IndianFisherman – tamilnaadi.com

இராமேஸ்வர மீனவர்களைத் தாக்கிய செய்தி உண்மைக்குப் புறம்பானது!
இலங்கை கடற்படை சில தினங்களுக்கு முன்னர் இராமேஸ்வர மீனவர்களை தாக்கியதாக வெளியான செய்தியானது முற்றிலும் பொய்யானது என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சங்கங்களின் சம்மேளனங்களின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (21) காரைநகர் பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்தின்போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

இந்த செய்தியை யாழ்ப்பாணத்திலுள்ள சில பத்திரிகைகளும் முன்பக்கத்தில் பிரசுரித்துள்ளமை வேதனையளிக்கின்றது.

எமது நாட்டு கடற்படை தாக்கியதாக இந்தியாவிலிருந்து ஒரு செய்தி வந்தவுடன், அதை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் பத்திரிகைகள் உடனடியாக வெளியிடுகின்றன.

ஆனால் எமது போராட்டத்தின் உண்மைகளை வெளியிடுவதில் அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

அந்தவகையில் எமது ஊடகவியலாளர்களிடம் நாம் கோருவது உண்மையான செய்திகளை அறிந்து அதை உண்மைத் தன்மையுடன் வெளியிட வேண்டும் என்பதே.

இதேவேளை நாம் கடந்த 10 வருடங்களாக சட்டவிரோத இந்திய மீன்பிடியாளர்களால் பலகோடி சொத்துக்களையும் பொருளாதார வளங்களையும், இழந்து தவிக்கின்றோம்.

எமது அரசாங்கத்திடமும் கடற்படையினரிடமும் இதை நிறுத்துமாறு கோரி நாம் நாளாந்தம் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

ஆனால் எமது போராட்டத்தின் உண்மை நிலையை இந்திய ஊடகவியலாளர்களுக்கு இங்குள்ள ஊடகவியலானர்கள் எவ்வாறு கொண்டு சேர்கின்றீர்கள் என்பதே கேள்வியாக உள்ளது.

ஆனால் இந்தியாவில் ஒரு உண்மைக்கு புறம்பான செய்தி வெளியடப்பட்டால் அதை உடனடியாக முன்னுரிமை கொடுத்து இங்கு வெளியிடுகின்றீர்கள்.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும், சட்டவிரோத இந்திய மீனவர்களை கைது செய்வதற்கும், கைது செய்யப்பட்டவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி விடுதலை செய்யவேண்டும் என்றும் பறிக்கப்பட்ட படகுகளை அரசுடமையாக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
இந்திய மீனவர்கள் 43 பேரின் விளக்கமறியல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு அருகே கடந்த வருடம் டிசம்பர் 19ஆம் திகதி சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 43 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஊர்காவற்றுறை நீதிமன்றில் இந்த வழக்கு எடுக்கப்பட்ட நிலையில், இவர்களுக்கான விளக்கமறியலை ஜனவரி 27 ஆம் திகதி வரை நீடிக்க ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

#SrilankaNews

ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடுவோம்- மீனவ அமைப்புகள்
இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக தலைநகர் கொழும்பில் போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தயாராக இருக்கிறோம் என வடக்கு மற்றும் தெற்கு மீனவ அமைப்புகள் கூட்டாக தெரிவித்தன.

அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்துடன் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்துடன் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டது.

இது தொடர்பில் இரண்டு மீனவ அமைப்புகளும் கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

அத்துமீறிய இந்திய இழுவைப் படகுகளின் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் காரணமாக வடபகுதி மீனவர்களின் கடல் வளமும் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

2500 இந்திய இழுவைப் படகுகளை தடை செய்து இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் தலைநகர் கொழும்பில் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம்.

அத்துடன் அகில இலங்கை ரீதியாக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பாகவும் எதிர்காலத்தில் ஆக்கப்பூர்வமான தீர்மானங்கள் எட்டப்படும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியவாறு நாம் போராட்டத்தை கைவிட்டிருந்தோம். ஆனால் இந்திய மீனவர்கள் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. வடமராட்சிப் பகுதியில் மீண்டும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் இடம்பெற்றுள்ளது. இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

#SrilankaNews

பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதே டக்ளஸின் வேலை!!
இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வடமாகாண கடற்றொழிலாளர்களின் இணையத்தின் தலைவர் சுப்பிரமணியம் இவ்வாறு கூறியுள்ளார்.

அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் – மாதகல் கடற்கரைக்கு சென்று மீனவர்களை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தியாவின் இழுவைப்படகுகள் தொடர்ச்சியாக ஆக்கிரமித்துள்ளன. ஏறத்தாழ 35 வருடங்கள் எங்களது கடலை வாரிச் செல்கிறார்கள். கடல் வளங்களையும் அழித்து விடுகிறார்கள்.

பொருளாதாரத்தை அழிக்கிறார்கள். அத்துடன் வலைகளையும் அழித்து நாசம் செய்கின்றார்கள். இதனால் பலதரப்பட்ட போராட்டங்களையும் நாம் முன்னெடுத்திருந்தோம். மேலும் பல அறிக்கைகள் கூட பிரமுகர்களுக்குக் கொடுத்திருக்கிறோம். ஆனால் இன்று வரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கவில்லை.

மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, தற்போதைய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்த வருகை தந்து, அதற்கான சரியான தீர்வைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதி வழங்கினார். ஆனால் இப்படி கூறுவதே அவரது வாடிக்கையாக உள்ளது.

கடந்த காலங்களிலும் கடற்றொழில் அமைச்சர் எதுவும் செய்யவில்லை. தற்போதும் எதுவும் செய்யவில்லை. இனிவரப்போகும் காலங்களிலும் அவர் எதனையும் செய்யப்போவதுமில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

முடிவில்லாத இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்!-
அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் – மாதகல் கடற்கரைக்கு சென்று மீனவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர்.

அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே, தலைவர் நிஹால் கலப்பதி, ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

#SrilankaNews

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைக் கண்டித்து சண்டிலிப்பாயில் போராட்டம்!
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக வீதியை மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனமும், மாதகல் பிரதேச கடற்தொழிலாளர்களும் இணைந்து இன்றைய தினம் (07) காலை குறித்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

மாதகல் பிரதேசத்தின் 7 மீனவர் சங்கங்கள் இணைந்து நடைபவனியாக வந்து சண்டிலிப்பாய் பிரதேச செயலக முன்றலில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, குறித்த பகுதிக்கு மானிப்பாய் பொலிசாரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

2500 இந்திய இழுவைமடி தொழிலை நிறுத்தும் வரை போராடுவோம், இந்திய அரசு வடக்கு மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்க கோருகிறோம்.

எமது கடல் வளத்தையும் வாழ்வாதாரத்தையும் , பாதுகாக்க இலங்கை அரசை வலியுறுத்துவோம் போன்ற கோஷங்களை முன்வைத்தே போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதன்போது, மானிப்பாய் பொலிசார் குறித்த இடத்தில் இருந்து போராட்டக்காரர்களை விலகிச்செல்லுமாறும், போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இருப்பினும், எமது பிரதேசத்தில் அரை கிலோமீற்றரில் வந்து அயல் நாட்டவன் மீன்பிடிக்கும் போது, அந்த மீன்பிடி நடவடிக்கையினை தடுக்குமாறு கூறினால், உங்களால் வரமுடியாது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டோர் தமது ஆதங்கக் கருத்தினை வெளியிட்டிருந்தனர்.

மேலும், பொலிஸார் கைது செய்ய முடியுமென்று தெரிவித்த நிலையில், கொதித்தெழுந்த மக்கள் வீதியில் அமர்ந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டமையைத் தொடர்ந்து, மானிப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மக்களுடன் சமரசம் பேச முயன்றும் பயனளிக்கவில்லை.

பின்னர் ஒருவாறாக சமாதானமான மக்கள் பொலிஸ் நிலைய அதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்க, பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவர் குறித்த மக்களுடன் கலந்துரையாடி மகஜர் ஒன்றையும் பெற்றுச்சென்றார்.

சுமார் ஒரு மணி நேரம் குறித்த போராட்டத்தை முன்னெடுத்த பின்னர் , உதவி பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றினைக் கையளித்த பின்னர் , தமது போராட்டத்தினை முடிவுறுத்தினர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் மாதகலைச் சேர்ந்த 7 கடற்றொழில் சங்க மக்கள், யாழ்.மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் தலைவர் அன்னராசா, வடமாகாண கடற்றொழில் சாமச தலைவர் சுப்பிரமணியம், வலிதென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜெபநேசன் , உறுப்பினர்கள் ஜோன் ஜிப்ரிக்கோ , றமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விடுவிக்கப்படாத பகுதிகளை விடுவிக்குக: மக்கள் கோரிக்கை!
இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு இந்தியத் தூதரகத் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – மயிலிட்டித் துறைமுகத்திற்கு இன்று (25) விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், புதிதாக தெரிவு செய்யப்பட்ட கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

அங்கு தரித்து விடப்பட்டுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களின் படகுகளையும் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்,

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி வந்து சட்டவிரோத தொழில் முறைகளைப் பயன்படுத்துகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்கள் எமது கடற்றொழிலாளர்களின் கடல் வளங்களை அழிப்பதுடன் எமது மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.

இதன் காரணமாகவே, அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகி்றன.

இதுதொடர்பாக கலந்துரையாடுவதற்கு இந்தியத் தூதரகத் தரப்புக்கள் என்னுடன் தாடர்பு கொண்டுள்ளன. கொழும்பு திரும்பிய பின்னர் கலந்துரையாடுவதற்கு சம்மதம் தெரித்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

அதேவேளை, விடுவிக்கப்படாத மயிலிட்டி வடக்கு, மயிலிட்டி கிழக்கு, மயிலிட்டி தெற்கு, தையிட்டி தெற்கு, பலாலி, மற்றும் வளலாய் போன்ற இடங்களை விடுவித்துத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை வைத்த நிலையில், கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

குறித்த விடயம் தொடர்பாக ஏற்கனவே ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடியுள்ளதாகவும், எதிர்வரும் தை மாதம் தொடக்கம் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

#SrilankaNews

முனைப்பகுதி மீனவர்களின் 4 வலைகள் அறுத்து சேதம்!!!
யாழ்ப்பாணம் – வடமராட்சி – பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்றைய தினமும் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முனைப்பகுதி மீனவர்களின் 4 வலைகள் அறுத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன் ஒரு மீனவரது படகு உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் இழுவை படகிலிருந்து கற்கள், பொல்லுகள் ஈயக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நேற்றைய தினம் இலங்கை கடற்படையினரால் 6 படகுகளும் 43 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்ட நிலையிலும் கூட பருத்தித்துறை பகுதியில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடித்து சேதங்களை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

#SrilankaNews

இந்திய மீனவர்கள் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுகின்றனர்!!
யாழ். மாவட்டத்தில் அண்மைய நாட்களாக அத்துமீறிய இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால், வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரமும், தொழிலும் தொடர்ந்தும் பாதிப்படைந்துள்ளது.

இவ்வாறு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஊடக சந்திப்பு இன்றையதினம் (20) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தீவகப் பகுதிகளில், அத்துமீறிய இரட்டை இழுவை மடிப்படகுகளைப் பயன்படுத்தி, இந்திய மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினர் இந்திய எல்லைக்குள் வந்து கைது செய்கின்றனர் என உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுகின்றனர்.

இந்திய மக்களுக்கு பொய்யான தகவல்களை இந்திய கடற்றொழிலாளர்கள் கூறுகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews