iran – tamilnaadi.com

அமெரிக்காவுடனும் ஈரான் இருக்கிறது – இஸ்மாயில் பகேய்
அமெரிக்கா நடத்திய சமீபத்திய இராணுவத் தாக்குதல்களுக்கு மத்தியிலும், மத்தியஸ்தர்கள் மூலமாக அமெரிக்காவுடனான மறைமுக இராஜதந்திரப் பரிமாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஈரானின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பகேய் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்தியஸ்தர்கள் மூலம் செய்திகள் பரிமாறப்பட்டு வருவதாகவும், கடந்த சில நாட்களில் இராஜதந்திர முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு சில யோசனைகள் பெறப்பட்டுள்ளதாகவும் போர் மற்றும் இராஜதந்திரம் ஆகிய இரண்டையும் ஈரான் தனது தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான கருவிகளாகப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ள அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் முற்றிலும் முறிந்துவிடவில்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜோர்தான் மீது ஏவப்பட்ட ஏவுகணைகள் – மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.
ஜோர்தானில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் போர் வானூர்திகளை இலக்கு வைத்து, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இருப்பினும், ஜோர்தான் நாட்டுக்கு எதிராக ஏவப்பட்ட மூன்று ஈரானிய ஏவுகணைகளைத் தாங்கள் இடைமறித்து அழித்துவிட்டதாக ஜோர்தான் இராணுவம் முன்னதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹோர்முஸ் நீரிணை யாருக்கு மீண்டும் வலுவான தாக்குதல் நடத்திய அமெரிக்கா.
அமெரிக்கா, ஈரான் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்கா ஹோர்முஸ் நீரிணையில் தலையிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் இது ஈரானின் அசைக்க முடியாத சிவப்புக் கோடு (red line) ஆகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு பகுதிகள் வரை தாக்குதல்களை நடத்தியதுடன், இஸ்லாமிய குடியரசான ஈரான் மீதான கடற்படை முற்றுகையை மீற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட கப்பல் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதற்கு பதிலடியாக, இப்பகுதியில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியதுமேலும் தனது தாக்குதல்கள் தீவிரமடையக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

அத்துடன், கடந்த மாதம் ஒப்புக்கொள்ளப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்தம் முறிந்துவிட்ட நிலையில்ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டிற்காக அமெரிக்காவும் ஈரானும் மோதி வருவதால், இப்பகுதி கடந்த சில நாட்களாக இரு தரப்பு தாக்குதல்களையும் சந்தித்து வரும் நிலையில், அமெரிக்க தாக்குதல்களில் 35-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய வன்முறை சுழற்சியில் முதன்முறையாக, ஈரானின் தலைநகரான தெஹ்ரானை சுற்றியுள்ள பகுதிகளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதியன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போரைத் தொடங்கியபோது, ​​தெஹ்ரான் கப்பல் போக்குவரத்திற்கு அந்த நீரிணையை மூடியது.

இந்த நடவடிக்கை கச்சா எண்ணெய் விலையை வெகுவாக உயர்த்தியதுடன், பேச்சுவார்த்தைகளில் ஈரானுக்கு முக்கிய செல்வாக்கையும் அளித்தது. ஈரானிய ராணுவத்தின் ‘கதம் அல்-அன்பியா’ மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் எப்ராஹிம் ஜோல்ஃபகாரி ஒரு எச்சரிக்கையை விடுத்தார்.

ஈரானின் பாலங்கள் மற்றும் மின் நிலையங்களை தாக்கக்கூடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் விடுத்து வரும் எச்சரிக்கைகளை அமெரிக்கா செயல்படுத்தினால், இப்பகுதியில் உள்ள “அனைத்து உள்கட்டமைப்புகள்” மீதும் ஈரான் பரவலான தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.

செங்கடலை மூட ஹவுதிகளுக்கு ஈரான் உத்தரவு.
ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்பு வசதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், செங்கடல் ஊடான எண்ணெய் போக்குவரத்துப் பாதையை மூடுவதற்குத் தயாராக இருக்குமாறு, ஏமனின் ஹவுதி அமைப்பிடம் ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் சாத்தியமான தாக்குதல்களை எதிர்கொள்வது குறித்த இந்தத் திட்டங்கள், ஈரானியத் தலைமைத்துவத்தின் உயர் மட்டங்களில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

குறித்த திட்டம் குறித்த அறிவுறுத்தல்கள் ஏற்கனவே ஈரானின் நட்பு அமைப்பான ஹவுதிப் போராளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், எரிசக்தி விநியோகத்தில் உலகளாவிய ரீதியில் முக்கிய பங்கு வகிக்கும் செங்கடல் பகுதியில் ஏற்படக்கூடிய இத்தகைய நடவடிக்கைகள், உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கருதப்படுகின்றது.

