யாழ். கோட்டைக்கு அண்மையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (2) அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில்...
நாளையதினம் மாதகல் பகுதியில் காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மாதகல் கடற்படையினரின் தேவைக்காகவே குறித்த காணிகள் அளவீடு செய்யப்படவுள்ளன. மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக 3 பரப்பு காணி சுவீகரிக்கப்படவுள்ள நிலையில், இதற்கான அளவீட்டு...
நாட்டில் பரவலாக சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் அண்மைக்காலமாக பதிவாகிவரும் நிலையில். வடக்கிலும் சில வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், யாழ்ப்பாணம் – கந்தரோடை பகுதியில் உள்ள வீடொன்றில் இன்றையதினம் எரிவாயு சிலிண்டர்...
திரிலிங்கபுரம் கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. யாழ்ப்பாணம் – நெடுந்தீவு காவல்துறைப்பிரிவிற்கு உட்பட்ட, 5ஆம் வட்டாரம் திரிலிங்கபுரம் கடற்கரையிலே இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது கடற்றொழிலாளர்களால் இன்று அவதானிக்கப்பட்ட நிலையில்...
அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கான எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசாங்கம் தொடர்பில் சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாக...
* மீண்டும் சீனாவிடம் கையேந்தும் இலங்கை!!! * ஊடகவியலாளர் மீது தாக்குதல்: 03 இராணுவ அதிகாரிகள் கைது * ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம்: முல்லைத்தீவில் கண்டனப் போராட்டம் * மண்ணெண்ணெய்க்குத் தட்டுப்பாடு என்ற தகவல்களில் உண்மையில்லை-...
நாவலரின் 200வது நூற்றாண்டினை முன்னிட்டு அறநெறிப் பாடசாலைகளில் நூலகம் அமைக்கும் திட்டம் யாழில் ஆரம்பமானது. நல்லூர் நாவலர் ஞாபகார்த்த மண்டபத்தில் குறித்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது பிரதமரின் இந்து...
காந்தீயம் அமைப்பின் செயற்பாட்டாளரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அதி சிரேஷ்ட உறுப்பினரும், பொதுச்செயலாளருமான அமரர் சுப்பிரமணியம் சதானந்தம் (தோழர் ஆனந்தி அண்ணர்) அவர்களின் நினைவஞ்சலி நிகழ்வும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் நடைபெற்றது. யாழ் நாச்சிமார்கோவிலடி...
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முள்ளியானில் நேற்றிரவு காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கன மழை காரணமாக வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இந்நிலையில் வெள்ளம் தொடர்பாக உரிய தரப்பினர்களுக்கு அறிவித்திருந்தும்,...
நாட்டில் மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. நபர் ஒருவருக்கு ஐந்து லீற்றர் மண்ணெண்ணை விற்பனை செய்யும் நடைமுறையானது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டதல்ல என இலங்கை...
பனை அபிவிருத்திச் சபையின் தலைமையகம் கொழும்புக்கு மாற்றப்படவுள்ளது என வெளியாகியுள்ள தகவலை அமைச்சரவை இணைப்பேச்சாளரும், துறைசார் அமைச்சருமான ரமேஷ் பத்திரண நிராகரித்துள்ளார். பானை அபிவிருத்தி சபையின் தலைமையகம் தற்போது யாழ்ப்பாணத்தில் இயங்கிவருகின்றது. அதன் தலைவராக பெரும்பான்மை...
தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள் தடைகளைத் தாண்டி நேற்றைய தினம் தமிழர் தாயகத்திலும், தமிழர்கள் வாழும் தேசங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டனர். இராணுவ மற்றும் பொலிஸ் கெடுபிடிகளுக்கு மத்தியில் தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களிலும்,...
யாழ்பாணம் – பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில்...
இன்றைய நாளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு பாரிய தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், தடைகளை உடைத்து பல்வேறு இடங்களிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இதேவேளை முல்லை கடற்கரையில் மாவீரர்களை நினைவுகூர முற்பட்டவேளை...
தமிழ் மக்களால் இன்று மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில். யாழ் – சாட்டி கடற்கரையில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற மக்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் அச்சுறுத்தல்களையும் தாண்டி அங்கு சென்ற...
யாழ். பல்கலைக்கழகத்தில் அச்சுறுத்தல்கள், தடைகளைத் தாண்டி மாவீரர் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக சூழலில் காவல்துறை, இராணுவம் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும், சுரரேற்றி அஞ்சலியை செலுத்தியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
* சவால்களுக்கு மத்தியில் பேரெழுச்சியடையும் ‘மாவீரர் நாள்’ : இலங்கையில் நெருக்கடி * மாவீரர்களின் தியாகங்கள் என்றுமே சுடர்விட்டு ஒளிர்ந்தவாறே இருக்கும்– நாடாளுமன்றில் ஸ்ரீதரன் எம்.பி * முதல் மாவீரர் சங்கர் வீட்டில் சுடரேற்றி அஞ்சலி!...
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் சங்கர் என அழைக்கப்படும் சத்தியநாதன் அவர்களுடைய வல்வெட்டித்துறையிலுள்ள இல்லத்தில் ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் மாவீரர் பண்டிதரின் தாயார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
வீதியில் மாவீரர் நாள் நவம்பர் – 27″ என எழுதப்பட்டுள்ளமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. மாவீரர் வாரம் ஆரம்பமான முதல் நாளிலிருந்து இராணுவத்தினர், பொலிஸார் ரோந்து நடவடிக்கைகள்...
கொரோனாவுக்கான தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் தமது நாட்டு்குள் பிரவேசிக்கலாம் என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சிங்கப்பூரின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இன்று தெரிவித்துள்ளதாவது; எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி முதல்...