Indian fishermen – tamilnaadi.com

இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் சிறைக்கலவரங்கள் – இந்திய உள்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள தகவல்.
இந்திய உள்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், 2026 ஜூலை மாத இறுதிக்குள் 27 தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கையின் காவலில் உள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம், மக்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளதுடன், தமிழக கடற்றொழிலாளர்களுக்குச் சொந்தமான 249 படகுகள் இலங்கை பாதுகாப்புப் படையினரின் காவலில் உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அத்துடன், இந்திய கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்குத் தனது அரசு முதன்மை முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கடற்றொழிலாளர்களையும் கடற்றொழில் படகுகளையும் உடனடியாக விடுவிப்பது மற்றும் திருப்பி அனுப்புவது உள்ளிட்ட இந்தப் பிரச்சினைகள் குறித்து, இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு வழிமுறைகள், இராஜதந்திர வழிகள் மற்றும் பல்வேறு உத்தியோகப்பூர்வ மற்றும் உயர் மட்ட கலந்துரையாடல்கள் மூலம் தொடர்ந்து விவாதித்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2021ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கை 1,554 ஆகும். இந்த கடற்றொழிலாளர்களில் சுமார் பத்து பேர் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

வட கடல் ரோந்து: இந்திய மீனவர்கள் உட்பட 35 பேர் கைது – 4 படகுகள் பறிமுதல்!
வட பகுதி கடலில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில், சட்டவிரோத மீன்பிடி மற்றும் சட்டவிரோதப் பயணம் தொடர்பான குற்றங்களுக்காக 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்தியக் கடற்றொழிலாளர்கள் மற்றும் சட்டவிரோதப் பயணத்தை மேற்கொண்டவர்கள் உட்பட மொத்தமாக 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கையின் போது 3 இந்தியப் படகுகள் உள்ளிட்ட நான்கு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சட்டவிரோதப் பயணத்தை மேற்கொண்டதாகக் கூறப்படும் வர்த்தகர் உள்ளிட்ட குழுவினர் இந்த 35 பேருக்குள் உள்ளடங்குகின்றனரா என்பது தொடர்பில் இன்னமும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் விளக்கமறியலில்
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து படகு ஒன்றில் கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 07 இராமேஸ்வர கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று (01.07.2025) மாலை உத்தரவிட்டுள்ளார்.

இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று (30) கடற்றொழில் ஈடுபட சென்ற ஏழு கடற்றொழிலாளர்கள் நேற்று திங்கள் இரவு எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களை இன்று (1) மதியம் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் இன்று (01.07.2025) மாலை குறித்த கடற்றொழிலாளர்களை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தியுள்ளனர்.

இதன்போது, விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 07 கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரின் விசேட தேடுதல் நடவடிக்கை! எட்டு இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
இலங்கைக் கடற்படையினர், இன்று அதிகாலை மன்னாருக்கு வடக்கே இலங்கைக் கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 8 இந்திய கடற்றொழிலாளர்களை இந்திய மீன்பிடிப் படகு ஒன்றுடன் கைது செய்துள்ளனர்.

நாட்டின் கடற்பரப்பை மீறி வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன்படி, இன்று வடமத்திய கடற்படை கட்டளை மன்னாருக்கு வடக்கே இலங்கைக் கடற்பரப்பில் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் பலவற்றை அவதானித்ததோடு, அந்த மீன்பிடிப் படகுகளை இலங்கையில் இருந்து அகற்றும் விசேட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.இலங்கை உணவகம்

அங்கு இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இந்திய மீன்பிடிப் படகு ஒன்று இலங்கைக் கடற்படையினரால் முறையாகச் சோதனை செய்யப்பட்டதுடன், எல்லை விதிகளை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 8 இந்திய கடற்றொழிலாளர்களை அந்த மீன்பிடி படகுடன் இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரிடம் சிக்கிய இந்திய மீன்பிடி படகும், அதில் இருந்த 8 இந்திய மீனவர்களும் தலைமன்னார் இறங்குத்துறைக்குக் கொண்டு வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் விரட்டியடிக்கப்படுவதாக செய்தி.. : மறுக்கும் இலங்கை கடற்படை இலங்கை விமான பயணம்
தமிழகம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழக கடற்றொழிலாளர்களை கோடிட்டு தமிழக ஊடகங்கள் இதனை செய்தியாக்கி வருகின்றன.

பருவகால மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள், கடலில் மீன்பிடிக்கச் சென்றபோதே, அவர்கள் தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவுக்கும் தனுஸ்கோடிக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் தம்மை விரட்டியடித்ததாக தமிழக கடற்றொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.இலங்கை விமான பயணம்

எனினும் இலங்கையின் கடற்படையினர் இந்தக்குற்றச்சாட்டை தொடர்ந்தும் மறுத்து வருகின்றனர்.

