kabul – tamilnaadi.com

உலகளாவிய முஸ்லீம் பெண்களுக்கு தலிபான்கள் இட்ட கட்டளை!!
உலகளாவிய முஸ்லீம் பெண்களுக்கு தலிபான்கள்புதிய கட்டளை சட்டத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் முதற்கட்டமாக ஆப்கானிஸ்தானின் காபூலைச் சுற்றி பெண்கள் தலையை மறைக்கும் வகையில் புர்கா அணிய வேண்டும் என கட்டளையிடும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது.

தலிபானின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் தீமைகளைத் தடுப்பதற்கான அமைச்சகம் குறித்த சுவரொட்டிகளை காட்சிப்படுத்தியுள்ளதாக தலிபான் ஊடகப்பிரதானி கருத்து வெளியிட்டுள்ளார்.

கபேக்கள் மற்றும் கடைகளில் பெண்கள் முகத்தை மறைக்கும் பர்தாவின் படத்தை சித்தரித்து ஒட்டியுள்ள அந்த போஸ்டரில், “ஷரியத் சட்டத்தின்படி, முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும்” என எழுதப்பட்டிருக்கிறது.

இது ஷரியத் சட்டத்தை பின்பற்ற முஸ்லீம் பெண்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதம் அதிகாரத்திற்குத் திரும்பியதில் இருந்து, தலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுதந்திரங்களை அதிகளவில் குறைத்துள்ளனர் என்று சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதற்கு முன்பாக சாலையில் நீண்ட தூரம் செல்லும் பெண்கள் ஒரு ஆண் உறவினர் துணையுடன் மட்டுமே செல்ல வேண்டும் என்றும், வாகனங்களில் இசையை ஒலிப்பதையும் தடை செய்து தலிபான்கள் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#World

பழிக்குப் பழி தீர்த்தது தலிபான்
ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடாத்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு பழி தீர்க்கும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு மசூதியில் நேற்றுமுன்தினம் மாலை தலிபான் ஊடகப் பேச்சாளரின், தாயாரின் நினைவேந்தல் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது.

தாக்குதலில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிப் பலியாகினார்கள். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

குண்டுத் தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சில வாரங்களாக தலிபான்களை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இந்த தாக்குதலையும் ஐ.எஸ் பயங்கரவாதிகளே நடத்தியிருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

குண்டுத் தாக்குதலிற்கு பதிலடி வழங்கும் நோக்குடன், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக விளங்கும் காபூலின் புறநகர் பகுதிக்குள் தலிபான்கள் அதிராடியாக நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்புக்கும் இடையே கடுமையான தாக்குதல் இடம்பெற்றதாக உள்ளூர்வாசிகள் குறிப்பிடுகின்றனர்.

இத் தாக்குதலில் ஐ.எஸ் துருப்புக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

உயிரிழப்பு மற்றும் சேத விபரங்கள் தொடர்பான முழுமையான அறிக்கை வெளிவரவில்லை.

அதிநவீன ஆயுதங்களுடன் தலிபான்களுக்கு ஆதரவாக ஆப்கானில் பேரணி
தாலிபான்களின் ஆட்சிக்கு  ஆதரவாக ஆப்கனில் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த பேரணியில் 1000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இப் பேரணியில் அதிநவீன ஆயுதங்களுடன் கூடிய அணிவகுப்பும் நடத்தப்பட்டது.

ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய சில வாரங்களிலேயே ஆப்கானை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றினர்.முன்பு நடத்தப்பட்ட ஆட்சியைப் போல் இன்றி  இந்த ஆட்சி அனைவரையும் உள்ளடக்கிய ஒரு ஆட்சியாக இருக்கும் என்றும் பெண்களுக்கு உரிமைகள் அளிக்கப்படும் என்றும் தலிபான்கள் தெரிவித்தனர்.

மேலும், பயங்கரவாதிகளுக்குக் கண்டிப்பாக ஆதரவு அளிக்கப்படமாட்டாது என்றும் தலிபான்கள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தனர். ஆயினும் , இப்போது வரை தலிபான்கள் சொன்னதைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை.

இதனால் சர்வதேச அளவில் பெரும்பாலான நாடுகள் தலிபான்களுடன் இணைந்து பணியாற்றுவதில் தயக்கம் காட்டி வருகின்றன. இந்தச் சூழலில் வடக்கு காபூலில் தலிபான்களின் ஆட்சிக்கான ஆதரவை உணர்த்தும் வகையில் முதல் முறையில் நடைபெற்ற பேரணி இதுவாகும் .

இப் பேரணியில் பங்கேற்ற அனைவரும் ஆண்களும் சிறுவர்களுமே என்பது குறிப்பிடத்தக்கது.பேரணியில் ராணுவ உடையில் துப்பாக்கிகளுடன் வந்த தலிபான் தலைவர்கள் மக்களிடையே பேசினர். தலிபான் மூத்த தலைவர்களும் கலந்துகொண்டனர்.