ஹோர்முஸ் நீரிணை யாருக்கு அமெரிக்கா தொடுத்துள்ள இரண்டாம் அலை தாக்குதல்கள்.
ஈரான் மீதான இரண்டாவது அலை தாக்குதல்களைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் தனது அதிகாரப்பூர்வ X சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அதன்படி, “சர்வதேச கடல் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சுதந்திரமாகப் பயணிக்கும் கப்பல்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஈரான் பயன்படுத்தி வரும் இராணுவக் கட்டமைப்புகள் மற்றும் இலக்குகளைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஏழு மணிநேர தாக்குதல் – ஈரானின் ஏழு வீரர்கள் பலி.
ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில் குறைந்த பட்சம் தரைப்படையைச் சேர்ந்த, பணியில் இருக்கும் மற்றும் இராணுவ சேவைக்கு உட்படுத்தப்பட்ட ஏழு ஈரானிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இந்தத் தாக்குதல்களில் மற்ற வீரர்கள் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

குறித்த, ஏழு மணி நேரம் நீடித்த தாக்குதல்களில் பல இராணுவ இலக்குகளை தாக்கியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

உலக அளவில் எரிபொருள் நெருக்கடியினை ஏற்படுத்த முயலும் ஈரான் – அச்சத்தில் உலக நாடுகள்.
ஈரான் ஏற்கனவே ஹோர்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ள நிலையில் , தற்போது தனது அடுத்த ஆபத்தான வியூகத்தையும் அமுல்படுத்தவுள்ளது.

ஏமனில் இருக்கும் தனது ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களைப் பயன்படுத்தி, செங்கடலின் நுழைவாயிலான ‘பாப் எல்-மண்டேப்’ நீரிணையை மூடப்போவதாக ஈரான் மறைமுகமாக எச்சரித்துள்ளது.

வொஷிங்டனுக்கு எதிராக ஒரு புதிய போர்க்களத்தைத் திறப்பதன் மூலம், உலகின் மிக முக்கியமான இரண்டு எரிசக்தி வழித்தடங்களையும் ஒரே நேரத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்க ஈரான் முயல்கிறது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் பின்னணியில், ஹவுதி அமைப்பின் அரசியல் பிரிவு உறுப்பினர் முகமது அல்-ஃபராஹ் விடுத்துள்ள எச்சரிக்கையில், “நிலைமை மேலும் மோசமடைந்தால், பாப் எல்-மண்டேப் நீரிணையும் ஹோர்முஸ் நீரிணையும் கூட்டு கூட்டணியின் மூலம் மூடப்படும்.

இதனால் மசகு எண்ணெய் விலை பெரலுக்கு 200 டொலராக உயர்ந்து உலகப் பொருளாதாரத்திற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்” என எச்சரித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் மசகு எண்ணெய் ஏற்றுமதி தடமாகவும் மற்றும் உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் பெரும்பகுதி இந்த பாப் எல்-மண்டேப் வழியாகவே நடைபெறுகிறது.

குறித்த இந்த ஈரானின் நகர்வானது, போரை இரு நாடுகளுக்கு இடையேயான மோதலாக மட்டும் வைக்காமல் உலகளாவிய பொருளாதார நெருக்கடியாக மாற்றும் ஒரு தந்திரம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்காவின் தாக்குதல்கள் தீவிரப்படுமானால், ஈரான் தனது இறுதி ஆயுதமாக இதனை கைக்கொள்ளலாம் என அஞ்சப்படுகின்றது.

ஈரானுக்கு துணையாக போரில் குதித்தது ரஸ்யா – மத்திய கிழக்கில் அதிகரிக்கிறது பதற்றம்.
மத்திய கிழக்கில் பதற்ற நிலை அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யா தனது மிக பாதுகாப்பான Tu-214PU எனப்படும் “Doomsday” விமானத்தை ஈரானுக்கு வழங்கியுள்ளது.

இந்த விமானம் சாதாரண VIP விமானம் போல் அல்லாமல் ரஷ்யாவின் உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவ தலைவர்களை ஏற்றிச் செல்லும் Rossiya Special Flight Squadron-க்கு சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tu-214PU, கடுமையான அச்சுறுத்தல்களிலும் செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பாதுகாப்பான தொடர்பு மற்றும் Command-Control அமைப்புகளுடன் கூடிய ‘வானில் பறக்கும் கட்டளை மையம்’ என கூறப்படுகின்றது.