கச்சதீவு விவகாரம் : தமிழக ஆளுநர் முன்வைத்த குற்றச்சாட்டு
கச்சதீவு விவகாரம் : தமிழக ஆளுநர் முன்வைத்த குற்றச்சாட்டு

கச்சதீவில் இந்திய கடற்றொழிலாளர்கள் உரிமை பறிக்கப்பட்டதற்கு அப்போதைய மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இன்று நான் ராமேஸ்வரம் சென்றிருந்தபோது துன்பத்தில் உழலும் கடற்றொழில் சமுதாய சகோதரர்களையும் சகோதரிகளையும் சந்தித்தேன்.

அவர்களின் நிலையை பார்த்து மிகுந்த இரக்கம் கொள்கிறேன்.

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார கவலைகளுக்கு 1974ஆம் ஆண்டு செய்யப்பட்ட அநியாய ஒப்பந்தமே காரணம்.

கச்சதீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை பறிக்கப்பட்டதற்கும் அப்போதைய மத்திய, மாநில அரசுகளே காரணம்.

அன்றிலிருந்து இன்று வரை கடற்றொழிலாளர் சமுதாயம் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகிறது.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயற்பட்டு, இலங்கை அரசால் கைது செய்யப்படும் கடற்றொழிலாளர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மத்திய அரசை குறை கூறுவதற்கு பதிலாக, தமிழக அரசு ஆக்கபூர்வமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்,” என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினரின் கைதுகளுக்கு எதிராக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படையினரின் கைதுகளுக்கு எதிராக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் கடற்படையினர் (Sri Lanka Navy) தொடர்ந்தும் இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்வதை எதிர்த்தும், மத்திய அரசு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியும், இந்திய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்தப் போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமை தாங்கினர்.

அத்துடன், ஏனைய எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

“தமிழ் கடற்றொழிலாளர்களுக்கு நீதி, “எங்கள் கடற்றொழிலாளர்களை மீண்டும் அழைத்து வாருங்கள்”, “இனி கைதுகள் வேண்டாம்”, “தமிழ்நாடு கடற்றொழிலாளர்களும் இந்தியர்களே” போன்ற வாசகங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏந்தியிருந்தனர்.

இந்தநிலையி;ல் தமிழ் கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் ஒரு தேசியப் பிரச்சினை என்றும், அவர்கள் இலங்கையால் தவறாக நடத்தப்படும் இந்தியர்கள் என்றும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா இதன்போது கருத்துரைத்துள்ளார்.

கைதுகள் காரணமாக இந்திய கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல பயப்படுவதாகவும், இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின் இந்த விவகாரம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு பலமுறை கடிதம் எழுதி, நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படை தமிழக கடற்றொழிலாளர்களை கைது செய்து துன்புறுத்தி வருகிறது. தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த கிட்டத்தட்ட 97 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். கடற்பரப்பில் நடந்த துப்பாக்கிச் சூடு – இலங்கை அரசில் கடும் சீற்றத்தில் இந்தியா
யாழ். (Jaffna) கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் (New Delhi) உள்ள பதில்  இலங்கை உயர்ஸ்தானிகரை அழைத்து கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகமும் இந்த விடயம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். கடற்பரப்பில் நடந்த துப்பாக்கிச் சூடு – இலங்கை அரசில் கடும் சீற்றத்தில் இந்தியா | Ministry Of External Affairs India Warns Sl Army

அத்துடன் வாழ்வாதாரக் கவலைகளைக் கருத்திற் கொண்டு கடற்றொழிலாளர்கள் பிரச்சினையை மனிதாபிமான ரீதியாக கையாள வேண்டும் என இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும், எந்த சந்தர்ப்பத்திலும் பலத்தைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்க விடயமல்ல எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையேயான புரிதல் கண்டிப்பான பின்பற்றப்பட வேண்டும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களின் நிலைமை ஆபத்தாக இல்லை என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார். அவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இந்திய கடற்றொழிலாளர்களின் ஆக்ரோஷமான செயற்பாடுகளாலேயே துப்பாக்கி இயங்கியது என கடற்படை விளக்கமளித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த 13 இந்திய கடற்றொழிலாளர்கள் மீன்பிடிப் படகொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கடற்றொழிலாளர்களை கைது செய்வதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்த போது, கடற்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் இரு கடற்றொழிலாளர்கள் காயமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தமது படகிற்குள் கடற்படையினர் ஏறுவதை தடுப்பதற்காக, அவர்களது கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கடும் எதிர்ப்பினை வெளியிட்டதோடு குறித்த இந்திய கடற்றொழிலாளர்கள் மிகவும் ஆக்ரோஷமாகவும் ஒழுக்கமின்றியும் நடந்து கொண்டனர்.

கடற்படையினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், கடற்படை வீரர் ஒருவரிடமிருந்த துப்பாக்கியையும் அவர்கள் பறிக்க முயற்சித்துள்ளனர்.

இதன்போது, அந்த துப்பாக்கி இயங்கியதாலேயே இரு கடற்றொழிலாளர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

தொடர்ந்து கைதாகும் இந்திய மீனவர்கள் – இலங்கை அரசு எடுக்கும் நடவடிக்கை என்ன?
இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு நடவடிக்கையின் விளைவாக, மூன்று இந்திய மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன, மேலும் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்ததற்காக 34 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் ஜனவரி 25 ஆம் திகதி பிற்பகுதியிலும் நேற்று (26) அதிகாலையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு மீன்பிடி படகுகளின் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுக்க, உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, கடற்படை மற்றும் கடலோர காவல்படை இலங்கை கடல் பகுதியில் வழக்கமான ரோந்து மற்றும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

கடற்படையின் கூற்றுப்படி, வட மத்திய கடற்படை கட்டளை இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீன்பிடி படகுகள் குழுவைக் கண்டது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, வடக்கு கடற்படை கட்டளை மற்றும் கடலோர காவல்படை தங்கள் விரைவுத் தாக்குதல் படகையும், வட மத்திய கடற்படை கட்டளை அதன் கரையோர ரோந்து படகையும் அனுப்பி தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் மீன்பிடித்த இந்திய மீன்பிடி படகுகளை விரட்டியது.

இந்த நடவடிக்கைகளின் விளைவாக 03 இந்திய மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன, மேலும் இலங்கை கடல் பகுதியில் தொடர்ந்து தங்கியிருந்த 34 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் (03) இந்திய மீனவர்களுடன் (34) இரணைதீவுக்கு கொண்டு வரப்பட்டு, அடுத்த சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்வள உதவி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறீதரன் எம்.பிக்கு வடக்கில் இருந்து விடுக்கப்பட்ட சவால்
சிறீதரன் எம்.பிக்கு வடக்கில் இருந்து விடுக்கப்பட்ட சவால்

சிறீதரன் எம்.பி (S. Shritharan) முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி கடற்றொழிலாளர் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உபதலைவர் பிரான்சிஸ் ரட்ணகுமார் சவால் விடுத்துள்ளார்.

சம்மேளனத்தின் யாழ்ப்பாண (Jaffna) அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது எமது கடற்தொழில் அமைச்சராக உள்ள சந்திரசேகரன் அவர்களுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுடன் கதைப்பதற்கு நல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தும் அவர்கள் அதனை சரியாக பயன்படுத்தவில்லை.

அண்மையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அங்கு இருந்த போதே இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை முதலமைச்சரிடம் எடுத்துக் கூறாமல் இங்கு வந்தபின்னர், முதலமைச்சருடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தருமாறு தான் கேட்டுள்ளதாகவும், கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை கதைக்கப்போவதாகவும் கூறுகின்றார்.

இதெல்லாம் பகட்டுக்கும், எதிர்காலத்தில் கடற்றொழிலாளர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவும் கூறுகின்றார். இந்தியாவில் தேர்தல் நெருங்குகின்றது.

தேர்தல் காலத்தில் உங்களுக்கு நேரம் ஒதுக்கி தர மாட்டார்கள். இயலும் என்றால் நீங்கள் நேரத்தினை பெற்று நமது கடற்றொழிலாளர்களின் பிரச்சினை குறித்து பேசித் தீருங்கள், அதற்கு பின்னர் நாங்கள் உங்களை வரவேற்கின்றோம்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கதைப்பதற்கு, கடந்த காலத்தில் கடற்தொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவிடமும் (Douglas Devananda) கோரிக்கை முன்வைத்தோம் இதன்போது அவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரிடம் இது குறித்து தெரிவித்தார்.

இருப்பினும் எமக்கான நேரம் வழங்கப்படவில்லை. அப்படி எமக்கு நேரம் வழங்கப்பட்டிருந்தால் நாங்கள் எமது பிரச்சினைகளை நேரடியாகவே எடுத்துக்கூறி இருப்போம் என உபதலைவர் பிரான்சிஸ் ரட்ணகுமார் தெரிவித்துள்ளார்.