மேலும், ராக்கெட் லான்சர்கள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களுடன் கூடிய ராணுவ அணிவகுப்பும் இதில் நடைபெற்றது. மேலும், ஆட்டம் பாட்டத்துடனான கொண்டாட்டங்களும்  நடைபெற்றன.

ஆப்கானுக்கு 20 மில்லியன் நிதியுதவி!
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி இடைக்கால அரசு நிறுவியுள்ள நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானுக்கு 20 மில்லியன் நிதியுதவி ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்படவுள்ளது.

போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்படுகின்ற ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதற்கு ஐ.நாவின் மத்திய அவசரகால உதவி நிதியில் குறித்த தொகை வழங்கப்படவுள்ளது என ஐ.நா. தெரிவித்துள்ளது.

ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரஸ் தலைமையில் நடைபெற்ற

உயா்நிலை நன்கொடையாளா்கள் மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையால் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல ஆண்டு காலமாக பஞ்சம் மற்றும் வறுமையை எதிர்கொண்ட ஆப்கான் மக்கள் அண்மைய போர் நடவடிக்கை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு கடும் பஞ்சம் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன,

இந்த நிலையில், ஐ.நா. அகதிகள் முகாமையின் தலைவா் காபூலுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்த ஆண்டில் மட்டும் வீடுகளை இழந்து வெளியேறிய 5 லட்சம் மக்கள் உட்பட 35 லட்சம் மக்களின் நிலைமை மற்றும் அவா்களுக்குத் தேவைப்படும் உதவிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவர் ஆய்வு செய்ய உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

விமானத்தில் ஊஞ்சல் கட்டியாடும் தலிபான்கள்!!
விமானத்தில் ஊஞ்சல் கட்டியாடும் தலிபான்கள்!!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம்  விட்டுச்சென்ற விமானம் ஒன்றை தலிபான்கள் பொம்மை போல் பாவித்து விளையாடும் வீடியோ ஒன்றை சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லிஜியான் ஜாவோ ருவிற்றரில் வெளியிட்டுள்ளார்.

அவர் அந்த ருவிற்றர் பதிவில்,  ”பேரரசர்களின் மயானங்களும் அவர்களின் இராணுவ தளபாடங்களும்…. தலிபான்கள் அமெரிக்க இராணுவ விமானங்களை ஊஞ்சலாக, பொம்மைகளாக மாற்றிவிட்டனர்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்ட நிலையில் அங்கு அமெரிக்க இராணுவம் விட்டுச் சென்ற இராணுவத் தளபாடங்களை தலிபான்கள் சேதப்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை, அமெரிக்காவை சீனா தொடர்ந்து விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The graveyard of EMPIRES and their WAR MACHINES. Talibans have turned their planes into swings and toys….. pic.twitter.com/GMwlZKeJT2

— Lijian Zhao 赵立坚 (@zlj517) September 9, 2021

மறுக்கப்பட்டு வரும் பெண்கள் உரிமைகள்!!
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கையகப்படுத்தியுள்ள நிலையில், தலிபான்களின் ஆட்சியில் பெண்களின் உரிமைகள் முழுவதுமாக மறுக்கப்பட்டு வருவதோடு பெண்களுக்கு பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை

விளையாட்டுகளில் பங்கேற்க பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கல்வி கற்க பல்வேறு கட்டுப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன , பெண்கள் விளையாட்டுக்களில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது .இதன் காரணமாக தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக போராட்ட்ங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .

இந்நிலையில் தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சையது ஷக்ருல்லா ஹஷீமி ., பெண்கள் மந்திரிகளாக முடியாது. பெண்கள் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும். பெண்கள் மந்திரி ஆவது அவர்கள் கழுத்தில் சுமக்க முடியாத ஒன்றை வைப்பது போன்றதாகும் – என்று ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் .

தலிபான்கள் ஆட்சியின் புதிய தலைவர் நியமனம்!
ஆப்கானிஸ்தானின் புதிய இடைக்கால அரசில் அங்கம் வகிப்பவர்களின் விவரத்தை தலிபான்கள் தலைமை தற்போது அறிவித்துள்ளது.

அதன்படி புதிய தலைவராக முல்லா முகமது ஹசன் அகுந்த் என்பவரை தலிபான் தலைமை முன்மொழிந்துள்ளது.

இவர் ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றவராவர். தற்போது தலிபான் அமைப்பின் சக்திவாய்ந்த ரெஹ்பாரி ஷூரா குழுவின் தலைவராக இருக்கிறார். இந்த குழுதான் மிக முக்கியமான விவகாரங்களில் முடிவை எடுக்கும் அதிகாரம் கொண்டதாகக் காணப்படுகிறது.

முல்லா முகமது ஹசன் ஆப்கானிஸ்தானில் 1996 முதல் 2001 வரை நடந்த தலிபான்கள் அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் துணை பிரதமராகவும் இருந்தவர் .

