Jaffna University Black Flags. – tamilnaadi.com

வடக்கு – கிழக்கில் கரிநாள் போராட்டம்: கிளிநொச்சியில் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு!
இலங்கையின் 78-வது சுதந்திர தினத்தை ‘கரிநாள்’ எனப் பிரகடனப்படுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பாரிய போராட்டங்களும் கறுப்புக்கொடிப் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாகக் கிளிநொச்சியில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாகப் பெரும் பதற்றம் நிலவியது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றிலில் இன்று காலை ஆயிரக்கணக்கானோர் திரண்டு தமது கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். அங்கிருந்து கிளிநொச்சி நகரை நோக்கிப் பேரணியாகச் சென்றவர்கள், அரசாங்கத்தின் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறும் பகுதியை நோக்கி முன்னேற முயன்றனர். இதன்போது காவல்துறையினர் வீதித்தடைகளை ஏற்படுத்தி அவர்களைத் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டு தள்ளுமுள்ளு இடம்பெற்றது.

பல்கலைக்கழக மாணவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து முன்னெடுத்த இந்தப் போராட்டங்களில் பின்வரும் முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன:

தமிழ் மக்களுக்கான நிலையான மற்றும் கௌரவமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும்.

தமிழர் தாயகப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட பௌத்தமயமாக்கல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்குச் சர்வதேச ரீதியான நீதி வழங்கப்பட வேண்டும்.

நீண்டகாலமாகத் தடுப்பிலுள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிளிநொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுக் கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கறுப்புக்கொடிகளை ஏற்றித் தமது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

வடக்கு – கிழக்கில் போராட்டங்கள் தீவிரமடைந்திருந்த நிலையில், கொழும்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் “இலங்கையை கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப்பொருளில் பிரதான சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.