land rights – tamilnaadi.com

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!
நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (டிசம்பர் 8) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மலையக மக்களுக்குக் காணி உரிமையைப் பெற்றுக்கொடுப்பதன் மூலமே வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் எனக் கோரிக்கை விடுத்தார்.

கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக, நாட்டில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை மாற்றத்தினால் உயிரிழந்த நுவரெலியா மாவட்டச் சொந்தங்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தால், வீட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உரிய வழிமுறை பிறக்கும்.

“மலையகத்தில் பெரும் பிரச்சினை ஒன்று உள்ளது. அதாவது, தோட்டத்தில் வேலை செய்தால் தான் அடையாளம், சலுகைகள் கிடைக்கப் பெறுகின்றன. தோட்டத்தில் வேலை செய்யாத ஏனையோருக்கு எவ்வித அதிகாரமும் கிடைக்கப்பெறவில்லை. இந்த முறைமை மாற வேண்டும்.”

பெருந்தோட்டப் பகுதிகளில் ஒன்றரை லட்சம் வீடுகள் தேவைப்படுகின்றன. பாதீட்டு ஒதுக்கீட்டின் பிரகாரம் வருடமொன்றுக்கு 2 ஆயிரம் வீடுகளை அமைத்தாலும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

மக்களுக்கு வாழ்வதற்குரிய காணி உரிமையை வழங்கினால், வீடில்லாப் பிரச்சினையைத் தீர்க்க வழி பிறக்கும்.

மக்களுக்கு வழங்குவதற்கு உரிய காணி வளம் உள்ளது. மக்கள் தற்போது வாழும் லயன் அறைகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளை வழங்கினாலேயே அவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொள்ள முடியும். 2024 இல் நிறைவேற்றப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை அமல்படுத்தலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜீவன் தொண்டமானின் கோரிக்கைக்குப் பதிலளித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பின்வருமாறு தெரிவித்தார்.

தற்போது பேரிடர் நிலையால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்நோக்கும் நீண்ட காலப் பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசப்படும்.

“ஒருவருக்கு 6 பேர்ச்சஸ் என வைத்தாலும், ஒன்றரை லட்சம் பேருக்கு 9 லட்சம் பேர்ச்சஸ் காணி தேவைப்படும். இதை எவ்வாறு பெற்றுக்கொள்வது, தொழில்நுட்பக் காரணி, பாதுகாப்பான இடம் என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு உங்களை (மலையகப் பிரதிநிதிகளை) சந்தித்துக் கலந்துரையாட உள்ளேன்.”

தேசிய வேலைத்திட்டம் ஒன்றினை அமைத்து இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முயற்சிப்போம்.

மலையக மக்களுக்கு மறுக்கப்படும் காணி உரிமை!!
இன்று ஏனைய இலங்கையருக்கு உள்ள காணி உரிமை, தோட்டங்களில் வாழும் மலைநாட்டு தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

“எமது காணி, எமது உயிராகும்” என்ற தலைப்பில் காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி, மக்கள் காணி ஆணைக்குழு, கொழும்பு குளோபல் விடுதியில் நடத்திய கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்,

சிறிமா சாஸ்திரி உடன்பாட்டில் இலங்கை – இந்திய அரசுகள் மலையக மக்களை அரசியல்ரீதியாக பலவீனப்படுத்தி விட்டன.

ஆனாலும், இலங்கை குடியுரிமை பெற்ற மலையக மக்களுக்கு, ஏனைய இலங்கையருக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் வழங்க இலங்கை அரசு உடன்பட்டது.

ஆனால் மலையக மக்களுக்கு காணி உரிமை மறுக்கப்படுகிறது.

மலையக மக்களுக்கு இரண்டு காரணங்களுக்காக காணி தேவை. ஒன்று, வீடு கட்டி வாழ காணி. அடுத்து, விளைநில வாழ்வாதார காணி.

இந்த உரிமைகள் எமக்கு இன்று மறுக்கபடுகின்றன. அல்லது, பெரும்பான்மை மக்களுக்கு தோட்ட காணிகள் பிரித்து வழங்கப்படுவது போன்று எமது மக்களுக்கு வழங்கப்படாமல் பாராபட்சம் காட்டப்படுகின்றன. இதை நாம் அனுமதிக்க முடியாது.

வடகிழக்கில் 1958 பண்டா-செல்வா, 1965ன் டட்லி-செல்வா உடன்படிக்கைகளில் வழக்கு கிழக்கு மாவட்டங்களில் எப்படி காணி பிரித்து வழங்கப்பட வேண்டுமென விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாவட்டங்களில், அரச குடியேற்ற திட்டங்களில், காணி பிரித்து வழங்கப்படும் போது, அந்த மாவட்டத்தில் நிரந்தரமாக வசிக்கும் மக்களுக்கும், அடுத்து அம்மாவட்டத்தை அடுத்த மாவட்ட நிரந்தர விதிவாளருக்கும், அதையடுத்து நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் தமிழ் பேசுகின்ற மக்களுக்கும், முன்னுரிமைகள் வழங்க வேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமை.

இதை இன்று மீறப்படுகிறது. அதன்மூலம் குடிபரம்பல் மாற்றப்படுகிறது. இதையும், நாம் அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews