கொடிகாமம் உசன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் 3 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று சிறிய ரக லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில், கிளிநொச்சி அம்பாள் குளத்தைச்...
யாழில் தங்கத்தின் விலையில் இன்றைய தினம் சரிவு ஏற்பட்டுள்ளதாக தங்க இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில் 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 23ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்தது....
யாழ்ப்பாணத்தில் வீதி விதிகளை மீறி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைதாகியவர்களுக்கு நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வீதி விதிகளை மீறி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மூவர் 25,27ஆம் திகதிகளில் இளவாலை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் கைதாகிய...
வடக்கு மாகாணத்தில் 12– 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படும். இதனை வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தின்...
வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உள்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள என்று வடமாகாண ஆளுநர் திருமதி பி எம் எஸ் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் வெளிமாவட்டங்களிலிருந்து பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தனியான...
கம்பஹா – அத்தனகல்ல பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வைத்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக...
யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் 1,500 கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்றையதினம் (29) யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இது கைப்பற்றப்பட்டுள்ளது . இந்த மஞ்சள் இந்தியாவில் இருந்து 2 படகுகளில் 24 மூடைகளாகப்...
நாவற்குழி பகுதியில் வீட்டினுள் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த தந்தை மற்றும் இரு மகன்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது. அத்தோடு வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளது. நேற்று (28) இரவு...
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் க.விமலநாதன் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவரிடத்தில் கொரோனாத் தொற்று அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து அருகில் உள்ள வைத்தியசாலை சென்றுள்ளார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்று...
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது நாக்கினை சத்திர சிகிச்சையின் மூலம் இரண்டாக பிளந்த புகைப்படம் ஒன்றினை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார் . யாழ்ப்பாணத்தில் நகரில் பச்சை குத்தும் கடை நடத்தி வரும்...
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில், மது போதையில் அட்டகாசம் புரிந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில், செபஸ்ரியன் வீதி பகுதியில்...
தியாகதீபம் திலீபனுக்கு யாழ்பாணம் மாநகர சபை அமர்வில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அத்தோடு காவல்துறையினரின் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று (28) யாழ்ப்பாணம் மாநகர சபைபின் மாதாந்த அமர்வு மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி...
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் மது போதையில் அட்டகாசம் புரிந்தவரை பொலிஸார் மேல் வெடி வைத்து கைதுசெய்துள்ளனர். கோண்டாவில் செபஸ்ரியன் வீதி பகுதியிலுள்ள வீடொன்றில் இளைஞனொருவன் மதுபோதையில் வந்து வீட்டிலுள்ளோர் மீது தாக்குதல் நடத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார்....
வாளுடன் டிக்டொக் காணொலி செய்து வெளியிட்ட இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 19 வயதேயான சங்கானையைச் சேர்ந்த இளைஞன் சுன்னாகம் பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து...
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் 24 ஆயிரம் மீற்றர் கணம் கொள்ளளவு கொண்ட சுத்தமான குடிதண்ணீர் வழங்கும் இரண்டு முக்கிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இத் திட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஒக்ரோபர் 6ஆம் யாழ்ப்பாணம்...
யாழ்ப்பாணம் கொழும்புத் துறை இலந்தைக்குளம் வீதியில் ஓய்வுபெற்ற மருத்துவ தம்பதியினரின் வீட்டில் இரவில் திருட்டில் ஈடுபட்ட நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட பொருட்களான ஐபாட் மற்றும் இரண்டு ஐ போன் என்பவை...
யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு குழுவினரின் அட்டகாசத்தில் இரண்டு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுதோடு மேலும் சில வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன . இந்த சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழுவினை சேர்ந்த “வெட்டுகுமார்” என்பவர்...
யாழ்.பல்கலைக்கழகத்தில் தியாகி திலீபன் திருவுருவப் படத்துக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செய்யப்பட்டுள்ளது. 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவொறுப்பில் ஈடுபட்டு தன்னுயிரை தமிழின மக்களுக்காக நீத்த தியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாண...
தொண்டமானாறு கடல் நீரேரியில் நீரிழில் மூழ்கிய நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 60 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவரின் சடலமே இவ்வாறு நீரேரியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை மீன்பிடிக்கச் சென்றவர்கள் அங்கு சடலமொன்று மிதப்பதை...
வடக்கு மாகாணத்தில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். செப்டெம்பர் மாதம் முதல் நேற்று (24) வரையான காலத்தில் வடமாகாணத்தில் 8 ஆயிரத்து 401 பேர் கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இன்றையதினம்...