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் தற்போது புதிய அரசை தலிபான்கள் நிறுவியுள்ளனர்.

இந்த நிலையில் தலைநகர் காபூலில் புதிய தற்காலிக அரசில் அங்கம் வகிப்போரின் விவரங்கள் வெளியாகியுள்ளன. முறைப்படி புதிய அரசு அமையும்வரை இவர்கள் அரசில் அங்கம் வகிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இடைக்கால பிரதமராக மெளலவி ஹெபடூலா அகூந்த்ஸாதா, துணைப் பிரதமராக மெளலவி கனீ பரதா், உள்துறை அமைச்சராக சிராஜூதீன் ஹக்கானி, பாதுகாப்பு அமைச்சராக மெளலவி யாகூப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலிபான்களால் கர்ப்பிணி பெண் சுட்டுக்கொலை!
தலிபான்கள் கர்ப்பிணிப் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரை அவரின் குடும்பத்தின்  முன்னிலையில் சுட்டுக்கொன்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் முற்றாக வெளியேறிய நிலையில் மீண்டும் 20 ஆண்டுகளுக்குப் பின் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர்.

இந்த ஆட்சியில் பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும். அவர்கள் வேலைக்கு செல்லவும் கல்வி கற்கவும் அனுமதியளிக்கப்படும் என தலிபான்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில்,

அபிகானில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதனை ஆப்கானை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் தனது ருவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் 2 குழந்தைகளுக்கு தாயான 6 மாத கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டுக்கு இரவுவேளையில் துப்பாக்கிகளுடன் நுழைந்த தலிபான் பயங்கரவாதிகள் அவரது கணவர் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர்.

ஆனால் அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும் தமக்கும் தொடர்பில்லை என தலிபான்கள் அறிவித்துள்ளனர். 1990 ஆம் ஆண்டுகளில் தலிபான்களால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி போலவே தற்போதும் நடைபெறுகிறது என ஆப்கான் பெண்கள் அஞ்சுகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடைக்கலம் தேடும் ஆப்கான் சிறுவர்கள்!
அடைக்கலம் தேடும் ஆப்கான் சிறுவர்கள்!

ஆப்கானிலிருந்து பெற்றோர் இல்லாமல் பல சிறுவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்துள்ளனர் என ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் கரென் அன்ரூஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

ஆப்கானிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் ஹொட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பத்து வயதுக்கும் குறைவான சிறுவர்கள் தனியாக ஆஸ்திரேலியா வந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை படையினரிடம் ஒப்படைப்பதை நாங்கள் பார்த்துள்ளோம், தற்போது ஆஸ்திரேலியாவுக்கு தனியாக வந்த சிறுவர்கள் உள்ளனர். அவர்களை நாங்கள் நன்கு கவனித்துக்கொள்கின்றோம். மேலும் பல சிறுவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வரக்கூடும் என்றார்.

போர் தளபாடங்களை கைவிட்டு வெளியேறின அமெரிக்க படைகள்!!!
போர் தளபாடங்களை கைவிட்டு வெளியேறின அமெரிக்க படைகள்!!!

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியுள்ளன.

ஆப்கானித்தானை தலிபான் படைகள் கடந்த 15 ஆம் திகதியன்று கைப்பற்றியுள்ள நிலையில், அங்கிருந்து அமெரிக்க படைகள் ஓகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் முழுமையாக வெளியேறிவிடும் என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே அமெரிக்க படைகள் தற்போது முழுமையாக வெளியேறியுள்ளன. அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்னர், காபூல் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தமக்குச் சொந்தமான விமானங்கள், ஆயுதம் தாங்கிய வாகனங்கள் மற்றும் ஏவுகணை அழிப்பு அமைப்புகள் உட்பட மொத்தம் 73 வாகனங்களை இனி பயன்படுத்த முடியாதபடி செயலிழக்கச் செய்துள்ளன.

அமெரிக்க மத்திய படைகளின் தலைவர் ஜெனரல் கென்னத் மெக்கன்சி இது தொடர்பில் கூறுகையில்,

“ஹமீது கர்சாய் விமான நிலையத்தில் நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த எமது விமானங்கள், போர் வாகனங்கள் ஆகியவை உட்பட 73 வாகனங்களை செயலிழக்கச் செய்துள்ளோம். அங்குள்ள போர் தளபாடங்களை எவராலும் இனி பயன்படுத்த முடியாது.

அத்துடன், C-RAM system எனப்படும் ராக்கெட்டுகள், பீரங்கிக் குண்டுகளை இடைமறிக்கும் சக்தி கொண்ட வாகனம் ஆகியவற்றையும் அங்கேயே விட்டுவந்துள்ளோம். சிரேம் சிஸ்டம் செயலிழக்கச் செய்யப்பட்டுவிட்டது. நாங்கள் வெளியேறும் கடைசி நிமிடம் வரை C-RAM system இயங்கும் நிலையில் இருந்தது” என தெரிவித்துள்ளார்.