kattunayaka international airport – tamilnaadi.com

கட்டுநாயக்க விமான சேவைகள் பாதிப்பு!!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள மோசமான வானிலை காரணமாக பல விமானங்கள் தாமதமாகியுள்ளன.

நேற்று (07) மாலை 6.25 மணியளவில் துபாய்க்கு செல்லவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யூ. எல். 225 என்ற விமானம் சுமார் 15 மணி நேர தாமதத்திற்குப் பிறகு காலை 9.15 மணியளவில் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு சுமார் 7.15 மணியளவில் ஜப்பானின் நரிட்டா நகருக்குச் செல்லவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யு. எல். 454 என்ற விமானம் இன்று அதிகாலை 1.50 மணிக்கு புறப்பட்டதாக தெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நேற்று இரவு 11.40 மணியளவில் இந்தியாவின் மும்பைக்கு செல்லவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் யு.எல். 141 விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், மும்பையிலிருந்து இன்று காலை 05.35க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்த விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து நேற்று இரவு 07.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த சைனா ஈஸ்டன் ஏர்லைன்ஸ் விமானம் MU-231, கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றி பெய்த கடும் மழை காரணமாக மாலைதீவின் மாலே விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

நேற்று மாலை 06.10க்கு குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-230 தாமதமாகி இன்று காலை 07.33க்கு மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக செய்தியாளர் தெரிவித்தார்.

#SriLankaNews

அமெரிக்க பிரஜை கட்டுநாயக்கவில் கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமெரிக்க பிரஜை ஒருவர் 9 மில்லிமீற்றர் ரக 10 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் மெகசின் ஒன்றுடன் நேற்று (28) இரவு விமானப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான அமெரிக்க பிரைஜை, பெண்ணொருவருடன் நேற்றிரவு 8.25 மணிக்கு சென்னை செல்ல விமான நிலையத்திற்கு வருகைத் தந்துள்ளார்.

விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் உள்ள ஸ்கிரீனிங் இயந்திரம் வழியாகச் சென்றபோது, ​​குறித்த நபரிடம் மேற்படி வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, அவர் விமானப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகத்திற்குரிய பயணி மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவருடன் வந்த பெண்ணை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதி வழங்கியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

கட்டுநாயக்க சேவைகள் வழமைக்கு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பு மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அமைப்பு இன்று (09) காலை 9.00 மணியளவில் செயலிழக்கப்பட்டதுடன், திணைக்கள அதிகாரிகளால் பிற்பகல் 1.00 மணியளவில் அதனை மீண்டும் செயற்படுத்த முடிந்தது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை மற்றும் புறப்பாடு முனையங்களில் இயங்கி வந்த இந்த கணனி அமைப்பு நேற்றும் இன்றும் (08) திடீரென செயலிழக்கப்பட்டது.

#SriLankaNews

விமான நிலைய துப்பரவு பணியாளருக்கு சன்மானம் வழங்கிய ஜப்பானியர்
இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட ஜப்பானிய பேராசிரியர் ஒருவரின் பணப்பை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் தரையில் விழுந்ததையடுத்து, அவர் அதனை மறந்து சென்றுள்ளார். இந்நிலையில் விமான நிலைய துப்புரவு பணியாளர் ஒருவரால் அந்த பணப்பை எடுக்கப்பட்டு, உரியவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

60 வயதான ஜப்பானிய பேராசிரியை மத்ருஹுர ஜுன்கோ கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள கையடக்க தொலைபேசி நிறுவனமொன்றின் அலுவலகத்திற்கு சென்று இலங்கையில் பயன்படுத்துவதற்காக கையடக்க தொலைபேசி சிம்மொன்றை பெற்றுக் கொள்வதற்காக சென்ற போது அவரது பணப்பை கீழே விழுந்துள்ளது.

விமான நிலையத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவர், இந்த பணப்பையை எடுத்து உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தார்.

பணப்பையில் 1,19,390 ரூபாய் இருந்தது மற்றும் பேராசிரியர் பணம் பெற்றதற்கான ரசீது இருந்தது. அங்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பேராசிரியையை தொடர்பு கொண்டு, விமான நிலையத்திற்கு வந்து பணப்பையை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தனர்.

பேராசிரியை விமான நிலையத்திற்கு வந்து, பணப்பையை பெற்று, அதை எடுத்த பெண்ணுக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் வெகுமதி அளித்து, பாராட்டி, நன்றி தெரிவித்தார்.

#SriLankaNews

வௌிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முற்பட்ட ஐவர் கைது!
டுபாய்க்கு சுமார் 42 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கடத்த முற்பட்ட கடத்தல்காரர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று (20) கைது செய்துள்ளதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் பிரபல வௌிநாட்டு நாணய கடத்தல்காரர்கள் என தெரியவருகின்றது.

இதில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட ஐந்து பேர் அடங்குவர். சந்தேகநபர்கள் கொழும்பு பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது.

வெளிநாட்டு நாணயங்களில் 22,300 அமெரிக்க டொலர்கள், 63,500 யூரோக்கள், 292,000 சவுதி ரியால்கள், 8,725 பவுண்டுகள் ஸ்டெர்லிங் மற்றும் 75,000 திர்ஹாம்கள் இருந்ததாக சுங்கத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தை தொடர்ந்து அவர்களிடமிருந்த பயணப்பொதிகளை சோதனையிட்ட போதே மிகவும் சூட்சுமான முறையில் மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு நாணயங்களை சுங்க அதிகாரிகள்  கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள் மற்றும்  கடத்தல்காரர்கள் தொடர்பில் சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

#SriLankaNews

‘ஒமிக்ரோன்’ தொற்று! – கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
உலகளாவிய ரீதியில் ‘ஒமிக்ரோன்’ தொற்று பரவி வரும் நிலையில் உலக நாடுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கி வருகின்றன.

இந்த நிலையில், நாட்டுக்குள் தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என பிரதி சுகாதாரப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்

மேலும், உலகின் பல பாகங்களிலும் பரவிவரும் மாறுபாடான கொவிட் தொற்றிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு உரிய சுகாதார ஆலோசனைகள் பின்பற்றப்பட வேண்டும். நாட்டை மூடுவதில் எவ்வித பயனும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

UNEP 4ஆவது அமர்வின் தலைவராக அனில் ஜாசிங்க நியமனம்
ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் அமைச்சர் மற்றும் நிறுவனங்களின் 4 ஆவது அமர்வின் தலைவராக சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்கொரியாவில் இடம்பெற்றுவரும் மாநாட்டில் 47 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், இலங்கை சார்பாக வைத்தியர் அனில் ஜாசிங்க தென்கொரியாவிற்கு சென்று குறித்த மாநாட்டில் பங்கேற்றுள்ள நிலையில், இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை,குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றபோது அனில் ஜாசிங்க விமான நிலையத்தில் தடுப்பூசி அட்டையினை எடுத்துச் செல்லாமை காரணமாக அவர் நேற்று அசௌகரியத்தை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் இருந்து வந்த பயணிக்கு முதல் பிசிஆர் சோதனை!
கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய பிசிஆர் ஆய்வகத்தில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இப்புதிய ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட முதல் இலங்கையர் ஜப்பானிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமானம் ஊடாக வந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் இங்கிலாந்தை சேர்ந்த வெளிநாட்டவர் சோதனைக்குட்படுத்த்தப்பட்டார் . டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானமூடாக இவர் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.

தொடர்ந்தும் கட்டுநாயக்க விமானநிலையத்தின் புதிய பி.சி.ஆர் ஆய்வகத்தில் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வகத்தினூடாக 3 மணிநேரத்தில் பரிசோதனை முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .

வௌிநாடு சென்று நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு இலவச PCR பரிசோதனை!
வேலைக்காக வௌிநாடு சென்று நாடு திரும்புகின்ற இலங்கையர்களுக்கு இலவச PCR பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பணியாளர்களுக்கு மட்டுமே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கட்டணம் அறவிடப்படாது இலவச பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது

PCR பரிசோதனைகளுக்கான  கட்டணங்களை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தொழிலாளர் நலன்புரி நிதியத்தின் ஊடாக ஒதுக்குமாறு துறைசார் அமைச்சு, பணியகத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

நாடு திரும்புகின்ற இலங்கை பணியாளர்களை தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைவாக விரைவாக அவர்களது வீடுகளுக்கு அனுப்பும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.