அண்மையில் அமெரிக்கா, ஈரானின் ஏவுகணை தளங்கள், ட்ரோன் அமைப்புகள், விமான பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல இராணுவ இலக்குகளை தாக்கியுள்ளது. இதற்கு பதிலடியாக ஈரான், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் மீது தாக்குதல்களினை நடத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில், ரஷ்யாவின் “டூம்ஸ்டே” விமானம் தெஹ்ரானில் தரையிறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான இடையிலான உயர் மட்ட இராணுவ மற்றும் அரசியல் ஒத்துழைப்பை வெளிப்படுத்துகிறது.

1989-இல் முதன்முதலாக பறந்த இந்த விமானம், பல்வேறு சிறப்பு பயன்பாடுகளுக்காக மாற்றப்பட்டுள்ளது. அதில் மிகவும் நவீனமயானதாக இந்த Tu-214PU விமானம் காணப்படுகின்றது.

இந்த நடவடிக்கையானது மத்திய கிழக்கில் நிலவும் போர் மற்றும் இதர பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் இருப்பதை உணர்த்தியுள்ளது.

ஈரான் விடுத்துள்ள பகிரங்க மரண எச்சரிக்கை !
ஈரான் அரசுக்குச் சொந்தமான முக்கிய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில் , மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள சூழலில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் மரணத்திற்குப் பழிவாங்கக் கோரி ஈரானில் தீவிரப் பிரச்சாரங்கள் நடந்து வரும் வேளையில் இந்த மிரட்டல் வெளியாகியுள்ளது.

மேலும்,ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வ ‘ஹம்ஷஹ்ரி’  நாளிதழ், தனது இணையப் பக்கத்திலும் அச்சுப் பதிப்பிலும் வரைபட தகவல் ஒன்றினை வழங்கியுள்ளது.

“பழிவாங்கல் மிக விரைவில் வருகிறது; இது எங்களது தேசத்தின் விருப்பம், இது நிச்சயம் நிறைவேற்றப்படும்” எனும் எச்சரிக்கை தகவல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மரணப் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முக்கிய ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட 13 உலகத் தலைவர்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளது.

குறித்த தகவலானது உலகில் உள்ளவர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளதுடன், ஈரானின் புதிய உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனி, தனது தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளுக்குப் பிறகு வெளியிட்ட முதல் அதிகாரப்பூர்வ செய்தியில், “இந்தக் குற்றவாளிகள் யாரும் தங்களது படுக்கையில் நிம்மதியாக உயிரை விட முடியாது அவர்கள் தங்களது இறுதி நாட்களைக் கல்லறையில்தான் கழிக்க நேரிடும்” என்ற கருத்தும் தற்போது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளன.

மொஜ்தபா காமெனியின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ஈரான் முழுவதும் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகள் அனைத்தும் “இரத்தப் பழிவாங்கலின் வெள்ளிக்கிழமைகளாக” மாற்றப்பட்டு, அமெரிக்காவிற்கு எதிரான ஜிகாத் (Jihad) முழக்கங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த எச்சரிக்கைகள் வெளியாகியதன் பின்னர் “ஈரான் எங்களது தலைவர்களைக் குறிவைக்க முயன்றால் அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள்” என அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தனது ஆக்ரோஷமான கருத்தினை வெளியிட்டுள்ளதால் வளைகுடாப் பகுதி முழுவதும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

அமெரிக்காவிற்கு பதிலடி வழங்கிய ஈரான் – அமெரிக்க தளங்கள் இருக்கும் நாடுகள் மீது பலத்த தாக்குதல்.
அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து, ஜோர்டான், குவைத் மற்றும் கத்தாரில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

இந்த தாக்குதலின் மூலம், ஒரு பராமரிப்பு மையத்தையும், ஒரு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தையும் அழித்ததாக ஈரான் கூறியுள்ளது.

மேலும், ஓமானில் உள்ள அமெரிக்க கடற்படையின் விநியோகம் மற்றும் எரிபொருள் நிரப்பும் மையத்தையும் ஈரான் குறிவைத்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, ஈரானிலிருந்து வரும் ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து வருவதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

கத்தாரின் உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிவித்தலில், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, மக்கள் தங்கள் வீடுகளிலோ அல்லது பிற பாதுகாப்பான இடங்களிலோ தங்கியிருக்குமாறும், அதிகாரிகளால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ பாதுகாப்பு ஆலோசனைகளைப் பின்பற்றுமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பஹ்ரைனின் உள்துறை அமைச்சகமும், வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறும், அதிகாரிகளால் வெளியிடப்பட்ட பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு அது பொதுமக்களை

வலியுறுத்தியுள்ளது.

மேலும், ஜோர்டானில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தைத் தாக்கியதாகவும், பிரின்ஸ் ஹசன் விமானப்படைத் தளத்தில் உள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தையும், MQ-9 ஆளில்லா விமானத் தளத்தையும் அழித்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளதுடன், அமெரிக்க தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது.