Infrastructure Damage. – tamilnaadi.com

இந்தோனேசிய வெள்ளம், நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,003 ஆக உயர்வு; 218 பேரைக் காணவில்லை!
ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த வாரம் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அச்சோ ஆகிய மாகாணங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,003 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 218 பேர் இன்னும் மாயமாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில் சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இந்தோனேசியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,003 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 218 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கனமழை வெள்ளத்தார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், 200-க்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்கள் மற்றும் 581 கல்வி நிலையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தாய்லாந்துடனான மோதலில் கம்போடியாவில் 7 பேர் பலி: 20,000 பேர் வெளியேற்றம்!
தாய்லாந்துடனான சமீபத்திய எல்லை மோதலில் கம்போடியாவில் 07 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் இன்று (டிசம்பர் 9) தெரிவித்துள்ளனர்.

மோதல்களின் விளைவாக 7 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர். அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக 20,000 பேர் வரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கோயில் உள்ளிட்ட உட்கட்டமைப்புகள் அழிவடைந்துள்ளதுடன், பொதுச் சேவைகளும் சீர்குலைந்துள்ளதாகக் கம்போடிய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மோதலின்போது, கம்போடியப் படைகள் தங்கள் துருப்புக்களைத் தாக்கி வருவதாகவும், மேலும் குண்டுவீச்சு ட்ரோன்கள் மற்றும் காமிகேஸ் ட்ரோன்களைப் பயன்படுத்துவதாகவும் தாய்லாந்து இராணுவத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள ஒரு பாலம் இன்று (நவம்பர் 30) இடிந்து விழுந்துள்ளது.

யக்கல ஆயுர்வேத மருத்துவமனைக்கு அருகில் உள்ள பாலத்தின் நடுப்பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பாலத்தை மீளச் சீரமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.