – உடபலத மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் • கேகாலை – அரநாயக்க மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

• நுவரெலியா – கொத்மலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் • இரத்தினபுரி – நிவிதிகல, பெல்மடுல்ல, ஓபநாயக்க மற்றும் கஹவத்த மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இலங்கையின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

இன்று (19.05.2024) அதிகாலை 03 மணி முதல் நாளை (20.05.2024) அதிகாலை 03.00 மணி வரை நடைமுறையாகும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேச செயலகங்களுக்கு 2ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தின் மேலும் 4 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களின் 33 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் கட்டத்தின் இன் கீழ் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.